முஜத்தித் வேசம் போடும் முகல்லித் ‘ரிஸ்வான் மதனி’
அபூ கப்பாப்
எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி என்பவர் பலவேசத்தில் முஜ்தஹிதுகள் பற்றி ஒரு கட்டுரை என்று உளறிக் கொட்டியிருந்தார். பண்பற்ற பலவேசத்தினரும் பகுத்தறிவின்றி அதைப் பதிவேற்றியிருந்தனர். அனைத்து சாக்கடைகளின் களஞ்சியமாகப் பயன்பட்டு வரும் எந்தக் கொள்கையும் இல்லாத பலவேசம்டொட்கொம் எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனியின் இந்த உளரலையும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளது.
மூளையற்ற மூர்க்கத்தனம்தான் மார்க்கம்
என்று நினைக்கும் உளரல் உளநோயாளிகளுக்கு மறுப்பளிக்க முன்னர் இஜ்திஹாத்
பற்றி வாய்திறக்கவாவது இவர்களுக்கு நாதியிருக்கிறதா? என்பதை முதலில்
பார்த்துவிட்டு இவர் என்ன உளரியுள்ளார் என்பதை நோக்குவோம்.
“அவ்விரண்டிலும் காணப்படாத அம்சங்களுக்கான
தீரர்வை அவை இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்பட்ட
பெரும்பாண்மை அறிஞர்களின் அங்கீககாரத்தைப் பெற்ற இஜ்மாவின் அடிப்படையிலும்,
கியாஸ் என்ற அணுமான விளக்கத்தின் அடிப்படையிலும் தமது கவனத்தைத்
திருப்பினர். அவ்விரண்டையும் துணை மூலாதாரங்கள் என்று பிற்காலத்தில்
அழைத்தனர்.”என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அல்குர்ஆனிலும், ஆதாரபூர்வமான ஹதீஸிலும்
காணப்படாத விடயங்கள் என்று இவர் சொன்னதில் இருந்து இஸ்லாத்தில் ஈமான் கொள்ள
வேண்டிய 6 அம்சங்களில் வேதத்தை மறுக்கும் குப்ரை இவர் செய்திருப்பது இவரது
மூளைக்கோளாறு என்று நாம் சொல்லமாட்டோம். மூளை உள்ளவனுக்குத்தான் அதில்
கோளாறா இல்லையா என்ற பிரச்சினையே வரும்.
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை இனங் கண்டு
அவை ஹதீஸ்கள் அல்ல என்று கூறும் பீஜே அவர்களை “ஹதீஸை மறுப்பவர் என்று”
மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் செய்யும் இந்தப் புரளிக் கூட்டத்தை அல்லாஹ்
இவ்வளவு சீக்கிரம் சீரழிப்பான் என்று நாம் நினைக்கவில்லை.
குர்ஆனிலும்ää ஹதீஸிலும் இருப்பது
தனக்குத் தெரியவில்லை என்று கூறுவது தனக்குக் கௌரவப் பிரச்சினை என்பதற்காக
அவ்விரண்டிலும் இல்லை என்று வாதிடுவது மொத்த வஹியை மறுத்ததாக ஆகாதா? மறுத்த
மதனி ரிஸ்வான் அவர்களே! மண்டையை மாட்டுக் கொம்பிலாவது உரசிப் பாருங்கள்.
காப்பியடிக்கும் முஜ்தஹிதுகள் என்று மிகச்
சரியாக என்மைப் பார்த்துக் கூறியிருக்கிறீர்கள். எந்தப் பிரச்சினையானாலும்
அதற்கான தீர்வு குர்ஆனிலும் ஹதீஸிலும் உண்டு என்பதே உண்மையும் எமது
நம்பிக்கையும் ஆகும். அவ்விரண்டையும் காப்பியடித்தே எமது அத்தனை
பிரச்சாரங்களும் மார்க்கத்தீர்ப்புகளும் அமையும். ஆனால் உங்கள் நிலை
அவ்வாறானதல்ல என்பதை தெளிவாக நீங்களே உளரிக் கொட்டியுள்ளீர்கள்.
இவ்விரண்டிலும் இல்லாத உங்களால் உருவாக்கப்பட்டு நீங்களே அதை மார்க்கம்
என்று கூறிக்கொள்ளும் எந்தவொரு விடயமும் யாருடைய காப்பியும் அல்ல என்பது
நீங்ளே ஏற்றுக்கொண்ட ஒன்றுதான். எனவே நீங்களும் உங்களைப் போன்றவர்களும்
இஜ்மா, கியாஸ் என்ற பெயரில் புதிதாகத் தோற்றுவிக்கும் அனைத்து
பித்அத்துகளும் காப்பிகட் அல்ல என்ற உண்மையை இவ்வளவு அழகாகத்
தெரிந்துவைத்திருக்கும் உங்களுக்கு ஒருவேளை மூளை இருக்குமோ என்றும் எண்ணத்
தோணுது. (நீங்கள் எழுதிய இந்த ஆக்கமும் யாரோ ஒருவரது கொபிகட்டாக இருந்தால்
மூளையுள்ளவர் என்று உங்களைத் தவறாக நினைத்ததற்கு மன்னிக்கவும்.)
இவர்ää கப்பியடிக்கும் போலி முஜ்தஹித்கள்
என்று தவ்ஹீத் ஜமாஅத் பிரமுகர்களை பலவேசத்தில் பலவாறு தூற்றியுள்ளார்.
அதில் இவர் உண்மையாளராக இருந்தால் இவர் காப்பியடிக்காமல் இருக்க வேண்டும்.
இவரும் சேர்ந்து செய்த காப்பியடித்த தர்ஜமா இவரது வக்கிர புத்தியை
அடையாப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இவர் மட்டுமல்ல இவரோடு பலவேசம் போடும் ஒரு
கூட்டமே பீஜேவுடைய தர்ஜமாவைக் காப்பியடித்துள்ளது. அறிஞர் பீஜே அவர்களுடைய
தர்ஜமா “ஸ்டைல்”இ குறிப்புக்கள் அனைத்தையும் இவர்கள் கள்ளத் தனமாக காப்பி
அடித்தார்கள் என்பதை அறிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து அறிந்து
கொள்ளவும்.
நளீமிய்யாவிலிருந்து வெளிவரும் இஸ்லாமிய
சிந்தனையில் வெளியான மெஸ்மரிசம், டெலிபதி போன்ற விடயங்களையும் திருட்டுத்
தனமாகக் காப்பி அடித்துவிட்டு மேலே பார்த்துத் துப்புகிறார் இந்த மதம்
பிடித்த மதனி.
இஸ்லாமிய சிந்தனையிலிருந்து காப்பியடித்தை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும்
காப்பியடித்துக்
கொண்டே கட்சி அரசியல் மமகவுடன் கலந்து காணாமல் போய்க் கொண்டிருக்கும்
இவர், தனித்துவப் பண்புக் கூறுகளுடன் செழித்தோங்கும் தவ்ஹீத் ஜமாஅத்துடன்
இவ்வளவு கொதித்துப் பாய்கின்றவர், இஸ்லாத்தின் மீதும் அதை தூய முறையில்
சமர்ப்பித்த நபி மீதும் கடுகளவேனும் பாசமுள்ளவராக இருநதிருந்தால் மன்னார்
வேப்பங்குளம் என்ற இவரது சொந்தக் கிராமத்தில் இரண்டு பாங்குகளோடு இவர்
ஜும்ஆ உரை செய்திருப்பாரா? இவரது இரட்டைவேடம் தெளிவாகத் தெரிகிறது. ஆற்ப
உலக ஆதாயத்திற்காக ஆல்குர்ஆனுக்கு முரண்படாத ஹதீஸைக் கூட இவர்
மறுத்துள்ளார். ஹதீஸைப் பாதுகாக்கும் இவரது இலட்சணம் இதுதான் என்பதை மக்கள்
புரிந்து கொள்ளட்டும்!
இவருக்குப் படியளக்கும் சித்தீக் மதனி
தெளிவான நபிமொழியைப் பறக்கணித்து ஜும்ஆவுக்கு இரண்டு பாங்கு என்ற
பித்அத்தைப் புகுத்தி வருகிறார்.அவரைத் திருப்திப் படுத்தி சம்பளம்
தடைப்படாமல் இருக்கவே இந்த நாடகம் என்பது புலனாகிறது.
இவது கட்டுரையில் பதில் அளிக்கத் தக்க
எந்த வாதமும் இல்லை.ஓர் இடத்தில் யாரும் இதுவரை சொல்லாத கருத்துக்களை
கூறுகிறார்கள் என்று எழுதுகிறார்.அதனைத் தொடர்ந்து முன்னை அறிஞர்களிடம்
காப்பியடிக்கிறார்கள் என்கிறார். இதை சுய சிந்தனையுடன் தான் எழுதினாரா
என்று சிந்திக்கும் மக்களுக்குப் புரிவது கடினமானதல்ல.
நன்றி: அழைப்பு
0 comments:
Post a Comment