1.11.11

பன்றித் தோல் வியாபாரம் கூடுமா? (Face book விவாதம்) Part 3

பன்றித் தோல் வியாபாரம் சம்பந்தமாக எமது பிரச்சாரகர் சகோதரர் ரஸ்மி அவர்களுக்கும் அஹ்மத் ஹூசைன் என்ற ஸலபிக்கும் இடையில் நடந்த எழுத்து விவாதம்.

Roohul Razmi
சகோதரர் அஹ்மது ஹூசைன்
அடுத்தவன் மூளையில் ஆடவந்தால் இதுதான் நடக்கும். நீங்கள் எழுதியதை மீண்டும் சாரம்சமாக சொல்கிறேன். 

செத்த ஆடு உண்ணத்தான் தடை. ஆனால் பன்றியோ உண்ணவும் தடை விற்கவும் தடை. இதனால் பன்றித் தோலுக்கும் செத்த ஆட்டுத்தோலுக்கும் வித்தியாசம் உண்டு. என்று கூறி நாம் ஒரு ஹதீஸை தப்பாக விளங்கியதாகக் கூறினீர்கள்.

அது இந்த ஹதீஸ்தான். (இங்கு நான் எழுதும் குர்ஆன், ஹதீஸ் வாசகம் அனைத்தும் நீங்கள் எழுதியதை கொபி, பேஸ்ட் பன்னித்தான்)

//அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள்/ ஒரு செத்த ஆட்டைக் கடந்து சென்றபோது/ ,,இதன் தோலை நீஙகள் பயன்படுத்தக்கூடாதா,, என்று கேட்டார்கள். நபித்தோழர்கள்/ ,,இது செத்த ஆடாயிற்றே!,, என்றனர். அதற்கு ,,அதை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது!,, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.//

இந்த ஹதீஸை நாம் எவ்வாறு தப்பாக விளங்கியுள்ளோம் என்று நீங்கள் கூறும் போது

//அதை உன்பதை தான் தடை உள்ளது என்ற இந்த நபியின் வார்த்தை யில் அழகிய விளக்கம் உல்லது.இதன் விலக்கம் " செத்த ஆடு மற்றும் எந்த ஹராமான மிருகம் ஆனாலும் அதை உன்பதை தடை உல்லது. ஆனால் பன்றியை விற்க வே தடை உல்லது. "//

//சாப்பிட தடை செய்யப்பட்ட மற்ற மிருகங்கள் விற்பதற்கு தடை இல்லை. ஏன் என்றால், அவைகள் சாப்பிட மட்டுமே ஹராம். மற்ற விஷியங்களுக்கு அவைகளை பயன் படுத்தி கொல்லலாம். ஆனால் சாப்பிடுவதர்க்கு மட்டும் இல்லை, எதர்க்கு பயன் படுத்த கூடாது என்பதால் தான் பன்றியை விற்பதர்க்கே தடை உள்ளது.//

நீங்கள் இவ்வாறு கூறிவிட்டு அடுத்த வரியிலேயே 
//தானாக செற்றவையும்இ பன்றியையும் நபி(ஸ) அவர்கள் விற்க தடை செய்துள்ளார்கள் என்பது ஹதீஸ் மூலமாக தெளிவாகிறது // என்று உங்களுக்கு நீங்களே முரண்பட்டது தனி விடயம்.
பன்றியை விற்பதற்குத் தடை என்று கூறிவிட்டு அதற்கு ஆதாரமாக 2 விடயங்களைக் கூறினீர்கள்.

நீங்கள் வைத்த முதல் ஆதாரம்

//1.அல்லாஹ் கூறிகிறான் 6:145. (நபியே!) நீர் கூறும்: தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங்கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.//

//நபி (ஸல்) அவர்கள் ஒரு அடிப்படையான விஷயத்தை கற்று தருகிறார்கள்... நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் அல்லாஹ் ஒன்றை தடுத்தால் அதன் தன்மையும் செய்து தான் தடுக்கிறான்.//

(எந்தக் கிறுக்கன் மொழிபெயர்ப்போ தெரியல)

இதிலிருந்து நீங்கள் சொல்வது பன்றி விற்கத் தடை. 

நான் சொன்னது என்னவென்றால்
இதில் பன்றி விற்பது தடை என்று மட்டும் வரல. தாமாகச் செத்த அனைத்தும் ஹராம் என்றுதான் வரும். 
ஏனெனில்

பன்றி மாமிசம் ஹராம் என்று குர்ஆன் கூறுகிறது. ஹராமாக்கியது விற்கவும் தடையென்று ஹதீஸ் கூறுகிறது. எனவே பன்றி விற்றல் தடை என்று நீங்கள் முடிவு செய்வது போல தாமாக செத்தவை ஹராம் என்று குர்ஆன் சொல்கிறது. ஹராம் என்றால் விற்கவும் தடை என்று ஹதீஸ் கூறுகிறது. எனவே தாமாக ஆடு செத்தாலும் அது பன்றியைப் போன்றே விற்கவும் தடை. செத்த ஆடும் விற்கத் தடை. பன்றியும் விற்கத் தடை என்று வந்துவிட்டதா?
இப்போ உங்க பாணியிலேயே கேட்கிறேன். யாருடைய பன்றி, செத்த ஆட்டுத் தோலை நீங்கள் உரிப்பீர்கள்??? உங்களுடைய பன்றியாக, செத்த ஆடாக இருந்தால் .. அதை வாங்குவதே ஹராம்.... இல்லை இல்லை நான் பன்றியை, செத்த ஆட்டை வாங்க மாட்டேன், பதம் படுத்திய தோலை மட்டும் தான் வாங்குவேன் என்று சொன்னால்....அப்போ நீங்கள் மற்றவரை ஹராமான செயலை செய்ய தூண்டுகிறீர்கள்..அதாவது.. மற்றவர்கள் பன்றியை, செத்த ஆட்டை வாங்கி, அதன் தோலை உரித்து , அதை பதம் படுத்தி பிறகு நீங்கள் அதை வாங்குவீர்கள் ..அப்படி தானே.!!! அப்போ நீங்கள் பன்றி வியாபாரத்தை, செத்த ஆட்டு வியாபாரத்தை ஊக்க படுத்துரீர்கள். இதுவே ஹராம் ஆச்சே..

செத்த ஆடு விற்கத் தடை எனும் போது அதனை யார் வாங்கி யார் விற்று தோலைப் பதப்படுத்தினார்
செத்த ஆட்டுத் தோலும் பதனிட முடியாது. அது ஹராம் என்று நீங்கள் சொன்னால்தான் உங்கள் வாதம் நிற்கும்.
உங்கள் முதல் ஆதாரத்துக்கு பதிலாச்சா

சுமப்பது பற்றி இந்த இடத்தில் நீங்கள் ஆதாரம் வைக்கவில்லை. நீங்கள் வைத்த இடத்தில் விளக்குகிறேன்.
உங்கள் இரண்டாவது ஆதாரம்

//2 . 2236. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!" என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கூடாது! அது விலக்கப்பட்டது!' எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!" என்று கூறினார்கள். 
Volume :2 Book :34//

இதிலிருந்தும் மேலே சொன்னது போன்றே சொன்னீர்கள். முழுமையாவே அதையும் எழுதுகிறேன்.

இதிலிருந்து நீங்கள் சொல்வது பன்றி விற்கத் தடை. 

நான் சொன்னது என்னவென்றால்
இதில் பன்றி விற்பது தடை என்று மட்டும் வரல. தாமாகச் செத்த அனைத்தும் விற்கத் தடை என்றுதான் நேரடியாக ஹதீஸில் உள்ளது. 
எனவே பன்றிக்கு நீங்கள் கேட்ட கேள்வியை செத்த ஆட்டுக்கும் கேட்கலாம். 
பன்றி விற்கத் தடை என்று காட்டிய உங்களுக்கு அதை வாங்க, சுமக்கத் தடை உள்ளது என்றும் காட்டவேண்டிய தேவை இருந்தது.
இதற்காக நீங்கள் எடுத்த உதாரணம்தான் மதுசாரம். இதை இவ்வாறு தெளிவுபடுத்தினீர்கள்.

//மேல கூறிய குரான் வசனமும் மற்றும் ஹதீஸிலும் தெழிவாக புரிந்து கொள்ளலாம்..
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் அல்லாஹ் ஒன்றை தடுத்தால் அதன் தன்மையும் செய்து தான் தடுக்கிறான். நபி (ஸல்) அவர்கள் சாராயத்தை சபித்தார்கள் அதாவது .. யார் அதை குடிக்கிறோ, யார் அதை விற்பனை செய்கிறாரோ, யார் அதை வாங்கிரரோ, யார் அதை சுமந்து செல்கிறாரோ etc ...//

//அதே போல் தான் பன்றி விஷயமும் ..யார் அதை வளர்கிறாரோ, யார் அதை உன்னுகிறாரோ, யார் அதை விற்பனை செய்கிறாரோ, யார் அதை வாங்கிரரோ, யார் அதை சுமந்து செல்கிறாரோ etc ...//

சாராயத்தைப் போல்தான் பன்றி விஷயமும் என்று யார் அதை வளர்கிறாரோ, யார் அதை உன்னுகிறாரோ, யார் அதை விற்பனை செய்கிறாரோ, யார் அதை வாங்கிரரோ, யார் அதை சுமந்து செல்கிறாரோ என்று அடுக்கிக் கொண்டே சென்றீர்கள். 
சாராயத்தக்கு அவ்வாறு ஹதீஸ் உள்ளதால் சொன்னீர்கள். இதே போன்று பன்றிக்கும் உள்ளது என்று காட்டிவிட்டு சுமப்பது பற்றிப் பேசலாம்.

இதில் இரண்டாவது விடயம் என்னவென்றால், உங்கள் உதாரணத்தினாலேயே உங்கள் கண்ணை நான் குத்தியது.

பன்றித்தோல் பதனிடும் போது செருப்பு. செருப்பை ஹராம் என்கிறீர்கள். ஏனெனில் செருப்பாகமுன் பன்றித் தோலைத் தூக்கியது யார் என்று கேட்டீர்கள். இப்போது நான் கேட்கிறேன், கள்ளு நொதித்துப் புளிக்கும் போது வினாகிரி. வினாகிரியாகுமுன் சாராயத்தைச் சுமந்தது யார்?
இவ்வாறு நான் கேட்டபோது நீங்கள் திடீரென்று விஞ்ஞானியாக மாறி விட்டீர்கள். பரவாயில்லை. ஆனால் ஆராய்ச்சிதான் கள்ளுக்கடையானது.

மதுசாரத்தில் பலவகையுண்டு என்று குறியீடு போட்டால் எல்லாம் எமது குறி தப்பிவிடாது. உங்கள் list இல் உள்ள இரண்டாவது சாமான்தான் (Ethyl alcohol (ethanol) CH3CH2OH) வினாகிரியாக மாறுகிறது. 

அடுத்த ஆராய்ச்சியில் Ethyl alcohol (ethanol) CH3CH2OH 
போதை வருமா என்று தெளிவாகக் குறிப்பிடுங்கள். நீங்கள் மயங்கும் அளவுக்கு நான் பதில் சொல்கிறேன்.

அதைப்பற்றித் தேட வக்கில்லையென்றால் அதற்கு நிகரான இன்னும் சில பெயர்களைத் தருகிறேன். அது போதையா இல்லையா என்று சொல்லுங்கள்.
எதைல் அல்ககோல், தூய அல்ககோல், அருந்தும் அல்ககோல்

இந்தக் கிறுக்கு மீண்டும் உளறத் தொடங்கிவிட்டது. பன்றி மாமிசத்தில் உள்ள சரக்கையெல்லாம் பதனிட்ட தோலுக்கும் கொடுத்துவிட்டது. பச்சைப் பன்றித் தோல் பற்றியோ அதன் உண்ணப்படும் பாகம் பற்றியோ நாம் கதைக்கல. பதனிடப்பட்ட பன்றித் தோல் பற்றிக் கதைக்கப்படுகிறது. நீங்கள் எப்படிக் காட்டவேண்டும் தெரியுமா?

பதனிடப்பட்ட பன்றித்தோலை சாப்பிடாமல் காலுக்கு அணிவதால் இன்னின்ன கேடு உண்டு என்று காட்டனும். இந்தக் கிறுக்குக்கும் பதில் சொல்ல நேர்ந்ததே!

இதையே அல்ககோலிலும் கேட்கலாம். சராயத்துக்கு இன்னின்ன இன்னின்ன கெடுதி இருக்கிறது. எனவே வினாகிரி கூடாது. என்ன வாதம்???
September 26 at 9:42pm 

Ahamed Hussain 
இன்ஷா அல்லாஹ் நாளை நீங்கள் அனைத்திற்கும் என் பதிலை தருகிறேன்..

Roohul Razmi
நான் உங்களுக்கு அளித்த பதிலில் கிறுக்கு என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தி உள்ளேன். Mohammad Sheik , safwan, shihan, sameer உள்ளிட்ட அனேகமானவர்கள் அதை நான் பாவித்து இருக்கக் கூடாது என்று அறிவுரை கூறினர். என்னை மன்னித்துக் கொள்ளவும். ஆரோக்கியமாகவே நாம் பேசுவோம். நான் எழுதியது என்னவென்று பார்க்காமல் உங்கள் பாட்டுக்கு நீங்கள் பதில் எழுதும் போது உறைப்பதற்கு ஏதாவது சொல்லனும் என்பதற்காகச் சொன்னேன்.September 26 at 11:30pm 

Ahamed Hussain 
 உங்கள் கற்பனையை கொண்டு ஹதீஸில் சொல்ல பட்ட கருத்தை மாற்றாதீர்கள். முதலில் ஆட்டையும் பன்றியும் ஒன்றாகுமா என்று பார்போம்..

* ஆடு உயிருடன் இருந்தால் அதை விக்க தடை இல்லை அனால் பன்றி உயிருடன் இருந்தால் அதை விக்க தடை உள்ளது..
* ஆடு உயிருடன் இருந்தால் அதை இஸ்லாத்தின் சட்ட படி அதை அறுத்து உண்ணலாம் ஆனால் பன்றி உண்பதற்கு தடை உள்ளது .
* ஆட்டின் இறைச்சி மற்றவருக்கு குடுக்கலாம் ஆனால் அதை அறுப்பதே தடை பிறகு இப்படி இறைச்சி மற்றவருக்கு குடுக்க முடியும் 
* ஆட்டை வீட்டில் வளர்க்கலாம் ஆனால் பன்றி வீட்டில் வளர்க்க தடை 
* ஆடை ஒருவருக்கு ஜகாத்தாக, சதக்கவாக அல்லது அன்பளிப்பாக தரலாம் ஆனால் பன்றி முற்றிலும் தடை
* ஆட்டின் பாலை குடிக்கலாம் ஆனால் பன்றி பால் குடிக்க தடை 

இது போன்று பல குணங்கள் மற்றும் வித்யாசத்தை சொல்லி கொண்டே போகலாம். ஏணி வைத்தாலும் எட்டாத நிலையம் இறுக்கும் வித்த்யாசங்கள் வெறும் செத்த ஆட்டை வைத்து செத்த பன்றி உடன் ஒப்பு இடுவது எந்த விதத்தில் நியாயம்.

அப்படியே ஒரு வேலை நபி (ஸல்) செத்த பன்றி கடந்து சென்றபோது இதன் தோலை நீஙகள் பயன்படுத்தக்கூடாதா,, என்று சொல்லுவர்கள???
என் உங்கள் சிந்தனை ஏன் இது போன்று சிந்திக்க மாட்டிகிரீர்கள். உங்கள் கற்பனையை ஒரு அளவு மேல் செல்லவேண்டாம். இது போன்ற சிந்தனையால் சில விபரீதத்தை உங்களுக்கு சொல்லுகிரீன் 
உதாரணமாக உங்கள் உங்கள் ஆய்வு பத்தி மற்றொரு ஹதீஸில் உங்கள் தலைவர் கூறியுள்ளார் வட்டி பணம் அன்பளிப்பாக தந்தால் வாங்கலாம் என்று..இதற்க்கு அவர் வைக்கும் ஆதாரம் 

பரீரா (ரலி) அவர்களுக்கு இறைச்சி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களிடம், இது பரீரா அவர்களுக்கு தருமமாக கிடைத்தது என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், இது அவருக்கு தருமமாகும். நமக்கு அன்பளிப்பாகம் என்று கூறினார்கள். 

இந்த ஹதீஸ் அடிப்படையை வைத்து நீங்கள் மிக பெரிய பாவம் என்று கறுத்தும் வட்டியை அன்பளிப்பாக தந்தால் அது ஹலால் ஆகிவிடும் என்று யாரும் சொல்லாத சட்டத்தை சொல்லி இருக்கிறார்.
உங்கள் ஆய்வு படி பார்த்தால் பன்றி இறைச்சி ஹராம் அதே போல் நபி (ஸல்) அவர்களுக்கு சதக்க பொருள் ஹராம் ...அப்போ அன்பளிப்பாக சதக்க பொருள் தரும் போது அது ஹலால் ஆகுகிறது... அதே போல் அன்பளிப்பாக பன்றி இறைச்சி தந்தால் அதுவும் ஹலால் ஆகுகிறது.. அதே போல் அனைத்து ஹராமான பொருலும் உங்கள் ஆய்வு படி அன்பளிப்பாக தந்தால் ஹலால் ஆகிவிடும்.
அப்போ உங்கள் கணக்கு படி யார் ஒருவர் அன்பளிப்பாக சாராயம், வட்டி, பன்றி இறைச்சி ரத்தம், செத்த மிருகம், அனைத்து ஹராமான பொருள்கள் அன்பளிப்பாக தந்தாள் உங்களுக்கு ஹலால் .. அப்படி தானா !!!!
உங்களை போல் சிந்தனை உடையவர்கள் வருவார்கள் என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் முன் எச்சரிக்கையாக கீழ் உள்ள ஹதீஸை சொன்னார்கள் 
“When Allaah forbids a thing, He (also) forbids its price.” Narrated by Abu Dawood, 3488; classed as saheeh by Shaykh al-Albaani in Ghaayat al-Maraam, 318. 
இதற்க்கு சுருக்கமான கருத்தை சொல்லுகிறேன் அல்லாஹ் ஒன்றை தடுத்தால் அதன் அதற்குரிய அனைத்து தன்மையும் செய்து தான் தடுக்கிறான்.

மேலும் அல்லாஹ் முன் எச்சரிக்கையாக கூறிகிறான் 

16:116. உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்.

இமாம் அவ்ஸாயி கூறினார்கள்: உங்களை நபி வழியில் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் நபிதோழர்கள் எங்கு நிறுத்தினார்களோ அங்கு நிறுத்துங்கள் .(அவர்களை விடஅதிகம் தெரிந்தவர்களை போல் பேசாதீர்கள் ) அவர்கள் என்ன கூறினார்களோ அதையே கூறுங்கள் அவர்கள் எதை விட்டும் விலகி இருந்தார்களோ அதை விட்டும் நீங்களும் விலகி இருங்கள் உங்கள் சலப் சாலிஹீன் (முன் சென்ற நல்லோர் ) பாதையிலே பயணம் செய்யுங்கள் .அவர்களுக்கு எது போதுமானதாக இருந்ததோ அதுவே உங்களுக்கும் போதுமானது .(அல்ஹுஜ்ஜா6)

இமாம் அவ்ஸாயி கூறினார்கள் சலப் உடைய அடிச்சுவடுகளை உறுதியாக பிடித்துக்கொள்ளுங்கள் மக்கள் உங்களை நிராகரித்தாலும் சரியே . மனிதர்கள் தங்கள் சுயகருதுக்களை எவ்வளவுதான் அலங்கரித்து சொன்னாலும் அதை ஏற்காதீர்கள் . இவ்விசயத்தில் நீங்கள் நேரான பாதையில் இருந்தால் .நிச்சயம் அல்லாஹ்வின் கட்டளை தெளிவாகிவிடும் .( பைககியின் அல்மத்கால் 233)
பதனிட பட்டாலும் பன்றி தோல் அசுத்தமாக நிலையில் தான் இறுக்கும் என்று இமாம் இப்னல் உதய்மீன் (ரஹிமஹுமுல்லாஹு அஜ்மயீன்) பத்வா குடுத்துலார்கள்.மேலும் Dr.Zakir Naik அவர்களும் இந்த கருத்தை மருத்துவ ரீதியாக சரி தான் என்று ஏற்று கொண்டார். இதற்க்கு பிறகு நீங்கள் பன்றி தோல் கூடும் என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்.
இப்போ ஒரு விஷயம் உங்கள் சந்தேகத்தை தருகிறதோ அதை இப்படி கையாலா வேண்டும் என்பதக்கு ஒரு ஹதீஸை வைத்தேன் ..அதை மீண்டும் தருகிறேன் ..

52. 'அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன அவற்றை மக்களில் பெரும்பாலலோர் அறிய மாட்டார்கள். எனவே, சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தம் மார்க்கத்திற்கும் தம் மானம் மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலம் விடுகிறார். சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் (கால் நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எச்சரிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் அவனால் தடை செய்யப்படடவையாகும். எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்hடல் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார். 

Volume :1 Book :

இதற்க்கு பிறகு நீங்கள் பன்றி தோல் ஹலால் என்று சொல்ல முன் வந்தால் .... அல்லாஹுவல் தடுக்க பட்ட அனைத்து புருட்களும் அன்பளிப்பு என்ற பெயரை கொண்டு ஹலால் ஆக்கலாம் என்பதை ஏற்று கொண்டேன் என்பதையும் சொல்லவேண்டும்.
September 27 at 10:58am ·

Roohul Razmi 
ஒரு வாதத்தைப் புரியும் அளவு மூளை உங்களுக்கு இல்லை.

//உங்கள் கற்பனையை கொண்டு ஹதீஸில் சொல்ல பட்ட கருத்தை மாற்றாதீர்கள். முதலில் ஆட்டையும் பன்றியும் ஒன்றாகுமா என்று பார்போம்.. //

ஒன்றாகாது. ஆனால் செத்த ஆடும் பன்றியும் ஒன்று. இதை நான் சொல்ல வில்லை. நீங்கள் தான் சொன்னீர்கள். 

எவ்வாறு சொன்னீர்கள்?
3 வது முறை சொல்கிறேன்.

//அதை உன்பதை தான் தடை உள்ளது என்ற இந்த நபியின் வார்த்தை யில் அழகிய விளக்கம் உல்லது.இதன் விலக்கம் " செத்த ஆடு மற்றும் எந்த ஹராமான மிருகம் ஆனாலும் அதை உன்பதை தடை உல்லது. ஆனால் பன்றியை விற்க வே தடை உல்லது. "//

இந்த ஹதீஸ்படி ஆடு உண்ணத்தான் தடை. பன்றி விற்கவே தடை. எவ்வாறு செத்த ஆட்டையும் பன்னியையும் ஒன்றாகக் கருதுவீர்கள் என்று எம்மைப் பார்த்துக் கேட்டீர்கள்.

பன்றி விற்கத் தடை என்று எதை வைத்து நீங்கள் நிறுவினீர்களோ அதே இடங்களில் பன்றி மட்டும் விற்கத் தடை இல்லை. தாமாக செத்த எல்லாமே விற்கத் தடை, மேலும் இரத்தம், அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறப்பட்டவை, உருவச்சிலை, மதுபானம், செத்தவை என்று அனைத்தும் விற்கத் தடை என்றுதான் உள்ளது என்று நான் கூறினேன். 

முதலில் நான் அவ்வாறு கூறியது சரியா பிழையா என்று சொல்லவும். பயான், எட்வைஸ் ஒன்றும் வேண்டாம். கேள்விக்கு மட்டும் பதில் தரவும்.

///அப்படியே ஒரு வேலை நபி (ஸல்) செத்த பன்றி கடந்து சென்றபோது இதன் தோலை நீஙகள் பயன்படுத்தக்கூடாதா,, என்று சொல்லுவர்கள???
என் உங்கள் சிந்தனை ஏன் இது போன்று சிந்திக்க மாட்டிகிரீர்கள்.///

என்று கேட்கிறீர்கள். நாம் சிந்திக்க மாட்டோம். நபிகளார் சொல்லாத ஒன்றைக் கற்பனை கூட பன்னமாட்டோம். நபிகளார் சொன்னதற்கே உங்களால் விளக்கம் தர முடியல. ஏன் இந்தச் சொல்லாத கற்பனை எல்லாம்?

//உங்கள் கற்பனையை ஒரு அளவு மேல் செல்லவேண்டாம்.//

நீங்கள் கற்பனை பன்னிவிட்டு எங்கள் மீது பலியா?
//பரீரா (ரலி) அவர்களுக்கு இறைச்சி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களிடம், இது பரீரா அவர்களுக்கு தருமமாக கிடைத்தது என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், இது அவருக்கு தருமமாகும். நமக்கு அன்பளிப்பாகம் என்று கூறினார்கள். //

//இந்த ஹதீஸ் அடிப்படையை வைத்து நீங்கள் மிக பெரிய பாவம் என்று கறுத்தும் வட்டியை அன்பளிப்பாக தந்தால் அது ஹலால் ஆகிவிடும் என்று யாரும் சொல்லாத சட்டத்தை சொல்லி இருக்கிறார்.
உங்கள் ஆய்வு படி பார்த்தால் பன்றி இறைச்சி ஹராம் அதே போல் நபி (ஸல்) அவர்களுக்கு சதக்க பொருள் ஹராம் ...அப்போ அன்பளிப்பாக சதக்க பொருள் தரும் போது அது ஹலால் ஆகுகிறது... அதே போல் அன்பளிப்பாக பன்றி இறைச்சி தந்தால் அதுவும் ஹலால் ஆகுகிறது.. அதே போல் அனைத்து ஹராமான பொருலும் உங்கள் ஆய்வு படி அன்பளிப்பாக தந்தால் ஹலால் ஆகிவிடும்.
அப்போ உங்கள் கணக்கு படி யார் ஒருவர் அன்பளிப்பாக சாராயம், வட்டி, பன்றி இறைச்சி ரத்தம், செத்த மிருகம், அனைத்து ஹராமான பொருள்கள் அன்பளிப்பாக தந்தாள் உங்களுக்கு ஹலால் .. அப்படி தானா !!!!//

பதில் இல்லாவிட்டால் இவ்வாறுதான் உளரவேண்டி வரும். எனது அனைத்து மறுப்புகளையும் வாசித்துப் பாருங்கள். எவ்வளவு தெளிவாக ஆணித்தரமாக உள்ளதென்று. சத்தியம் அவ்வாறுதான் தெளிவாக இருக்கும்.

மேலே நீங்க வைத்த வாதம் ஒருவருக்கும் புரியாது. எவரிடமாவது கேட்டு எழுதி உள்ளீர்கள். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று நானே உங்களுக்கு விளக்குகிறேன்.

ஒரு ஹராம் ஹலாலாக மாறும் என்று பரீரா விடயத்தை ஆதாரம் காட்டி நாம் சொல்கிறோமாம். அதாவது நபிக்கு தருமம் ஹராம். அன்பளிப்பு ஹலால். பரீராவுக்கு தருமம் கிடைத்தது.(ஹராம் கிடைத்ததாம்?) பகீரா நபி ஸல் அவர்களுக்குத் தருவது அன்பளிப்பு(ஹலால்). 

எனவே இந்த ஹதீஸில் இருந்து ஹராம் கூட ஹலாலாக மாறும் வழி உண்டு என்று நாம் முடிவெடுத்து வட்டி பணம் அன்பளிப்பாக வந்தால் வாங்கலாம் என்று கூறுகிறோமாம். 

இதை வைத்து எம்மிடம் பாரதூரமான ஒரு கேள்வியையும் கேட்கிறார். பன்றி, செத்தவை, இரத்தம் ஹராம். இதை யாராவது உங்களுக்கு அன்பளிப்பாகத் தந்தால் அது ஹலாலா என்று அறிவு மேதை கேட்கிறார். 

இவர் எந்த அளவு குழம்பியுள்ளார் தெரிகிறதா?
பொருளொன்று ஹராமாவதும், பொருள் வரும் வழி ஹராமாவதும் வேறு என்ன வேறுபாடு தெரியாத ஸலபிகளை என்னவென்பது

பன்றியும், செத்த ஆடும், இரத்தமும் பொருளே ஹராம். அதைத் திருடினாலும் ஹராம், உழைத்துப் பெற்றாலும் ஹராம், தருமம் கிடைத்தாலும் ஹராம், அன்பளிப்பாகக் கிடைத்தாலும் ஹராம். 
காற்றாடி எனும் பொருள் ஹராமா? இல்லை. அதைக் கடையில் திருடினால் அது ஹராம். ஏனென்றால் அது வந்த வழி ஹராம்.
//இமாம் அவ்ஸாயி கூறினார்கள்: உங்களை நபி வழியில் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் நபிதோழர்கள் எங்கு நிறுத்தினார்களோ அங்கு நிறுத்துங்கள் .(அவர்களை விடஅதிகம் தெரிந்தவர்களை போல் பேசாதீர்கள் ) அவர்கள் என்ன கூறினார்களோ அதையே கூறுங்கள் அவர்கள் எதை விட்டும் விலகி இருந்தார்களோ அதை விட்டும் நீங்களும் விலகி இருங்கள் உங்கள் சலப் சாலிஹீன் (முன் சென்ற நல்லோர் ) பாதையிலே பயணம் செய்யுங்கள் .அவர்களுக்கு எது போதுமானதாக இருந்ததோ அதுவே உங்களுக்கும் போதுமானது .(அல்ஹுஜ்ஜா6)//

இமாம் அவ்ஸாயி பன்றித் தோல் பற்றிக் கூறியிருந்தால் பதில் சொல்கிறேன். 

இமாம் சிப்பாயி கூறுகிறார்: உங்களை நபி வழியில் மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு போதும் நபித் தேழர்களைப் பின்பற்றாதீர்கள்.(அவர்களை விட சில விடயங்கள் அதிகம் உங்களுக்கு விளங்கலாம் ) அவர்கள் என்ன கூறினார்களோ அதை சிந்தித்து ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் எதை விட்டும் விலகி இருந்தார்களோ அதை கண்மூடி ஏற்க வேண்டாம். உங்கள் சலப் சாலிஹீன் (முன் சென்ற நல்லோர் ) பாதையிலே பயணம் செய்வதாக எண்ணி குர்ஆன் 33:66,67,68 வசனங்களுக்கு மாறு செய்து விட வேண்டாம் அவர்களுக்குக் குர்ஆனும் ஹதீசும் போதுமானதாக இருந்தது போன்று உங்களுக்கும் இருக்கட்டும். .(அத்தாவா)

//பதனிட பட்டாலும் பன்றி தோல் அசுத்தமாக நிலையில் தான் இறுக்கும் என்று இமாம் இப்னல் உதய்மீன் (ரஹிமஹுமுல்லாஹு அஜ்மயீன்) பத்வா குடுத்துலார்கள்.//

உதைமீனின் பத்துவாவை இங்கு இட்டு விளக்குங்கள். பதில்வரும். 

//மேலும் Dr.Zakir Naik அவர்களும் இந்த கருத்தை மருத்துவ ரீதியாக சரி தான் என்று ஏற்று கொண்டார். இதற்க்கு பிறகு நீங்கள் பன்றி தோல் கூடும் என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்.//
பதனிடப்பட்ட பன்றித்தோலை சாப்பிடாமல் காலுக்கு அணிவதால் இன்னின்ன கேடு உண்டு என்று காட்டனும். அதுகூட நாயக்கர் அவ்வாறு சொன்னார் என்று காட்டக் கூடாது. அறிவியல் ஆசாமி நீங்கள் அறிவியல் சான்றோடு 
காட்டனும்.
அது சரி, எங்கே உங்கள் சாராய ஆராய்ச்சி போனது? நன்றாக நேரம் எடுத்து ஆராய்ந்து பதில் சொல்லுங்கள்.
September 27 at 1:58pm ·

Ahamed Hussain 
இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கரம் நீங்கள் எழுதியதிற்கு உங்களை போலவே என் பதிலை தருகிறேன்..September 27 at 2:04pm

Ahamed Hussain 
நான் சொல்லும் கருத்தை புரியும் அளவு மூளை உங்களுக்கு இல்லை. இது இயக்க வெறியா இல்லை வேண்டும் என்ற வறட்டு பிடிவாதம் செய்கிறீர்களா என்று தெரிய வில்லை.

//அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள்/ ஒரு செத்த ஆட்டைக் கடந்து சென்றபோது/ ,,இதன் தோலை நீஙகள் பயன்படுத்தக்கூடாதா,, என்று கேட்டார்கள். நபித்தோழர்கள்/ ,,இது செத்த ஆடாயிற்றே!,, என்றனர். அதற்கு ,,அதை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது!,, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.//
நான் உங்களை சிந்திக்க படி மேல் உள்ள ஹதீஸில் செத்த பன்றியாக இருந்தால் இதை நபி (ஸல்) தோல் உரிக்க சொல்லி இருபார்கள என்று கேட்டேன்.. அதற்கு உங்கள் மழுப்பு பதிலை வைக்கீர்கள். ஒரு ஆடு உரிரோடு இருந்தால் உண்பதக்கு ஹலால் ஆனால் பன்றி ஹராம் , அதே சமயம் செற்ற ஆடு உண்பதக்கு ஹராம் ஆனால் பன்றி ஹராம். ஹதீஸில் தெழிவாக கூறப்பட்டு உள்ளது ஆடு மற்றும் ஹலாலான அனைத்து மிருகத்தையும் குறிக்கும்..ஏன் என்றால் செத்த ஆடு மற்றும் எந்த ஹராமான மிருகம் ஆனாலும் அதை உன்பதை தடை உல்லது.அதன் பதம் செய்தால் சுத்தமாக ஆகி விடும் என்பதும் ஆடு மற்றும் ஹலாலான அனைத்து மிருகத்தை தோலைதான் குரிக்கும். 

நீங்கள் கூறிய படி ..//. நாம் சிந்திக்க மாட்டோம். நபிகளார் சொல்லாத ஒன்றைக் கற்பனை கூட பன்னமாட்டோம். நபிகளார் சொன்னதற்கே உங்களால் விளக்கம் தர முடியல. ஏன் இந்தச் சொல்லாத கற்பனை எல்லாம்?//

செத்த ஆட்டை இடத்தில் செய்த பன்றி வைத்து பாருங்கள் (சிந்திற்பதர்க்கு மட்டும்) என்று நான் சொன்னான் அது உங்களுக்கு தவறு .. ஆனால் இங்கே செத்த பன்றியும் அடங்கும் என்கிறீர்கள். இது என்ன நியாயம்.

ஈசா (அலை) அவர்கள் மருப்படியும் பூமிக்கு வரும்போது சிலுவையை உடைப்பார்கள், பன்றியை கொல்லுவார்கள் என்று ஹதீஸ் உள்ளது.சாப்பிட ஹராமான மற்ற மிருகங்களை அவர் கொல்லமாட்டார்கள் ஆனால் குறிப்பாக பன்றியை மட்டும் அவர்கள் ஏன் கொள்ள வேண்டும்..

//மேலே நீங்க வைத்த வாதம் ஒருவருக்கும் புரியாது. எவரிடமாவது கேட்டு எழுதி உள்ளீர்கள். //
நான் எழுதியது உங்களை போன்றவருக்கு மட்டும் தான் புரியாது. இது சம்பந்தமான விஷயம் மற்ற சகோதரிடம் பேசி கொண்டு இருக்கிறோம், நான் யாரையும் கேட்ட வேண்டும் என்று நிர்பந்தனை இல்லை.

//து நபிக்கு தருமம் ஹராம். அன்பளிப்பு ஹலால். பரீராவுக்கு தருமம் கிடைத்தது.(ஹராம் கிடைத்ததாம்?) பகீரா நபி ஸல் அவர்களுக்குத் தருவது அன்பளிப்பு(ஹலால்). //

பரீரா (ரலி) அவர்களுக்கு கிடைத்தது ஹலாலான இறைச்சி அதை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிபாக தந்தார்கள். முதலில் தெரிந்து கொள்ளுங்கள் பரீரா (ரலி) கிடைத்தது ஹலாலான இறைச்சி .. அப்படி ஹராமான இறைச்சியாக இருந்தால் கண்டிப்பாக பரீரா (ரலி) வாங்கி இருக்க மாட்டார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சத்க்கா பொருள்கள் வாங்குவது ஹராம்.... முதலில் தெரிந்து கொள்ளுங்கள் சத்க்கா (தர்மம்) என்ற பொருள் ஒருவருக்கு தான் பொருந்தும் .. உதாரனமாக ஒருவர் ஒரு ஏழ்மையான ஆளுக்கு சத்க்கா(தர்மம்) தந்த பின் , சத்க்கா வாங்கினவர் மற்றோர்வருக்கு சத்க்காவாக தர முடியாது. அதாவது வறுமையின் காரணத்தால் சத்க்கா வாங்கினவர் மற்றொவருக்கு சத்க்கா செய்ய முடியாது. அப்போ வசதி உள்ளவர் ஒருவர்க்கு சத்க்கா செய்தால் அதற்க்கு அல்லாஹ் மறுமையில் நல்ல கூலியை தருகிறான் ஆனால் சத்க்கா வாங்கினவர் மற்றோர்வருக்கு சத்க்காவாக தர முடியாது அப்படி தந்தாலும் அது மறுமையில் சத்க்காக்கு கிடைக்கும் கூலியாக இருக்காது.
//எனவே இந்த ஹதீஸில் இருந்து ஹராம் கூட ஹலாலாக மாறும் வழி உண்டு என்று நாம் முடிவெடுத்து வட்டி பணம் அன்பளிப்பாக வந்தால் வாங்கலாம் என்று கூறுகிறோமாம். //
பரீரா (ரலி) அவர்களுக்கு கிடைத்தது ஹலாலான இறைச்சி அதை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிபாகதந்தார்கள்.இதற்காக தான் நான் மீண்டும் கேட்கிறேன்..உங்கள் ஆய்வு படி பார்த்தால் பன்றி இறைச்சி ஹராம் அதே போல் நபி (ஸல்) அவர்களுக்கு சதக்க பொருள் ஹராம் ...அப்போ அன்பளிப்பாக சதக்க பொருள் தரும் போது அது ஹலால் ஆகுகிறது... அதே போல் அன்பளிப்பாக பன்றி இறைச்சி தந்தால் அதுவும் ஹலால் ஆகுகிறது.. அதே போல் அனைத்து ஹராமான பொருலும் உங்கள் ஆய்வு படி அன்பளிப்பாக தந்தால் ஹலால் ஆகிவிடும்.
அப்போ உங்கள் கணக்கு படி யார் ஒருவர் அன்பளிப்பாக சாராயம், வட்டி, பன்றி இறைச்சி ரத்தம், செத்த மிருகம், அனைத்து ஹராமான பொருள்கள் அன்பளிப்பாக தந்தாள் உங்களுக்கு ஹலால் .. அப்படி தானா !!!!

//இமாம் சிப்பாயி கூறுகிறார்: உங்களை நபி வழியில் மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு போதும் நபித் தேழர்களைப் பின்பற்றாதீர்கள்.(அவர்களை விட சில விடயங்கள் அதிகம் உங்களுக்கு விளங்கலாம் ) அவர்கள் என்ன கூறினார்களோ அதை சிந்தித்து ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் எதை விட்டும் விலகி இருந்தார்களோ அதை கண்மூடி ஏற்க வேண்டாம். உங்கள் சலப் சாலிஹீன் (முன் சென்ற நல்லோர் ) பாதையிலே பயணம் செய்வதாக எண்ணி குர்ஆன் 33:66,67,68 வசனங்களுக்கு மாறு செய்து விட வேண்டாம் அவர்களுக்குக் குர்ஆனும் ஹதீசும் போதுமானதாக இருந்தது போன்று உங்களுக்கும் இருக்கட்டும். .(அத்தாவா)//

அல்லாஹுவே கூறிகிறான் ....முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் (ஈமான் கொள்வதில்) முதன்மையாக முந்திக் கொண்டவர்கள், இன்னும் நற்செயல்களைக் கொண்டு அவர்களைப் பின்பற்றியவர்கள் ஆகியோரைப் பற்றி அல்லாஹ் திருப்தி கொண்டுவிட்டான். அவர்களும் அவனைப் பற்றி திருப்தி கொண்டு விட்டனர். இவர்களுக்காக கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களை தயார் செய்து வைத்துள்ளான். அதில் அவர்க் நிரந்தமாக இருப்பார்கள். அது மகத்தான வெற்றியாகும். சூரத்துத் தவ்பா 9:100

அல்லாஹு சொல்லுவதை கேட்பத இல்லை இமாம் சிப்பாயி சொல்லுவதை கேட்பத ..சொல்லுங்கள் ???

//உதைமீனின் பத்துவாவை இங்கு இட்டு விளக்குங்கள். பதில்வரும். //
ஏன் உங்கள் நண்பர்கள் யாருக்குமே இங்கிலீஷ் தெரியாத.. அவர்களிடம் கொண்டு காட்டுங்கள்.. விளக்கம் தருவார்கள்.

எல்லாத் தோலும் சுத்தமானது என்றால் மனிதத் தோலும் உங்கள் கணக்கு படி சேறும். முஸ்லிம் அல்லாத இறந்த மனிதனுக்கு எதற்கு ஜனாஸாவின் சட்டம்.

//பதனிடப்பட்ட பன்றித்தோலை சாப்பிடாமல் காலுக்கு அணிவதால் இன்னின்ன கேடு உண்டு என்று காட்டனும். //
நெருப்பை பார்த்தால் நல்ல பிரகாசமாக தான் இறுக்கும் ஆனால் அதை தொட்டு பார்த்தால் தான் தெரியும் அது சுடும் என்று. அதே போல் தான் பன்றித்தோலில் செய்ய பட்ட செருப்பு, ஜாக்கெட் போன்றவகைகள் அணித்து பார்த்தால் தான் தெரியும் கேடு இருப்பதை.
பன்றி தொழில் உள்ள துவாரத்தில் கிருமிகள் தங்கி விடும் அதை பதனிட பட்டாலும் அழியாது என்று கூறிகிறார்கள்.

// எங்கே உங்கள் சாராய ஆராய்ச்சி போனது? //
தற்போது இது தேவை இல்லை அப்படி உங்களுக்கு தேவை பட்டாள் இதற்க்கும் பதில் தருகிறேன்.
 இன்ஷா அல்லாஹ் விவாதம் தொடரும்......

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP