21.2.12

கொடூரமாக கொல்லப்பட்ட சஹாபாக்கள்

மலேசியாவிலிருந்து யாஸர் அரபாத் D.I.Sc

உறுதியாக இணைக்கப்பட்ட கட்டடம் போன்று அணிவகுத்து தன் பாதையில் போரிடுவோரை அல்லாஹ் விரும்புகிறான்.    அல் குர்ஆன் 61:4

என்ற வசனத்திற்கு தகுதியானவர்களாக பல போர்க்களங்களை சந்தித்து  சஹாபாக்கள் தியாகம் செய்ததை வரலாறுகள் மூலம் அறிந்திருக்கிறோம். அந்த போர்க்களங்களில் சஹாபாக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் எப்படியெல்லாம் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்பதை அறியாமல் இருக்கிறோம். அவர்கள் செய்த தியாகத்தின் மூலம் நாமும் மார்கத்திற்காக தியாகம் செய்ய வேண்டும் என்கிற படிப்பினை பெறுவதற்காக கொடூரமாக கொல்லப்பட்ட சஹாபாக்கள் என்ற தலைப்பின் கீழ் தகவல்களை தருகிறோம்.

அடையாளம் தெரியாமல் கொல்லப்பட்ட அனஸ் இப்னு நள்ர் (ரலி ):
 அனஸ் (ர-) அவர்கள் கூறியதாவது:
என் தந்தையின் சகோதரர் அனஸ் பின் நள்ர் (ர-) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்று விட்டார். அவர் (திரும்பி வந்தவுடன்) ""அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணை வைப்பவர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை;
இணைவைப்பவர்களுக்கெதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்திருந்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான். பின்பு உஹுதுப் போரின் போது முஸ்-ம்கள் தோல்வி யுற்ற நேரத்தில் அவர், ""இறைவா! என் தோழர்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பவர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்'' என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) முன்னேறிச் சென்றார். சஅத் பின் முஆத் (ர-) அவர்கள் அவருக்கெதிரில் வரக் (கண்டு), ""சஅத் பின் முஆத் அவர்களே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். என் தந்தை நள்ருடைய இறைவன் மீது சத்தியமாக! நான் சொர்க்கத்தின் வாடையை உஹுது மலையி-ருந்து பெறுகிறேன்'' என்று கூறினார். சஅத்
(ர-) அவர்கள் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு, ""அவர் செய்த (வீராவேசமான) போரை வர்ணிக்க என்னால் முடியவில்லை, அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினார். நாங்கள் அவர் உட-ல் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கண்டோம். மேலும், இணைவைப்பவர்கள் அவரது உடல் உறுப்புகளைச் சிதைத்து விட்டிருந்த நிலையில் அவர் கொல்லப் பட்டிருக்கக் கண்டோம். அவருடைய சகோதரியைத் தவிர வேறெவரும் அவரை (இன்னாரென்று) அறிந்து கொள்ள முடியவில்லை; அவரது சகோதரி கூட அவரது விரல்(நுனி)களை வைத்துத் தான் அவரை அடையாளம் காண முடிந்தது.
""அல்லாஹ்விடம் தாம் கொடுத்த உறுதிமொழியை மெய்ப்படுத்தி விட்டவர்களும் இறைநம்பிக்கையாளர் களிடையே  உள்ளனர்...'' என்கிற (33:23) இறைவசனம் இவர் விஷயத்திலும் இவரைப் போன்ற மற்ற உயிர்த் தியாகிகள் விஷயத்திலும் தான் அருளப்பட்டது என்றே நாங்கள் கருதி வந்தோம்.
                                                                                   நூல்: புகாரி 2805

இரத்தம் வழிந்தோடி இறந்த சஅத் பின் முஆத் (ரலி):  
  ஆயிஷா (ர-) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின் போது சஅத் பின் முஆத் (ர-) அவர்கள் தாக்கப்பட்டார்கள். அன்னாரது கை நரம்பில் குறைஷிகளில் ஒருவனான ஹிப்பான் பின் அரிஃகா என்றழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி) விட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை அருகி-ருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-லேயே (அவருக்குக்) கூடார மொன்றை அமைத்தார்கள். அகழ்ப் போரை முடித்துக் கொண்டு வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டுக் குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது தலையி-ருந்த புழுதியைத் தட்டிய வண்ணம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ""நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுதத்தைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கி (படை நடத்தி)ச் செல்லுங்கள்'' என்று சொன்னார்கள். அதற்கு ""எங்கே?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது "பனூ குறைழா' குலத்தினர் (வசிப்பிடம்) நோக்கி ஜிப்ரீல் (அலை) அவர்கள் சைகை செய்தார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ குறைழா நோக்கிச் சென்றார்கள். (பல நாள் முற்றுகைக்குப் பின்னர்) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்புக்கு இறங்கி வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், தீர்ப்பை சஅத் பின் முஆத் (ர-) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். சஅத் (ர-) அவர்கள், ""பனூ குறைழாக்களில் போர்புரியும் வ-மை கொண்டவர்கள் கொல்லப்பட வேண்டும்; குழந்தைகளும் பெண்களும் கைது செய்யப்பட வேண்டும்; அவர்களின் சொத்துகள் பங்கிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன்'' என்று கூறினார்கள்.
(காயப்படுத்தப்பட்டு இரத்தம் வழிந் தோடிக் கொண்டிருந்த சமயம்) சஅத் (ர-) அவர்கள், ""இறைவா! உன்னுடைய தூதரை நம்பாமல் அவர்களை (ஊரை விட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர்புரிவதே மற்ற எதையும் விட   எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய். இறைவா! எங்களுக்கும் (குறைஷி களான) அவர்களுக்கும் இடையிலான போரை நீ (இத்துடன்) முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாய் என்று நான் எண்ணுகிறேன். குறைஷிகளுடனான போர் ஏதேனும் மீதி யிருந்தால் அதற்காக என்னை உயிருடன் இருக்கச் செய். நான் உன் வழியில்  போர் புரிவேன்.  போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் (காயும் நிலையில் இருக்கும் எனது காயத்தை) மீண்டும் (இரத்தம்) கொப்பளிக்கச் செய்து அதிலேயே எனக்கு மரணத்தை அளித்துவிடு'' என்று பிரார்த்தித் தார்கள். அன்னாரது நெஞ்சுப் பகுதியி-ருந்து (இரத்தம்) பீறிட்டது. (அவர்களது கூடாரத் திற்கு அருகில்) கூடாரம் அமைத்திருந்த "பனூ ஃகிபார்' குலத்தாருக்கு சஅத் அவர்களுடைய கூடாரத்தி-ருந்து தங்களை நோக்கி வழிந்தோடி வரும் இரத்தம் தான் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது மக்கள், ""கூடார வாசிகளே! உங்கள் தரப்பி-ருந்து எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதே, இது என்ன? என்று கேட்டுக் கொண்டு, அங்கே பார்த்த போது காயத்தி-ருந்து இரத்தம் வழிய "சஅத்' (ர-) அவர்கள் இருந்தார்கள். அந்தக் காயத்தினாலேயே சஅத் (ர-) அவர்கள் இறந்தார்கள். அல்லாஹ் அன்னாரைக் குறித்து திருப்தி கொள்வானாக! நூல்: புகாரி 4122

ஐம்பது காயங்களுடன் கொல்லப்பட்ட ஜஅஃபர் (ரலி):
இப்னு உமர் (ர-) அவர்கள் கூறியதாவது:
மூத்தா போரின் போது நான் ஜஅஃபர் (ர-) அவர்கள் கொல்லப்பட்டு (விழுந்து) கிடக்க, அவர்களருகே நின்று (அவர்கள் அடைந்திருந்த) ஈட்டிக் காயங்களும் வாட் களின் காயங்களுமாக ஐம்பது காயங்களை எண்ணினேன். அவற்றில் ஒன்று கூட அவர் களுடைய முதுகில் (ஏற்பட்ட காயமாக) இருக்கவில்லை. (அனைத்தும் விழுப்புண் களாகவே இருந்தன.)                       நூல்: புகாரி 4260 

வஞ்சம் வைத்து தாக்கப்பட்ட ஹம்ஸா (ரலி)
ஜஅஃபர் பின் அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹம்ஸô (ர-) அவர்கள் அவன் மீது (பாய்ந்து) கடுமையாகத் தாக்கினார்கள். அவன் கழிந்து போய் விட்ட நேற்றைய தினம் போல் (மடிந்தவனாக) ஆகி விட்டான். நான் ஹம்ஸô (அவர்களைக் கொல்லத் தருணம் எதிர்பார்த்து) அவர்களுக்காக ஒரு பாறைக்கு அடியில் ஒளிந்து கொண்டேன். ஹம்ஸô அவர்கள் என்னை (க்கவனிக்காமல்) நெருங்கி வந்த போது, எனது ஈட்டியை அவரது மர்மஸ்தானத்தை நோக்கி எறிந்தேன். அது (பாய்ந்து) அவரது புட்டத்திற்கிடையி-ருந்து வெளியேறியது. அது தான் ஹம்ஸô அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. பிறகு குறைஷிகள் (உஹுதி-ருந்து மக்காவை நோக்கி) திரும்பிச் சென்ற போது நானும் அவர்களுடன் திரும்பினேன். மக்காவிற்குப் போய் அங்கு (வெற்றி கிடைத்து) இஸ்லாம் பரவும் வரையில் தங்கினேன். (மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்) அங்கிருந்து வெளியேறி தாயிஃபிற்கு (ஓடிச்) சென்று விட்டேன். தாயிஃப் வாசிகள் (இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், அதை ஏற்று நடக்கவும் கருதி) தங்கள் தூதுக் குழுவினரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர்.140 அப்போது, என்னிடத்தில், ""அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மிடம் வரும்) தூதுவர்களுக்குத் தொல்லை தரமாட்டார்கள்; (எனவே, தூதுக் குழுவின ருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்)'' என்று கூறப்பட்டது. எனவே, தூதுக் குழுவினருடன் நானும் புறப்பட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்ட போது, ""நீ வஹ்ஷி தானே?'' என்று கேட்டார்கள். நான், ""ஆம்'' என்று கூறினேன். ""நீ தானே ஹம்ஸôவைக் கொன்றாய்?'' என்று கேட்டார்கள். நான், ""உங்களுக்கு எட்டியபடி விஷயம் நடந்தது உண்மைதான்'' என்று கூறினேன். அப்போது அவர்கள், ""(உன்னைக் காணும் போது என் பெரிய தந்தை ஹம்ஸôவின் நினைவு வரும், எனவே,) என்னை விட்டும் உன் முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா?'' என்று கேட்டார்கள். உடனே, நான் (அங்கிருந்து) புறப்பட்டுவிட்டேன். நூல்: புகாரி 4072

போர்த்த ஆடையில்லாமல் மரணித்த முஸ்அப் பின் உமைர் (ரலி):
இப்ராஹீம் பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒருநாள், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் அவரது உணவு கொண்டு வந்து வைக்கப்பட்டது. உடனே அவர், முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது #அவர் என்னைவிடச் சிறந்தவராக இருந்தார்# அவரது உடலில் சாத்துவதற்கு ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஹம்ஸô (ரலி) அல்லது வேறொருவர் கொல்லப்பட்டபோது #அன்னாரும் என்னைவிடச் சிறந்தவரே# அவரது உடலில் சாத்துவதற்கும் ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. எனவே நல்லவை(க்கான நற்கூலி லி) களெல்லாம் எனக்கு இவ்வுலக வாழ்விலேயே முன்கூட்டியே கொடுக்கப் பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்!'' எனக் கூறிவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.    நூல்: புகாரி 1274 

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP