26.4.12

முஜத்தித் வேசம் போடும் முகல்லித் ‘ரிஸ்வான் மதனி’

அபூ கப்பாப்

எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி என்பவர் பலவேசத்தில் முஜ்தஹிதுகள் பற்றி ஒரு கட்டுரை என்று உளறிக் கொட்டியிருந்தார். பண்பற்ற பலவேசத்தினரும் பகுத்தறிவின்றி அதைப் பதிவேற்றியிருந்தனர். அனைத்து சாக்கடைகளின் களஞ்சியமாகப் பயன்பட்டு வரும் எந்தக் கொள்கையும் இல்லாத பலவேசம்டொட்கொம் எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனியின் இந்த உளரலையும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளது.
மூளையற்ற மூர்க்கத்தனம்தான் மார்க்கம் என்று நினைக்கும் உளரல் உளநோயாளிகளுக்கு மறுப்பளிக்க முன்னர் இஜ்திஹாத் பற்றி வாய்திறக்கவாவது இவர்களுக்கு நாதியிருக்கிறதா? என்பதை முதலில் பார்த்துவிட்டு இவர் என்ன உளரியுள்ளார் என்பதை நோக்குவோம்.

Read more...

தோல்வியை மறைப்பதற்காக அவதூறு பரப்பும் அசத்தியவாதிகள்


இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது? என்ற விவாதத்தில் தோற்ற  சுன்னத் ஜமாஅத் வேடமிட்ட போலித் தப்லீக் ஜமாஅத்தினர் அடுக்கடுக்காக நாம் அவர்களின் மத்ஹபு இஜ்மா – கியாஸ் ஆகியவற்றிலுள்ள ஆபாச அரக்கத்தனங்களை அள்ளிப் போட்டபோது, பதில் சொல்ல முடியாமால் விழி பிதுங்கிய இவர்கள் கேள்வி – பதில் நேரத்திலும் விவாதத்தின் போதும் குர்ஆனில் தாங்களாகவே சில விஷயங்களை சேர்த்துக் கொண்டதாக ஒப்புக் கொண்டனர். மேலும் பதில் சொல்ல முடியால் இழி நிலையையும் அடைந்தனர்.


தற்போது இவர்கள் தங்கள் தோல்வியை மறைப்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தினர் குர்ஆனை மறுப்பதாக குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். இவர்கள் இப்போது பரப்பும் அனைத்துக்கும் முன்னரே பதில் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் அவதூறுக்கான பின்வரும் பதிலை பார்க்கவும்.

Read more...

19.4.12

சிறப்பாக நடைபெற்ற SLTJசிலாபம் கிளையின் முதலாவது இரத்த தான முகாம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் கிளை முதல் முறையாக ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த தான முகாம் SLTJ சிலாபம் கிளை காரியாலயத்தில் 15.O4.2012ம் திகதி அல்லாஹ்வின் உதவியுடன் மிக சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்!  இந்த இரத்த தான முகாமில் பெண்கள் உட்பட 48 நபர்கள் இரத்தம் தானம் செய்தனர். இந்த வருடத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற மூன்றாவது இரத்ததான முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

18.4.12

தப்லீக் ஜமாஅத்துடன் ஒரு விவாதம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் ஹெம்மாதகமை இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்க(தப்லீக் ஜமாஅத்)த்திற்கும் இடையிலான 
பகிரங்க விவாதம்.
விவாத நாள்:  
ஏப்ரல் 21,22 (சனி, ஞாயிறு)
விவாத தலைப்பு:
“இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் எவை?”
நிலைப்பாடுகள்:
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு
 “இஸ்லாத்தின் அடிப்படை சட்ட மூலாதாரம் வஹியாகும். இவ்வஹி குர்ஆனும், ஆதார பூர்வமான நபி வழி மட்டுமே ஆகும். இதைப் பின்பற்றுவது மட்டுமே நேர்வழி. இதுவல்லாத இஜ்மா, கியாஸ், நபித் தோழர்களின் சொல், செயல், அங்கீகாரத்தை இஸ்லாத்தின் மூலாதாரமாக ஏற்றுப் பின்பற்றுவது வழிகேடாகும். மேலும் நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ள மத்ஹபுகளிலும், தப்ஸீர்களிலும், சட்ட நூல்களிலும் இஸ்லாத்திற்கு எதிரான சட்டங்களும், அசிங்கங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படுகின்றன. எனவே இவை பின்பற்றத் தகுதியற்றவை.”
ஹெம்மாதகமை இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கத்தின் நிலைப்பாடு
இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும், இஜ்மாவும், கியாசுமாகும். 
இடம்:
ஹெம்மாதகமை அல் அஸ்ஹர் நவோதய பாடசாலை கேட்போர் கூடம்
விவாதிப்போர்:
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாரபாக
  1. எம்.ஐ. சுலைமான்
  2. கே.எம். அப்துந் நாஸர்
  3. எஸ்.எச். அபாஸ் அலி
  4. எம்.டீ.எம். பரஸான்
  5. எம்.டீ.எம். பரளீன்
  6. எப்.எம். ரஸ்மின்
  7. ஏ.ஜீ. ஹிஷாம்
ஹெம்மாதகமை இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கம் சார்பாக
  1. மௌலவி அப்துல்லாஹ்
  2. மௌலவி முஜீபுர் ரஹ்மான்
  3. மௌலவி அப்துல் காதர்
  4. மௌலவி அஹ்மத்
  5. மௌலவி அப்துர் ரஹ்மான்
  6. மௌலவி அன்பஸ்
  7. மௌலவி அப்ரூஸ்

Read more...

10.4.12

சிலாபத்தில் மாபெரும் இரத்த தான முகாம்


Read more...

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP