30.5.12

அல்லாஹ்வின் உருவம் பற்றி விவாதிக்கக் கூடாதாம். மன்சூரின் உளறலுக்கு மறுப்பு

எழுத்து வடிவில் நடைபெற்ற ஒரு விவாதம்
மன்சூர் பேசிய வீடியோRoohul Razmi கிறுக்குனுத் தனமாக உளறினால் கூட அதற்கும் கொஞ்சம் அறிவு வேணும். இந்த மன்சூரின் உளறல் கிறுக்கையும் தாண்டிப் புனிதமானது. விவாதிக்காமல் இருக்கனும்னு 4 நிமிட வாதம். 

அல்லாஹ்வைப்பற்றி எம்மால் ஒரு போதும் விளங்க முடியாதாம். அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்று நம்பினால் போதுமாம். அவன் எம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என நம்பினால் வேண்டிய மட்டும் போதுமாம். 

அல்லாஹ் பற்றி இவ்விரண்டு விடயங்களையும் எப்படி மன்சூர் அப்போ விளங்கினார்? சுத்த முரண்பாடு. அப்போ அல்லாஹ் பார்ப்பவன், கேட்பவன், அன்பாளன், அருளாளன் இன்னும் அல்லாஹ் தன்னைப் பற்றி கூறும் அனைத்து விடயங்ளையும் என்ன செய்வது? அல்லாஹ் தனக்கு உருவம் இருப்பதாக ஹதீஸில் சொல்வதற்கு என்ன பதில். அப்படி ஹதீஸ் இருக்குதா இல்லையா? கூறுகெட்டத் தனத்தைக் கூட இவர் கூறு போட்டு விற்றாலும் விற்பார். 

Read more...

8.5.12

கல்விக் கடலா கஸ்ஸாலி?

"வானத்தின் ரட்சகா! மக்களின் தலைவர் கஸ்ஸாலியின் உள்ளத்தை ஒளிரச் செய்தது போன்று இந்தப் புதியவனின் உள்ளத்தை ஒளிரச் செய்!''

காலை மாலையில் நடைபெறும் குர்ஆன் மத்ரஸாக்கள் முதல், பட்டமளிப்பு விழா நடக்கும் பெரிய மதரஸாக்களின் மாணவர்கள் வரை ஒரு பிரார்த்தனையாகப் பாடுகின்ற பாடல் வரிகள் தான் இவை.
அறிவுக் கடல், கல்விக் கடல் என்று இந்த ஆலிம்களால் மெச்சப்படுகின்றவர் கஸ்ஸாலி!
இவர் கல்விக் கடலா? என்பதைக் கீழ்க்காணும் அவரது நூற்களில் இடம் பெறும் பதிவுகளைப் பார்த்து முடிவு செய்வோம்.
العارفون- بعد العروج إلى سماء الحقيقة- اتفقوا على أنهم لم يروا في الوجود إلا الواحد الحق. لكن منهم من كان له هذه الحال عرفانا علميا، ومنهم من صار له ذلك حالا ذوقيا. وانتفت عنهم الكثرة بالكلية واستغرقوا بالفردانية المحضة واستوفيت فيها عقولهم فصاروا كالمبهوتين فيه ولم يبق فيهم متسع لا لذكر غير الله ولا لذكر أنفسهم أيضا. فلم يكن عندهم إلا الله، فسكروا سكرا دفع دونه سلطان عقولهم، فقال أحدهم (أنا الحق) وقال الآخر (سبحاني ما أعظم شأني) وقال آخر (ما في الجبة إلا الله) وكلام العشاق في حال السكر يطوى ولا يحكى. فلما خف عنهم سكرهم وردوا إلى سلطان العقل الذي هو ميزان الله في أرضه، عرفوا أن ذلك لم يكن حقيقة الاتحاد بل شبه الاتحاد مثل قول العاشق في حال فرط عشقه (أنا من أهوى ومن أهوى أنا) ولا يبعد أن يفاجىء الإنسان مرآة فينظر فيها ولم ير المرآة قط، فيظن أن الصورة التي رآها هي صورة المرآة متحدة بها، ويرى الخمر في الزجاج فيظن أن الخمر لون الزجاج. وإذا صار ذلك عنده مألوفا ورسخ فيه قدمه استغفر وقال:
رَقَ الزُجاجُ وَراقَتِ الخَمرُ

فَتَشابَها فَتَشاكَـلَ الأَمَـرُ
فَكَأَنّما خَـمـرٌ وَلا قَـدحٌ

وَكَأَنّما قَدحٌ وَلا خَـمـرُ
وفرق بين أن يقول: الخمر قدح، وبين أن يقول: كأنه قدح. وهذه الحالة إذا غلبت سميت بالإضافة إلى صاحب الحالة (فناء) بل (فناء الفناء): لأنه فنى عن نفسه وفنى عن فنائه، فإنه ليس يشعر بنفسه في تلك الحال ولا يعدم شعوره بنفسه. ولو شعر بعدم شعوره بنفسه لكان قد شعر بنفسه. وتسمى هذه الحالة بالإضافة إلى المستغرق به بلسان المجاز اتحادا أو بلسان الحقيقة توحيدا. ووراء هذه الحقائق أيضا أسرار يطول الخوض فيها.

Read more...

முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்றால் யார்?

உரை : பி.ஜைனுல் ஆபிதீன்

எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா MIScஸிஹ்ர் - சூனியம் செய்யும் மார்க்க அறிஞர்களுக்கு ஒரு விசயத்தைச் சொல்லிக் கொள்கிறோம். சூனியம் என்பது பெரும்பாவம் ஆகும். அதுவும் இறைமறுப்பு எனும் குஃப்ர் என்ற பாவத்தில் சேர்த்து விடுகிற குற்றமாகும்.
"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகüன் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறை நம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்கüன் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று (பதில்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்கள்: புகாரி 2766,6857முஸ்லிம் 451
முதலாவது விலகிக் கொள்ளவேண்டிய பாவம், அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, இரண்டாவதாக விலகிக் கொள்ள வேண்டிய பாவம் ஸிஹ்ர்-சூனியம். விலகிக் கொள்வது என்றால், அதைச் செய்யவும் கூடாது, நம்பவும் கூடாது என்பதாகும்.

Read more...

2.5.12

ஹெம்மாதகம விவாதத்தில் அசத்தியவாதிகளின் அடித்தளம் ஆட்டம் கண்டுவிட்டது

எம்.ஏ.ஹபீழ் ஸலபி
 இஸ்லாம் ஒரு பரிபூரணமான மார்க்கம். அதன் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆனும் அஸ்ஸூன்னாவும் மட்டுமே மனித வாழ்க்ககைக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் உட்பொதிந்துள்ளது. மனிதன் மறுமை நாள் வரை எதிர் நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வை அவை இரண்டும் தன்னகத்தேகொண்டுளளன. அவற்றிலிருந்து எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியும் என்பதை 2012 ஏப்ரல் சனி 21 ஞயிறு 22 ஆகிய இரண்டு தினங்களில் நடந்த விவாதத்தில் மீண்டும் ஒரு முறை தவ்ஹீத் ஜமாஅத் தெட்டத் தெளிவாக நிரூபித்துள்ளது.
இந்த விவாதம் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது? என்ற கருப்பொருளில ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கத்திற்குமிடையில் ஹெம்மாதகம அல் அஸ்ஹர் நவோதய பாடசாலை கேட்போர் கூடத்தில் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
பயானில், பொது மேடைகளில், துண்டுப் பிரசுரங்களில் சொல்ல முடியாமல் போகின்ற விடயங்களை, எதிரணியை முன்னே வைத்துக் கொண்டு, நேருக்கு நேராக அவர்கள் தமது அறியாமையால் ஆபாசங்கள், அசிங்கங்கள் அடங்கிய தூய்மையான இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தக் கூடிய, மனித அறிவு ஏற்க மறுக்கும் அரக்கத்தனமான விடயங்களை இஜ்மா – கியாஸ் என்று சொல்லி மக்களை மடமையின் பக்கம் நகர்த்திச் செல்லும் விடயங்களை பகிரங்கமாகப் போட்டு உடைக்கக் கூடிய ஒரே களமே விவாதம்.

Read more...

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP