24.1.12

ஷிர்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழலாமா?


ஷிர்க் வைக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்பது சரி. ஆனால் ஷிர்க்கான காரியங்கள் நடக்கும் பள்ளியில் ஏன் தொழக்கூடாது?
அப்துர் ரஜாக்
பதில் :
பாவமான நான்கு காரியங்கள் நடக்கின்ற பள்ளிக்குச் செல்லக் கூடாது என அல்லாஹ் கூறுகிறான்.
وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ(107)لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ(108)9
தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் "நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். "அவர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.

20.1.12

மறப்போம்! மன்னிப்போம்!

நான் நபி (ஸல்) அவர்கடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் (ர) அவர்கள் தமது முழங்கால் வெயே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்த படி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், உங்கள் தோழர் வழக்காட வந்து விட்டார் என்று சொன் னார்கள். அபூபக்ர் (ர) அவர்கள் (நபி -ஸல்- அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, அல்லாஹ் வின் தூதரே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்து விட்டார். ஆகவே உங்கடம் வந்தேன் என்று சொன்னார்கள்.

16.1.12

SLTJ யின் ஏற்பாட்டில் O/L முடித்த மாணவர்களுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்ச்சி முகாம்



13.1.12

SLTJ சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்.


ஜும்ஆ சொற்பொழிவு

நாள்: 13.01.2012 
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு 
உரையாற்றுபவர்: சப்வான் (தவ்ஹீதி)
தலைப்பு: “நரகில் தள்ளும் நயவஞ்சகத் தனம்.”
இடம்: 
தவ்ஹீத் அழைப்பு மையம் (வட்டக்களி, சிலாபம்)



பெண்கள் பயான்
நாள்: 15.12.2011 
நேரம்: மாலை 4 : 00 மணிக்கு 
உரையாற்றுபவர் சப்வான் (தவ்ஹீதி)
தலைப்பு: “மறுமை நாளின் கொடூரக் காட்சிகள்.” 
 இடம்: 
தவ்ஹீத் அழைப்பு மையம் (வட்டக்களி, சிலாபம்)


          அனைவரும் கலந்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்  (sltj)
சிலாபம் கிளை

11.1.12

அர்சின் நிழலை வழங்கும் அழகிய கடன்


வியாபாரம் செய்வதற்காக இன்று நாடார் சமுதாயத்தில் பொருள் கடன் கொடுத்து உதவுகின்றார்கள். அதல பாதாளத்தில்  கிடப்பவனுக்கு பொருளாதாரம் எனும் மலை உச்சியில் இருப்பவர்கள் கடன் எனும் கயிறு கொடுத்து, கை கொடுத்து உதவுகின்றார்கள். உலகையே குறிக்கோளாகக் கொண்ட அந்தச் சமுதாயம் இந்த நல்ல காரியத்தைச் செய்கின்றது. ஆனால் மறுமையை நம்பிக்கை கொண்ட இந்தச் சமுதாயம் இதைக் கண்டு கொள்ளவேயில்லை.
இஸ்லாமிய மார்க்கம் ஐந்து நேரத் தொழுகையின் மூலம் கூட்டுத் தொழுகையைத் தந்து சமுதாயத்தின் உறுப்பினர்கள் படும் அவதிகளைக் கண்டு கொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.  பள்ளிக்கு வரக்கூடிய ஒவ்வொரு தனிப்பட்ட முஸ்லிமின் வாழ்க்கை எப்படிக் கழிகிறது என்பதைக் கணக்கில் கொள்ளச் செய்கிறது.

8.1.12

அண்ணி ஓர் அந்நியப் பெண்ணே!


ஓர் அந்நியப் பெண்ணிடம் ஒருவன் பேசும் போதுஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொள்ளும் போது மிக மிக ஜாக்கிரதையாகப் பேசுகின்றான்தொடர்பு கொள்கின்றான்ஆனால் தன் சகோதரனின் மனைவியிடம் இந்த ஜாக்கிரதையை எடுத்துக் கொள்வது கிடையாது.
பேராபத்து நிகழ்வதற்கு மிக முக்கியமான காரணம் பெண்ணின் ஆடையலங்காரம்தனது கணவனின் சகோதரனேயானாலும் இஸ்லாம் பெண்ணுக்குக் கட்டளையிட்டிருக்கின்ற அந்த உடை அமைப்புடன் தான் அவன் முன் காட்சியளிக்க வேண்டும் என்ற சட்டம் பேணப்படுவதில்லைஅதிலும் இந்தக் காலத்தில் அணிகின்ற கண்ணாடி போன்ற உடைகள் உடல் உறுப்புக்களை அப்படியே பிரதிபலிக்கின்றன.இந்நிலையில் தனிமையில் சந்திப்பதுகிண்டலடித்துப் பேசுவது போன்றவை தவறான எண்ணத்திற்கு வழி வகுத்து விடுகின்றனஇவை முற்றிலும் தடுக்கப்பட்ட காரியங்கள் என்று இன்னும் இந்தச் சமுதாயத்திற்குப் புரிய வைக்கப்படவில்லை.

6.1.12

SLTJ சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்.


ஜும்ஆ சொற்பொழிவு


நாள்:
05.01.2012
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு
உரையாற்றுபவர்: பர்லீன் misc
தலைப்பு: “வானவர்களின் பிரார்த்தனையைப் பெறுவது எப்படி?”
இடம்:
தவ்ஹீத் அழைப்பு மையம் (வட்டக்களி, சிலாபம்)

பெண்கள் பயான்

நாள்: 08.12.2011 
நேரம்: மாலை 4 : 00 மணிக்கு 
உரையாற்றுபவர்: அஜ்மீர் அமீனி
தலைப்பு: “சுய பரிசோதனை”
இடம்:
தவ்ஹீத் அழைப்பு மையம் (வட்டக்களி, சிலாபம்)

அனைவரும் கலந்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்  
சிலாபம் கிளை

Read more...

1.1.12

SLTJ தலைமை மூலமாக சிலாபம் கிளைக்கு DVD ரைட்டர் மற்றும் குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைமையகத்தின் மூலம் சிலாபம் கிளையின் தஃவா செயல்பாடுகளுக்காக சகோதரர் பி.ஜெ மொழியாக்கம் செய்த திருமறைக் குர்ஆன் பிரதிகள் மற்றும் DVD ரைட்டர் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சிலாபம் கிளையின் உறுப்பினர் சகோதரர் சத்தார் அவர்களிடம் தேசியத் தலைவர் ஆர்.எம்.ரியாழ் அவர்கள் DVD ரைட்டரையும் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் சகோதரர் முயீன் அவர்கள் குர்ஆன் மொழியாக்க பிரதிகளையும் வழங்கினார்கள்.



  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP