1.2.12

நபிகள் நாயகத்தை புகழ்வது எவ்வாறு?

பியுல் அவ்வல் மாதம் வந்துவிட்டது. மீலாது விழா கொண்டாடலாமா? மவ்லூது ஓதி விருந்து போடலாமா? என்ற கேள்விக்கு தெளிவான விடை காணாத முஸ்லிம்கள் மத்தியில் சர்ச்சைகளும் தோன்றி விடுவது வழமையாகி விட்டது. எங்கள் தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்களைப் புகழ்வதில் என்ன தவறு இருக்கிறது? என்று சாக்குப் போக்குக் கூறி மீலாத் கொண்டாடும் முஸ்லிம்கள் பலர். இல்லை... இந்த மீலாதும் மவ்லூதும் இஸ்லாத்துக்கு அப்பாற்பட்டது. எனவே, இதனைக் கொண்டாடக் கூடாது என்று சிலர். இவர்களின் குழப்ப நிலையை தெளிவு படுத்த வேண்டிய கடமை தம்வசம் சமத்தப்பட்டிருப்பினும், எரிகின்ற வீட்டில் பிடுங்குவதே இலாபம் என்ற தோரணையில் சமூக சர்ச்சை என்ற தீயில் குளிர் காயும் ஆலிம்கள் பலர். உண்மையைச் சொன்னால் ஒற்றுமை குழையும் என்று வெற்றுச் சித்தாந்தம் பேசி மார்க்கத்தை தாரைவார்க்கும் கொள்கைக் கோமாலிகள் இன்னுமொரு புறம். இந்த காலகட்டத்தில் இப்பிரச்சினையை அல் குர்ஆன், நபி வழி கொண்டு அலசி, சமூகத்திற்கு உண்மை நிலையை எடுத்துரைப்பது எமது கடமை எனக் கருதியதன் விளைவே இந்த ஆக்கம் வெளியிடப்படுகிறது.
மவ்லித் என்றால் என்ன?
மவ்லித் என்ற அறபுப் பதத்திற்கு பிறப்பு, பிறந்த காலம், இடம் என்ற பொருள்கள் உள்ளன. இது பேச்சு வழக்கில் மவ்லூத் என்று கூறப்படுகிறது. அல் மவ்லித் அந்நபவி என்றால், நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் என்று பொருள் படும். மார்க்கம் அறியா சில அறைகுறைகள் ரபீஉனில் அவ்வல் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர். இன்னும் இது வணக்கம் என்றும், அதனால் நன்மை கிடைக்கும் என்றும் நம்புகின்றனர;. தங்களது இச்செயலுக்கு குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்ட முடியாத போது ‘நபியைத் தானே புகழ்கிறோம்’ என்ற ரெடிமெட் பதிலைக் கூறி பொது மக்களின் அறியாமையை தமக்கு சார்பாய் பயன்படுத்திக் கொள்கின்றனர;.

நபி (ஸல்) அவர;கள் தம் வாழ்வினில் தன் பிறந்த நாளையோ, தன் பிள்ளைகளின் பிறந்த நாளையோ தாமும் கொண்டாடியதில்லை. பிறரைக் கொண்டாடும்படி கூறவுமில்லை. இவ்வளவு ஏன்? நபி (ஸல்) அவர;களை அனைத்து அம்சங்களிலும் அணுவும் பிசகாது பின்பற்றி வந்த நாற்பெறும் கலீபாக்கள் உட்பட எந்தவொரு நபித் தோழரும் நபி (ஸல்) அவர;களுடைய பிறந்த நாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவுமில்லை. விழாக் கொண்டாடவுமில்லை. மாறாக, இஸ்லாமிய ஆண்டை நபியின் பிறந்த நாளிலிருந்து கணிக்காது அவர;களின் ‘ஹிஜ்ரத்’ பயணத்தை கவனத்திற் கொண்டு ஹிஜ்ரி ஆண்டை நிர;ணயம் செய்தமை கூட, ஸஹாபாக்கள் நபியவர;களின் பிறந்த தினத்திற்காக விழாக் கோலம் பூண்டு , நபியைப் போற்றி மவ்லூதுப் பாடல்கள் இசைத்து, பள்ளிகள் தோரும் விருந்துபசாரம் போடவில்லை என்பதற்கு தக்க சான்றாகும்.

மவ்லித் கொண்டாட்டம் எப்போது தோன்றியது?
மீலாத் தின கொண்டாட்டங்கள் நபி (ஸல்) அவர்களின் காலம் முதல் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கவில்லை. பாதிமா நாயகியின் பரம்பரையில் வந்தவர்கள் என தமக்கு பொய் நாமம் சூட்டிக் கொண்ட ‘பாதிமிய்யாக்கள்’ என்ற தீவிர ஷீஆப் பிரிவினரே மவ்லிதுகளை உருவாக்கினர;. பாதிமியீன்களின் நான்காவது கலீபாவாகிய ‘அல்முயிஸ் லிதீனில்லாஹி உபைதி’ என்பவன் தான் ஹிஜ்ரி 362ம் ஆண்டு மீலாத் கொண்டாட்டங்களைத் தோற்றுவித்தான். தனது ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர;ச்சி செய்யாமல் இருப்பதற்காகவும், மக்களின் கவனத்தை தம்பக்கம் ஈர;ப்பதற்காகவும் ‘மவ்லிதுன் நபி’ ‘மவலித அலி’ ‘மவ்லித ஹஸன்’ ‘மவ்லிது ஹுஸைன்’ ‘மவ்லிது பாதிமா’ ‘மவ்லிது கலீபதில் ஹாழிரர், என ஆறு மவ்லித்கள் சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்களை அக்காலத்தில் கருவறுத்த மேற்படி ஆடசியாளனால் தோற்றுவிக்கப்பட்டது. (ஆதாரம்: இமாம் அபூஷாமா அல் மக்கதிஸி (ரஹ்) எழுதிய ‘அர்ரவ்ழதைனி ஃபீ அக்பாரித்தவ்லதைனி’ என்ற நூலில் பாகம் : 1 பக்கம் : 201)

நபி (ஸல்) அவர்கள் தனது பிறந்த தினத்தை எப்படிக் கழித்தார்கள்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் ‘திங்கற் கிழமை நோன்பு (ஏன் பிடிக்க வேண்டும் என்பது) பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் “அதில் தான் நான் பிறந்தேன். அதில் தான் நான் நபியாக அனுப்பப்பட்டேன். அதிலே எனக்கு அல்குர;ஆன் அருளப்பட்டது” என்றார்கள்.        
அறிவிப்பவர்: அபூ கதாதா (ரழி) நூல்: முஸ்லிம்

இந்த நபிமொழி மீலாதுன் நபி தினத்தை கொண்டாடக் கூடாது என்று வலியுறுத்துவதோடு மட்டுமல்லாது, அன்றைய தினம் நோன்பு நோற்பது தான் நபிவழியென்றும் அதுவே நபியை நேசிப்பதற்கு உகந்த வழி என்றும் சொல்கிறது.  நீண்ட ஜுப்பாவுக்குள் ஒளிந்த கொண்டு, தலைப்பாகைக்;குள் மூலையை அடகு வைத்து, வயிற்றுப் பிழைப்புக்காய் மார்க்கம் பேசும் சில உல(க்க)மாக்கள் நோன்பு நோற்பதற்குப் பதிலாக பள்ளிவாயல் தோரும் விருந்து சமைத்து, மவ்லூது ஓதி, பெரிய கூத்தும் கொண்டாட்டமும் நடத்துகிறார;கள்.  எங்களுக்கு தீன் முக்கியமல்ல. தீனிதான் முக்கியம் என்பதுவே இவர;களது உள்நோக்கமாக இருக்கிறது. இவர;களுக்கு ஜால்ரா அடித்து கூஜா தூக்கும் சில சில்லறைகளும், ‘இஸ்லாத்தை வாழ்வில் அனைத்துக் கோணங்களிலும் அமுல்படுத்த வேண்டும், அல்லாஹ்வின் சட்டங்கள் ஆட்சிபீடம் ஏற வேண்டும், என்ற கோஷத்துக்குள் பதுங்கிக் கொண்டு தீமையைக் கண்டும் காணாதவர்கள் போன்று யூத- நஸாராக்களின் ஸ்டைலில் நடைபயின்று, அசத்தியத்தோடு சமரசம் செய்யும் இயக்கவாதிகளும் இந்த அனாச்சாரத்துக்கு துணைபோவது தான் வேதனைக்கும் வெறுப்புக்குமுறிய அம்சமாகும்.

அரபுப் பாடல்கள் வணக்கமாகுமா?
நபி (ஸல்) அவர;களது புகழை பாடுவதற்காக வேண்டி அரபியில் எழுதப்பட்ட சில பாடல்கள் தான் ‘மவ்லூத்’ எனப்படுகிறது. நன்மை எனக் கருதி, பக்திப் பரவசத்தோடு சினிமா மெட்டுகளில் இவர்கள் ஒதிவரும் இம் மவ்லூத் இவர்களை அல்லாஹ்வின் மன்னிப்புக்கே அப்பாற்பட்ட ‘ஷிர்க்’ எனும் இணைவைத்தலின் பால் இட்டுச் செல்வதை இவர்கள் அறியாமல் இருக்கின்றனர். அல்லாஹ்வின் தூதர் அவர்களை புகழ்கிறோம் என்ற தோரணையில் அத்தூதர; கொண்டுவந்த கலிமாவுக்கே களங்கம் விளைவிக்கக் கூடிய, அத்தூதர; போதித்த அல்குர;ஆனுடனேயே நேரடியாக மோதக் கூடிய பல நச்சுக் கருத்துக்கள் இம்மவ்லூதிலே இடம்பெற்றுள்ளன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக ஒன்றிரண்டை உங்கள் முன் வைக்கிறோம்.
மவ்லூத் வரி
·    (நபியே!) நீர் பாவங்களை மன்னிப்பவராகவும் முன் பின் செய்த பாவங்களை பொருத்தருளக் கூடியவராயும் இருக்கிறீர். (சுப்ஹான மவ்லித் ‘யா நபி’ பைத் 11வது வரி)
அல் குர்ஆன் வசனம்
·    அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (3: 135)
மவ்லூத் வரி
·    மறைவானவற்றையும் வெளிரங்கமானவற்றையும் அறிந்த ஞானி, பிரார;த்தனைகளை அங்கீகரிப்பவர். (சுப்ஹான மவ்லித் ‘யா நபி’ பைத் 15வது வரி)
அல் குர்ஆன் வசனம்   
·    (அல்லாஹ், அவனே) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிகின்றவன். (6: 73)

மவ்லூதை ஒரு  மார்க்கக் கடமையாக கருதும் அன்பு சகோதர சகோதரிகளே! சிந்தியுங்கள்!
அல்லாஹுத் தஆலா எந்தப் பாவத்தையும் மன்னிக்கத் தயாராக இருப்பதாகவும், தனக்கு இணைவைக்கப்படுவதை மட்டும் மன்னிக்கவே மாட்டான் என்றும் அல்குர்ஆனிலே பறைசாட்டுகிறான். (பார்க்க 4: 116)

அல்லாஹ்வின் இந்தப் பயங்கர எச்சரிக்கையை பொருப்படுத்தாது, நாம் பாசை புரியாத காரணத்தால் நபியவர்களை புகழ்வதாகக் கருதி அல்லாஹ்வின் அந்தஸ்துக்கல்லவா உயர்த்துகிறோம்? சிந்தித்துப் பாருங்கள்!

இந்த மவ்லூது நூற்கள் வெறும் அரபுப் பாடல்களே, அவை ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் சில அரபுக் கவிஞா;களால் தொகுக்கப்பட்டவைகளேயன்றி அல்லாஹ்வால் அருளப்பட்ட ஒரு வேதம் அல்ல. இந்த மவலூத் அறிமுகப்படுத்தப்பட்டமைக்கு முழு முதல் காரணமே, சாப்பாடு, தட்சனை என்பனவே என்றால் அது மிகையல்ல. இவர;களின் சாப்பாட்டுக் கொள்கைக்கு மவ்லூது நூற்களே வக்காலத்து வாங்குவதை இதோ பாருங்கள்.

1-    ‘சோறு போட்டவர;களுக்கு நன்றி உண்டாவதாக’ ஷாஹுல் ஹமீது மவ்லூத் 4வது பைத் கடைசி வரி.
2-    ‘கொழுத்த குரபானி கறிச்சோறு போட்டவருக்கு நன்றி உண்டாவதாக’ பலாஹுன் நஜாஉன் பைத் கடைசி வரி.
3-    ‘சாப்பிடுங்கள் என்ற கூறுபருக்கு நன்றி உண்டாவதாக’ஷாஹுல் ஹமீது மவ்லூத் 6வது பைத் கடைசி வரி.

4-    ‘சமையற் காரருக்கு நன்றி உண்டாவதாக’ ஷாஹுல் ஹமீது மவ்லூத் 7,10,12ம் பைத் கடைசி வரி.
5-    ‘சூடான காப்பி கொடுத்தவருக்கு நன்றி உண்டாவதாக’ ஷாஹுல் ஹமீது மவ்லூத் 8வது பைத் கடைசி வரி.

ஏதோ அரபியில் நபியையும், நாதாக்களையும், புகழ்கிறோம் என்ற எண்ணுகிறீர;களே! இங்கே புகழும் நன்றியும் யாருக்கெல்லாம இருக்கிறது பார்த்தீர்களா? ‘பசி வந்தால் பத்தும் பரக்கும்’ என்பர். இங்கு இறைபக்தியும் பறப்பது தான் வேதனையான விடயம்.

நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு வைப்பது எப்படி?
நபி (ஸல்) அவா;கள் மீது வைத்துள்ள அன்பும் பாசமும் தான் உங்களை மவ்லூத் ஓத வைக்கிறது என்பது உண்மையானால் அந்த பாசத்தை வெளிப்படுத்த வேண்டிய முறை, நபியவர்கள் ஏவியதை எடுத்து நடப்பதும் அவா; தடுத்தவற்றை விட்டும் விலகி நடப்பதும் தான். “நபியே நீh; கூறும்: ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீh;களானால் என்னை பின்பற்றுங்கள்.அல்லாஹ் உங்களை நேசிப்பான்.உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்.” (3:31)

“உங்கள் தூதா; உங்களுக்கு கொண்டு வந்ததை எடுத்து நடங்கள்.அவர் தடுத்தவற்றை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்” (59: 07)

எமது வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் வணக்க வழிபாடுகளையும் அல்குர்ஆன் அஸ்ஸூன்னா எனும் உரை கல்லுடன் உரசிப்பார்த்து, அனைத்து வழிகேடுகளையும் விட்டு விலகி வாழ்வதே நபி மீது நாம் காட்டும் உண்மையான அன்பும் நேசமும் ஆகும்.எனவே, மேற்குறிப்பிட்ட ஆதாரங்களில் இருந்து மீலாது விழா கொண்டாடுவதோ மவ்லூது சபைக்கு சமூகம் அளிப்பதோ அல்லது அதற்காக சமா;ப்பிக்கும் உணவை சாப்பிடுவதோ, மவ்லூது ஓதி பணம் சம்பாதிப்பதோ, அதனை ஆதாpத்து பேசுவதோ, மீலாது விழா போட்டி நிகழ்ச்சிகளை பாடசாலை மற்றும் பள்ளிவாசல்கள் தோரும் ஏற்பாடு செய்வதுடன், அவற்றில் தம் பிள்ளைகளை கலந்து கொள்ளச் செய்வதோ ஹவ்லுல் கவ்ஸரில் நீர்அருந்தும் பாக்கியத்தை விலக்கச் செய்வதோடு, நரகப்படுகுழியில் கொண்டு போய் எம்மை வீழ்த்த வல்லது என்பதனை உள்ளத்தில் இருத்தி செயற்படுவோமாக! அத்தோடு, முஸ்லிம்களின் இரத்தத்தில் இரண்டரக்கலந்துவிட்ட ஷிh;க், பித்அத்,மூடநம்பிக்கைகள் போன்ற புற்றுநோய்களை அகற்றும் பணியில் இஸ்லாத்தை கற்றறிந்த ஆலிம்கள் அனைவரும் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது களத்தில் இறங்கி செயற்பட வேண்டும் எனவும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

குறிப்பு : மவ்லூது ஓதி, மீலாது விழா கொண்டாடுவதன் மூலம் தான் நபியின் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த முடியும் என்று அடமபிடிக்கும் ஆலிம்கள் இருந்தால் தயவு செய்து மிம்பர்களையும் வேறு மேடைகளையும் கிடைத்தது சந்தர்ப்பம் என்று அவற்றினை பயன்படுத்தி பாமர மக்களை குழப்புவதை விட்டு விட்டு, ஓர் அழகிய பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அன்பு அழைப்பு விடுக்கின்றோம்.   

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP