விரும்பி வெறுத்த நிலவு
ஆக்கம்:
ரூஹுல் ரஸ்மி
நிலவாக நான் நிலைக்க
சுயமாக நான் ஒளிர
வெறுக்கிறேன்.
வேதம் மட்டும் தெறிக்க
விட்டுவைக்கிறேன்.
அறியாமை இருள் வந்தால்
அறியாமலே வந்துவிடுவேன்
மதியென்னும் என்பெயரை
நிறுவித் தந்துவிடுவேன்.
ஒருபுறம் நான் தேய
மறுபுறம் காட்டுவேன்.
குறைதேடும் கண்ணுக்கு நான்
வளர்பிறை தேய்பிறை
என்னோடு இருப்போர்க்கு நான்
நிலவாக நான் இருக்க
வெறுக்கிறேன்.
சுயமாக நான் சிந்திக்க
விரும்புகிறேன்.
அடுத்தவர் சொன்னதை அப்படியே
தெறித்திடத் தலைப்படேன்
தேவையற்ற அண்டங்களை விட்டு
தேவைக்கே ஒளிர்வேன்.
வளர்ந்த பின் தேய்ந்துபோக
நானென்ன மதிகெட்டவனா?
சூரியனுக்குப் பின்னே கோழையாக
கிரகணமாய் ஒளியமாட்டேன்
கார் மேகத்துக்கு எப்போதும்
நேரெதிரி நானென்பேன்
பூரணமாய் நான் ஒளிர்ந்து
பைத்தியம் தெளியவைப்பேன்.
0 comments:
Post a Comment