28.3.12

சிலாபத்தில் நடைபெற்ற SLTJ அங்கத்தவர்களுக்கான தர்பியா (விரிவான செய்திகளுடன்)

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் மற்றும் மாதம்பைக் கிளைகள் இணைந்து நடாத்திய முழு நாள் தர்பியா நிகழ்ச்சி கடந்த 25.03.2012 அன்று காலை 9.30 மணிக்கு இஸ்லாமிய அழைப்பு மையம், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையில் சகோதரர் எம்.எஸ்.எம் ஸப்வான் டி.ஐ.எஸ்.ஸீ அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.


தலைமை உரையில் இத்தர்பியாவின் நோக்கம் குறித்து விளக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சகோதரர் எம்.டீ.எம். ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸீ அவர்களினால் “அழைப்பாளர்களின் அணிகலன்கள்”" எனும் தலைப்பில் சிறப்பானதொரு பயற்சி வழங்கப்பட்டது.

26.3.12

சிலாபத்தில் நடைபெற்ற SLTJ அங்கத்தவர்களுக்கான தர்பியா


நேற்று (25.03.2012) காலை 9.30 மணியளவில் ஆரம்பமான நிகழ்ச்சிகள் மாலை 6.00 மணி வரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.60 க்கும் மேற்பட்ட SLTJ யின் அங்கத்தவர்கள் இந்நிகழ்வில் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ். விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். இன்ஷாஅல்லாஹ்

22.3.12

SLTJ க்கும் ஹெம்மாத்தகம சட்ட அமுலாக்கல் சங்கத்(தப்லீக் ஜமாஅத்)தினரருக்கும் இடையில் பகிரங்க விவாதம்


விவாத ஒப்பந்தம்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் ஹெம்மாதகம சட்ட அமுலாக்கள் சங்கத்திற்கும் இடையில் கடந்த 22.01.2012 (ஞாயிற்றுக் கிழமை) விவாத ஒப்பந்தம் கையெழுத்தானது. அல்ஹம்துலில்லாஹ்.

விவாத நாள்
ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் விவாதம் நடை பெரும்.  இன்ஷா அல்லாஹ்.

விவாதத்தின் தலைப்பும் நிலைபாடுகளும்
 
தலைப்பு: இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது?

சட்ட அமுலாக்கள் சங்கத்தின் நிலைபாடு 
இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும், இஜ்மாவும், கியாசுமாகும்.

19.3.12

சிலாபம் மற்றும் மாதம்பை கிளைகள் இணைந்து நடத்தும் முழு நாள் தர்பியா நிகழ்ச்சி


எதிர்வரும் 25.03.2012 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சிலாபம் மற்றும் மாதம்பை கிளைகளின் ஏற்பாட்டில் ஜமாஅத் அங்கத்தவர்களுக்கான முழு நாள் தர்பியா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இல. 40, கெனல் வீதி, வட்டக்களி, சிலாபம். எனும் விலாசத்தில் அமைந்துள்ள SLTJ சிலாபம் தஃவா நிலையத்தில் அன்று காலை 9:30 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.(இன்ஷா அல்லாஹ்) 


14.3.12

SLTJ சிலாபம் கிளையில் காத்தான்குடி ஆன்லைன் நிகழ்ச்சி ஒழளிபரப்பு

09.03.2012 அன்று காத்தான்குடியில் ஏற்பாடு செய்திருந்த சகோதரர் பீ.ஜெ வர்களின் நேரடி ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி SLTJ சிலாபம் கிளையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆண்கள் பெண்கள் என பலரும் பார்த்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்




11.3.12

SLTJ சிலாபம் கிளை சார்பாக புதிதாக வாங்கிய இடத்தில் நடைபெற்ற சிரமதானம்

கடந்த 07.03.2012 அன்று SLTJ சிலாபம் கிளை சார்பாக புதிதாக வாங்கிய இடத்தை சுத்தம் செய்வதற்காக ஊர் கொள்கைவாதிகள் ஒன்று கூடி அப்பணியை சிறப்பாக செய்து முடித்தனர்.
சிலாபம் கிளையினால் நடத்தப்பட்டு வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் வெகு விரைவில் புதிய இடத்திற்கு மாற்றப்படவுள்ளது. (இன்ஷா அல்லாஹ்)

சிலாபம் கிளையில் வாரந்தோரும் நடைபெறும் மாணவர் நிகழ்ச்சி

இளைஞர்கள் மத்தியிலும் தூய இஸ்லாத்தை எடுத்துரைத்து நல்வழி காட்டும் நந்நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை விளக்க வகுப்பில் பல மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்





  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP