10.4.12
28.3.12
சிலாபத்தில் நடைபெற்ற SLTJ அங்கத்தவர்களுக்கான தர்பியா (விரிவான செய்திகளுடன்)
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம்
மற்றும் மாதம்பைக் கிளைகள் இணைந்து நடாத்திய முழு நாள் தர்பியா நிகழ்ச்சி
கடந்த 25.03.2012 அன்று காலை 9.30 மணிக்கு இஸ்லாமிய அழைப்பு மையம்,
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையில் சகோதரர் எம்.எஸ்.எம் ஸப்வான்
டி.ஐ.எஸ்.ஸீ அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.
தலைமை உரையில் இத்தர்பியாவின் நோக்கம் குறித்து விளக்கப்பட்டது. அதனைத்
தொடர்ந்து சகோதரர் எம்.டீ.எம். ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸீ அவர்களினால்
“அழைப்பாளர்களின் அணிகலன்கள்”" எனும் தலைப்பில் சிறப்பானதொரு பயற்சி
வழங்கப்பட்டது.
Labels:
ஜமாஅத் நிகழ்ச்சிகள்
26.3.12
சிலாபத்தில் நடைபெற்ற SLTJ அங்கத்தவர்களுக்கான தர்பியா
நேற்று (25.03.2012) காலை 9.30 மணியளவில் ஆரம்பமான நிகழ்ச்சிகள் மாலை 6.00 மணி வரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.60 க்கும் மேற்பட்ட SLTJ யின் அங்கத்தவர்கள் இந்நிகழ்வில் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ். விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். இன்ஷாஅல்லாஹ்
Labels:
ஜமாஅத் நிகழ்ச்சிகள்
22.3.12
SLTJ க்கும் ஹெம்மாத்தகம சட்ட அமுலாக்கல் சங்கத்(தப்லீக் ஜமாஅத்)தினரருக்கும் இடையில் பகிரங்க விவாதம்
விவாத ஒப்பந்தம்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் ஹெம்மாதகம சட்ட அமுலாக்கள் சங்கத்திற்கும் இடையில் கடந்த 22.01.2012 (ஞாயிற்றுக் கிழமை) விவாத ஒப்பந்தம் கையெழுத்தானது. அல்ஹம்துலில்லாஹ்.
விவாத நாள்
ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் விவாதம் நடை பெரும். இன்ஷா அல்லாஹ்.
விவாதத்தின் தலைப்பும் நிலைபாடுகளும்
தலைப்பு: இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது?
சட்ட அமுலாக்கள் சங்கத்தின் நிலைபாடு
இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும், இஜ்மாவும், கியாசுமாகும்.
Labels:
விவாதங்கள்
19.3.12
சிலாபம் மற்றும் மாதம்பை கிளைகள் இணைந்து நடத்தும் முழு நாள் தர்பியா நிகழ்ச்சி
எதிர்வரும் 25.03.2012 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சிலாபம் மற்றும் மாதம்பை கிளைகளின் ஏற்பாட்டில் ஜமாஅத் அங்கத்தவர்களுக்கான முழு நாள் தர்பியா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இல. 40, கெனல் வீதி, வட்டக்களி, சிலாபம். எனும் விலாசத்தில் அமைந்துள்ள SLTJ சிலாபம் தஃவா நிலையத்தில் அன்று காலை 9:30 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.(இன்ஷா அல்லாஹ்)
Labels:
செய்திகள்,
ஜமாஅத் நிகழ்ச்சிகள்
14.3.12
SLTJ சிலாபம் கிளையில் காத்தான்குடி ஆன்லைன் நிகழ்ச்சி ஒழளிபரப்பு
09.03.2012 அன்று காத்தான்குடியில் ஏற்பாடு செய்திருந்த சகோதரர் பீ.ஜெ வர்களின் நேரடி ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி SLTJ சிலாபம் கிளையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆண்கள் பெண்கள் என பலரும் பார்த்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்
Labels:
ஜமாஅத் நிகழ்ச்சிகள்
11.3.12
SLTJ சிலாபம் கிளை சார்பாக புதிதாக வாங்கிய இடத்தில் நடைபெற்ற சிரமதானம்
கடந்த 07.03.2012 அன்று SLTJ சிலாபம் கிளை சார்பாக புதிதாக வாங்கிய இடத்தை சுத்தம் செய்வதற்காக ஊர் கொள்கைவாதிகள் ஒன்று கூடி அப்பணியை சிறப்பாக செய்து முடித்தனர்.
சிலாபம் கிளையினால் நடத்தப்பட்டு வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் வெகு விரைவில் புதிய இடத்திற்கு மாற்றப்படவுள்ளது. (இன்ஷா அல்லாஹ்)
Read more...
சிலாபம் கிளையினால் நடத்தப்பட்டு வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் வெகு விரைவில் புதிய இடத்திற்கு மாற்றப்படவுள்ளது. (இன்ஷா அல்லாஹ்)
Labels:
சேவைகள்
சிலாபம் கிளையில் வாரந்தோரும் நடைபெறும் மாணவர் நிகழ்ச்சி
இளைஞர்கள் மத்தியிலும் தூய இஸ்லாத்தை எடுத்துரைத்து நல்வழி காட்டும் நந்நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை விளக்க வகுப்பில் பல மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்
Labels:
மாணவர் அணி,
வாராந்த நிகழ்ச்சிகள்
28.2.12
ஜெனீவாவின் தீர்ப்பை கண்டித்து SLTJயின் ஆர்ப்பாட்டம்
“அந்நிய சக்திகள் இலங்கையின் இறைமையை தட்டிப்பறிக்க இடமளியோம்!”
களத்தில் இறங்கியது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணை குழுவின் பரிந்துரையை இலங்கை அரசு நடைமுறைப்பபடுத்தத் தவறிவிட்டது என்றும் கூறி அமெரிக்க தலைமையிலான மேற்குலக ஆதிக்கவாதிகள் நேற்று ஜெனீவாவில் வைத்து இலங்கை அரசுக்கெதிராய் தீர்மானங்கள் நிறைவேற்றக் காத்திருந்தன.
Labels:
மறுப்புகள்,
ஜமாஅத் நிகழ்ச்சிகள்
21.2.12
கொடூரமாக கொல்லப்பட்ட சஹாபாக்கள்
மலேசியாவிலிருந்து யாஸர் அரபாத் D.I.Sc
உறுதியாக இணைக்கப்பட்ட கட்டடம் போன்று அணிவகுத்து தன் பாதையில் போரிடுவோரை அல்லாஹ் விரும்புகிறான். அல் குர்ஆன் 61:4
என்ற வசனத்திற்கு தகுதியானவர்களாக பல போர்க்களங்களை சந்தித்து சஹாபாக்கள் தியாகம் செய்ததை வரலாறுகள் மூலம் அறிந்திருக்கிறோம். அந்த போர்க்களங்களில் சஹாபாக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் எப்படியெல்லாம் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்பதை அறியாமல் இருக்கிறோம். அவர்கள் செய்த தியாகத்தின் மூலம் நாமும் மார்கத்திற்காக தியாகம் செய்ய வேண்டும் என்கிற படிப்பினை பெறுவதற்காக கொடூரமாக கொல்லப்பட்ட சஹாபாக்கள் என்ற தலைப்பின் கீழ் தகவல்களை தருகிறோம்.
அடையாளம் தெரியாமல் கொல்லப்பட்ட அனஸ் இப்னு நள்ர் (ரலி ):
அனஸ் (ர-) அவர்கள் கூறியதாவது:
என் தந்தையின் சகோதரர் அனஸ் பின் நள்ர் (ர-) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்று விட்டார். அவர் (திரும்பி வந்தவுடன்) ""அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணை வைப்பவர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை;
Labels:
கட்டுரைகள்
Subscribe to:
Posts (Atom)


