இதற்கு ஆன்சர் பன்னுங்க அன்சார்
By Roohul Razmi
சத்தியப் பாதம் மிதித்தடைத்த அசத்தியத்தின் ஆழ அடியூற்றை அலசிப் பார்த்த அத்தனை இடங்களிலும் ஏகத்துவக் கால்த்தடமே இன்றுவரையிலும் வென்றுபதிந்தது உலகறிந்த சத்தியம். அசத்தியம் முட்சொரிந்த தமிழ் பேசும் இடமெல்லாம் சத்தியத்தின் தடம் பதிக்க சாத்தியமானதே தௌஹீதினால் தான்.
அசத்தியத்தின் ஆணிவேரை பத்திரமாகப் பிடுங்கி பார்க்கவேண்டிவர் பார்த்திருக்க மொத்தமாய் முழுக்கழித்த மிக முக்கிய தடயங்களைத் தோண்டிப் பார்த்தால் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்தின் விவாதச் சுவடுகளே அரும்பொருளாய்க் காணக்கிடைக்கும். சத்தியத்தையும் அசத்தியத்தையும் நித்தியமாய் வேறுபிரிக்க விவாதத்தை விதியாக்குவதே விமோசன வழி என்பதை எமது ஜமாஅத் மரணம்போல் உறுதிசெய்து வைத்துள்ளது. எமது கொள்கைகளை விமர்சிக்கும் அனைவரையும் விவாதம் செய்து நிலைநிறுத்துமாறு சொல்லுக்குச் சொல் சொல்வதும் அதனால்தான்.
தனது கொள்கை இது என்று தன்னைத் தவிர இன்னொருவனுக்குச் சொல்லும் எவனொருவனும், அக்கொள்கைபற்றி விவாதிக்க அழைக்கும்போது ஒளிவானாயின் அவனும், அவன் கொள்கையும் ஒழிக்கப்படவேண்டியவை என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை.
எனது கொள்கையே பவரானது, உனது கொள்கையோ தவறானது என ஒருவன் சொல்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். வாதிப்பது என்பது அவனுக்குக் கட்டாயக் கடமையாகிவிடுகிறது. இதையும் தாண்டிய நிலையில் உள்ள ஒரு மனிதருக்குத்தான் இன்று SLTJ தனது விவாத அழைப்பை விடுக்கிறது.
பீஜேயை எதிர்ப்பதே சுவனம் செல்லும் வழி என்று நம்பி அதையே மேடைதோறும் கீச்சிடும் மௌலவி அன்சார்(அக்கரைப்பற்று) அவர்களே! உங்களுக்குத்தான் இந்த விவாத அழைப்பென்று புரிகிறதா?எம்மோடு விவாதிக்க வந்தால் நீங்கள் உருவாக்கியுள்ள அன்சார் மதுஹபுக்கு ஆபத்து வந்துவிடும் என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறீர்கள் போங்கள். அதி முத்திய உங்கள் கவனம், சுவனம் செல்ல உங்களுக்குத் தடையாக வந்தாலும் பரவாயில்லையென்றுதான் இருக்கிறீர்கள்.
உமரலியொடு விவாதிக்கும்போது இல்லாத பயம், அகாரைப் பேச அழைக்கும் போது இல்லாத பயம், உங்களுக்கு பிடித்த மாணவன் ரயீசுத்தீன் சில்மியோடு விவாதிக்கும் போது இல்லாத பயம், எம்மோடுமட்டும் ஏன்? BMICH இல் டாக்டர் ரயீசுதீனும் பீஜே யும் ஒரே அணியில் உக்கார்ந்தது போல உக்காரக் கிடைத்தால்தான் பீஜேயோடு உக்காருவேன் என்று ஏதாவது சபதம் எடுத்துள்ளீர்களா? இவ்வளவு தொடை நடுக்கத்தை வைத்துக்கொண்டு இந்த கூத்தாட்டமா?
எவ்வளவு காலத்துக்குத்தான் நீங்கள் பயமில்லாததவர் போல நடிக்கிறது? நாம் இல்லாத இடத்தில் எம்மைப்பற்றி பேசுவது, கேள்விபதிலையே ரத்துச் செய்து ஓடுவது. எதிரி இருக்கவேண்டிய சீட்டில் அப்துல் ஹமீது மௌலவியை வைத்து பாவம் அவருக்கு ஏசுவது. நீங்கள் சோற்றை விடுத்து சேற்றையா உண்கிறீர்கள்? இந்தப் பிழைப்புக்கு நடு ரோட்டில் சாகலாம் இல்லையா?
உங்கள் நன்மை நாடி ஒன்றைச் சொல்கிறோம் கேளுங்க. ஒரு கட்டத்தில் உங்கள் முகல்லிதுகளே உங்களை மேடைக்கு இழுத்துவரும் காலம் வரும். அந்த நிலை வந்தால், எந்த விசிறிக் கூட்டத்துக்காக நீங்கள் விவாதிக்க மறுத்தீர்களோ அவர்களையே இழக்க நேரிடும் உங்களுக்கு. எனவே அந்த சகராத்து நிலையை அடையமுன் விவாதிக்கத் தயாராகுங்கள்.
இற்றைக்கு 2 வருடங்களுக்கு முன் உங்களோடு போனில் நான் கேட்டதை ஞாபகப் படுத்திப் பாருங்கள். உங்களுக்கு 5 options நான் தந்தேன்
1. பீஜே யோடு நேராக விவாதம் செய்யத் தயாரா? முடியாது என்று சொன்னீர்கள்.
2. பீஜே யோடு ஒரு கலந்துரையாடலுக்காவது தயாரா? முடியாது என்று சொன்னீர்கள்.
3. வீடியோ இல்லாத கலந்துரையாடலுக்காவது தயாரா? முடியாது என்று சொன்னீர்கள்.
4. வெறுமனே அவரை நோக்கிக் கேள்வி கேளுங்கள். அவர் பதில் மடடும் தருவார். உங்களிடம் கேள்வி கேட்க மாட்டார்.(எளிய மார்க்கம் நிகழ்ச்சி போல) முடியாது என்று சொன்னீர்கள்.
5. அவருக்குப் பின்னால் இருந்து சொல்லும் அத்தனை விடயங்களையும் அவருக்கு முன்னால் கேளுங்கள். அவருக்கு பயான் பன்னுங்கள். அவர் கேட்டுக் கொண்டு மட்டும் இருப்பார். ஒன்றும் பேச மாட்டார். முடியாது என்று சொன்னீர்கள்.
500 பேர் கொண்ட உங்கள் மதுஹபுக் கூட்டத்தைத் தக்கவைக்க மலத்தைக் கூட நீங்கள் உண்ணத்தயாரா?