31.10.11

தூதர் வழியில் பெருநாள் திடல் தொழுகை.

இறைவன் அருளால் இம்முறையும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையினால்  ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்
ஈச்சம்பிடிய பொது மைதானம்
தர்கா மாவத்தை, சிலாபம் 

நேரம்
பெருநாளன்று காலை 6: 30 மணிக்கு

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். புகாரி 956

இரு பெருநாட்களிலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். புகாரி 351, முஸ்லிம் 1616

சிலாபம் மாநகரில் தூதர் வழியில் நடைபெரும் ஒரே பெருநாள் தொழுகையை தூய முறையில் நிறைவேற்றிட குடும்பத்துடன் அழைக்கிறது.
  
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)
சிலாபம் கிளை
தொடர்புக்கு
0773073237, 0773402941, 0773580844

Read more...

30.10.11

SLTJ சிலாபம் கிளையின் கூட்டுக் குர்பானித் திட்டத்தில் நீங்களும் இணையுங்கள்.

வழமை போல் இம்முறையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சிலாபம் கிளை சார்பாக கூட்டுக் குர்பானி வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டாக குர்பானியை வலங்க விரும்புபவர்கள் சகோதரர் சிராஜுன் முனீர் (0777558159) அல்லது சகோதரர் அப்துல் மஜீத் ( 0773402941) அவர்களை தொடர்பு கொள்ளவும்.
ஒரு பங்கின் விலை  ரூபா 7000/=
(கூட்டுக் குர்பானி பற்றி மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள நோட்டிசைப் பார்வையிடவும்.)
படத்தில் க்லிக் செய்து பார்க்வும்

Read more...

பன்றித் தோல் வியாபாரம் கூடுமா? (Face book விவாதம்) Part 2


பன்றித் தோல் வியாபாரம் சம்பந்தமாக எமது பிரச்சாரகர் சகோதரர் ரஸ்மி அவர்களுக்கும் அஹ்மத் ஹூசைன் என்ற ஸலபிக்கும் இடையில் நடந்த எழுத்து விவாதம்.

Ahamed Hussain 
முதலில் கீழ் உள்ள ஹதீசுக்கு என்ன விளக்கம் என்று கூறுங்கள்..என்னிடம் பல அறிஞரின் விளக்கம் உள்ளது,,.. அதையும் எழுதிய அனைத்து கம்மேண்டிஸ்கும் பதில் தருகிறேன்..

The Messenger (peace and blessings of Allaah be upon him) taught us an important principle when he said: “When Allaah forbids a thing, He (also) forbids its price.” Narrated by Abu Dawood, 3488; classed as saheeh by Shaykh al-Albaani in Ghaayat al-Maraam, 318.

Read more...

28.10.11

பன்றித் தோல் வியாபாரம் கூடுமா? (Face book விவாதம்) Part 1

பன்றித் தோல் வியாபாரம் சம்பந்தமாக எமது பிரச்சாரகர் சகோதரர் ரஸ்மி அவர்களுக்கும் அஹ்மத் ஹூசைன் என்ற ஸலபிக்கும் இடையில் நடந்த எழுத்து விவாதம்.

பன்றி தோல் வியாபாரம் கூடும் மற்றும் இது ஹலால் என்று இவர்கள் சொல்லுகிறார்கள்.
அறிவாக சிந்திக்கிறோம் என்று முட்டாள் தனமா அவர்களே பதில் தந்து மக்களை வழிகேடுப்பதை இதில் காணலாம். பன்றி வாங்குவது மற்றும் விற்பது ஹராம் என்று பி ஜெயே ஒரு வீடியோ கிளிப்பில் சொல்லி இருக்கிறார். இப்போ இவர்களுக்கு பன்றி தோல் ஹலாலா ஆகிவிட்டது. என்ன கொடுமை இது..

Read more...

26.10.11

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்



ஜும்ஆ சொற்பொழிவு
நாள்: 28.10.2011நேரம்: மதியம் 12: 25 மணிக்கு
உரையாற்றுபவர்சகோதரர் ஜவாஹிர் ஜமாலி 
தலைப்பு: “சத்தியம் வேறு அசத்தியம்  வேறு” 
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)



பெண்கள் பயான்
நாள்: 30.10.2011 
நேரம்: மாலை 4.00 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் ரியாஸ் M.I.Sc
தலைப்பு: “தனித்து நிற்பதே தவ்ஹீத் வாதியின் பண்பு.
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)

மாணவர் நிகழ்ச்சி 
நாள் : 30.10.2011
நேரம்: மக்ரிப் தொழுகையின் பின் 
தலைப்பு: இறைவன்  எங்கே இருக்கிறான்.   (கொள்கை விளக்கம் தொடர்) 
உரையாற்றுபவர்சகோதரர் சகோதரர் ரியாஸ் M.I.Sc
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)

அனைவரும் கலந்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்  
சிலாபம் கிளை

Read more...

22.10.11

அர்ஹம் மவ்லவி உடனான விவாத ஒப்பந்தத்தின் வீடியோ காட்சிகள்

அர்ஹம் மவ்லவியுடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக கடந்த 01.10.2011 அன்று மாபோலையில் வைத்து 2 தலைப்புகளில் விவாத ஒப்பந்தம் போடப்பட்டது.  அந்த ஒப்பந்தத்தின் நகல் பிரதிகளை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.
விவாத ஒப்பந்தத்தின் வீடியோ பதிவையும் இங்கு வெளியிடுகிறோம்.

Read more...

அருவமானவனா இறைவன்?

அல்லாஹ் உருவமற்றவனா?

பொதுவாகவே உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் ஒரு வழக்கம் உண்டு. ஒரு வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்துவது, அதே வார்த்தையை இலக்கியமாக பயன்படுத்துவது.
உதாரணமாக, அதிகமாகப் பேசுபவர்களைப் பார்த்து, ‘அவருக்கு வாய் நீளம்என்று கூறுவார்கள். வாய் நீளம் என்றால் வாயின் அளவு நீளமாக இருக்கும் என்பது அதன் நேரடிப் பொருள். என்றாலும் இந்த இடத்தில் அந்த அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அவர் அதிகம் பேசக் கூடியவர் என்ற கருத்தில் இந்த சொற்றொடர் பயன்படுத்தப் படுகின்றது. இவ்வாறு பயன்படுத்தப்படுவது எல்லா மொழிகளுக்கும் பொதுவான, உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும்.

Read more...

18.10.11

பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!

பணமாக பாத்திரமாக நகையாக நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.

ஆனால் உணவாக வாங்குவது அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது உணரப்படுவதில்லை.அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படுவதில்லை. இந்த விஷயத்தில் தவ்ஹீதுவாதிகளும் தடம் புரண்டு விடுகின்றனர். பெண் வீட்டு விருந்துக்குப் பக்காவாக வக்காலத்து வாங்குகின்றனர்.

Read more...

மானம் காக்க மார்க்கம் சொல்லும் ஆடை முறை.

ஆக்கம் S.H.R. ரஸ்மி
நிர்வாணத்தையே ஆடையாக அணிந்து அதையே நாகரிகம் என்று நினைக்கும் இந்தக் காலத்தில் இஸ்லாம் கூறும் ஆடை என்ற தலைப்பில் பேசுவது மிகவும் அவசியமானதே. மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஆடையும் ஒன்று என்று அறிவில்லா மக்கள் கூட அறிந்துவைத்துள்ள நிலையில் ஆடையைப்பற்றி அறிவுலகுக்குக் கூறும் நிலை பரிதாபத்துக்குரியதே.ஆடையின் வாடையே இல்லாமல் ஆடை விளம்பரங்களுக்கு வரும் அரைகுறை விபச்சாரிகளை மூளையைக் கழற்றி மூலையில் வைத்துவிட்டு ரசிக்கும் மூடர்களை என்னவென்பது?ஆடைக் குறைப்பில் ஆத்ம திருப்தியடையும் அசிங்கங்களை அரங்கேற்றும் அலைவரிசைகள் அந்தரங்க உறுப்பில் அறிவை அடகுவைத்துள்ள நிலை கோமாளித்தனமானது. நடித்துக் காட்டுவதற்கும் காட்டி நடிப்பதற்கும் வித்தியாசம் தெரியாத சினிமா உலகம்தான் ஆடைச் சீரழிவுக்கு அத்திவாரம் இட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.உறுப்பை வெளிப்படுத்துவதில் உள்ள அக்கறையில் ஒருவீதத்தைக் கூட உண்மையை வெளிப்படுத்துவதில் ஊடகங்கள் காட்டவில்லை என்பது ஊறறிந்த உண்மை.

Read more...

13.10.11

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்

ஜும்ஆ சொற்பொழிவு
நாள்: 14.10.2011
உரையாற்றுபவர்:
சகோதரர் ஹிஷாம் M.I.Sc
தலைப்பு: “அல்லாஹ் உன்னை விரும்ப வேண்டுமா?”
இடம்: 
அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)

பெண்கள் பயான்
நாள்: 16.10.2011 
நேரம்: மாலை 4.30 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் ஸப்வான் D.I.Sc
தலைப்பு: “குர்ஆன் கூறும் தீய பன்புகள்
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)

மாணவர் நிகழ்ச்சி 
நாள் : 16.10.2011
நேரம்: மக்ரிப் தொழுகையின் பின் 
தலைப்பு: இறைவனை நம்புதல் (கொள்கை விளக்கம் தொடர்)
உரையாற்றுபவர்: சகோதரர் சதாத்
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)


அனைவரும் கலந்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்  
சிலாபம் கிளை

Read more...

12.10.11

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் தற்காலிக நிர்வாகம் களைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா  தவ்ஹீத்  ஜமாஅத்  சிலாபம் கிளையில் 6 மாதத்திற்கு நியமிக்கப் பட்டிருந்த தற்காலிக நிர்வாகம்   இன்று  (11.10.2011)  களைக்கப்பட்டு உத்தியோகபூர்வமான  புதிய  நிர்வாகம்  தெரிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பழைய நிர்வாகிகள், கொள்கை வாதிகள் மற்றும் தாயிகள் உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டனர்.




தெரிவு செய்யப் பட்ட நிர்வாகக் குழு
தலைவர்:  M.R.M. பவ்சாத்
செயலாளர்:  M.J.M.S. சதாத்
பொருளாளர்:  S.A. சிராஜுன்
துனைத் தலைவர்:  A.R.A. மஜீத்
துனைச் செயலாளர்:  U.F.M. பாதிஹ்

ஆலோசகர்கள்
M.S.M. சுக்ரி
M. பஸீஹு தீன்
A.L.M. சத்தார்

கிளை தாயிகள்
S.H.R. ரஸ்மி
M.T.M. பர்ஸான்

உறுப்பினர்கள்
N.M. ரமீஸ்
M.H.M. ஹாரிஸ்
K.M. நஜீம்
W.M. அஜ்மீர்
H.M. அஸ்வர்
M.H. நிஸ்மி
M.M. ரஃபீக்
U.F. பாதிஹ்
M.J.M. பாசில்
M.F.M. முஜாஹிதீன்
J.I. மஸ்ஊத்


குறிப்பு:
உறுப்பினர்களாக எம்மோடு சேர்ந்து பிரச்சாரம் (தஃவா) செய்ய விரும்பவோர் தலைவர் அல்லது செயலாளரைத் தொடர்பு கொள்ளவும்.

                                                                                                                       இப்படிக்கு 
                                                                                                                      M.J.M.S. சதாத் 
                                                                                      (செயலாளர், S.L.T.J சிலாபம் கிளை)

Read more...

6.10.11

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்

ஜும்ஆ சொற்பொழிவு


நாள்: 07.10.2011
உரையாற்றுபவர்:
சகோதரர் ஃபர்ளீன் M.I.Sc
தலைப்பு: 
இடம்: 
அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)

பெண்கள் பயான்

நாள்: 09.10.2011 
நேரம்: மாலை 4.30 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் ஃபர்ளீன் M.I.Sc
தலைப்பு:
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)

மாணவர் நிகழ்ச்சி 
நாள் : 09.10.2011
நேரம்: மக்ரிப் தொழுகையின் பின் 
தலைப்பு: இறைவனை நம்புதல் (கொள்கை விளக்கம் தொடர்)

உரையாற்றுபவர்: சகோதரர் ஃபர்ளீன் M.I.Sc
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)

நிர்வாக ஆலோசனைக் கூட்டம்

நாள் : 09.10.2011
நேரம்: இஷா தொழுகையின் பின் 
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)
அனைவரும் கலந்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்  
சிலாபம் கிளை


Read more...

5.10.11

SLTJ சார்பாக கலாவெவயில் மாபெரும் இரத்தான முகாம்

அனுராதபுர மாவட்டத்தின் மிகப் பெரிய முஸ்லீம் கிராமமாகிய கலாவெவயில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக வரலாற்றில் முதன் முதலாக எதிர்வரும் 26ம் தேதி மாபெரும் இரத்தான முகாம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கலாவெவ, நேகம, ஹோராப்பொல ஆகிய மூன்று கிளைகள் ஒன்றினைந்து செய்யும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரத்தம் வழங்கி மனித உயிர் காக்கும் உன்னத பணியில் பங்கெடுக்குமாறு அனைவரையும் அன்பாய் அழைக்கிறது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைமையகம்.

Read more...

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP