27.8.12

இஸ்லாத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் இஸ்மாயில் சலபி




இஸ்மாயில் ஸலபி என்பார் தனக்கு மூளை இல்லை என்பது மட்டுமல்லாது தனது வாதங்களுக்கு மூலாதாரமும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.
 உமர் அலி தவறான வாதங்கள் வைத்த போது அதை எதிர் கொள்ள முடியாத குராபிப் பள்ளி கட்டும் குராபிகளின் நண்பர்களான  போலித் தவ்ஹீத் வாதிகள், உமர் அலியை முறியடிக்க எங்களுக்கு முதுகெலும்பு இல்லை என்று அறிஞர் பீஜே அவர்களை அணுகினர். அறிஞர் பீஜே வின் கேள்விகளுக்கு முன்னால் நான் பதில் சொன்னால் மாட்டிக் கொள்வேன் என்று உமர் அலியார் துவண்டு போனார்.
 உமர் அலியாருக்கு எதிராக அறிஞர் பீஜே அவர்கள் அங்கு வைத்த வாதங்களைப் புரிந்து கொள்ள முடியாத சிந்தனைத் திறனற்ற இஸ்மாயில் மீண்டும் ஆதாரமற்ற தனது வாதங்களில் அவற்றை உளறிக் கொட்டியுள்ளார். இவரது கூறுகெட்ட உளரலுக்குப் பதில் அளிக்க மவ்லவி தேவையில்லை. உயர்தரம் பயிலும் ஒரு மாணவர் என்னால் பதில் அளிக்க முடியும் என்று கிழக்கிலங்கையிலிருந்து மறுப்பு எழுதி அனுப்பியுள்ளார். சில திருத்தங்களுடன் அதை இங்கு வெளியிடுகின்றோம்.
இறைவனின் அருளால் இன்று இலங்கையில் தூய தவ்ஹீத் போதிக்கப்பட்டு வருகிறது. நாங்கள்தான் தவ்ஹீத் முன்னோடிகள் என்று தங்களுக்குத்தாங்களே அக்மார்க முத்திரை குத்திக்கொள்ளும் ஸலபி வகையறாக்கள் இன்று போலி தவ்ஹீத் பேசுவதுடன் நின்றுவிடாமல் சூனியம் என்றொன்றை நம்பி ஷிர்க்கில் விழுந்து சீரழிந்து சின்னாபின்னமாகிக்கொண்டிருப்பதை எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகிறோம். ஆனால் இந்த மழுமட்டைகள் சூனியம் என்பது ஷிர்க் இல்லை என்ற அசத்தியக் கருத்தை நிரூபிக்க படாத பாடு பட்டு வருகின்றனர். இவர்களது மறை கழன்ற வாதங்களுக்கு மரண அடி கொடுத்ததும் கல்லறைக்குள் சென்று குறிப்பிட்ட காலம் வரை இருட்டறை வாசம் செய்துவிட்டு மீண்டும் அதே அழுகலுடன் வந்து புதிதாக உளறிக்கொட்ட ஆரம்பித்துவிடுகின்றனர். இந்த கள்ளத்தனத்துக்கு முன்னோடியாகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் இஸ்மாயில் சலபி என்பவர். இந்த சலபி விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று புகுந்து உளறிக்கொட்டி, வகையாக வாங்கிக்கட்டிக்கொண்டு தான் கொண்டிருக்கும் கொள்கை வழிகேடு என்பதற்கு அவரே முழுமுதற் சாட்சியாக திகழ்கிறார். இதுவரை அவர் எழுப்பிய வாதங்கள் ஒன்றும் விடாமல் அனைத்துக்கும் மரண அடி கொடுக்கப்பட்டும் அதில் ஒன்றுக்குக்கூட இந்த அரைவேக்காட்டு ஆலிமுக்கு ஆன்சர் பண்ண முடியவில்லை.
இவர் சொல்வது உண்மையிலேயே சத்தியக்கொள்கையாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? சூனியம் தொடர்பாக இவர் எழுப்பிய வாதங்கள் அனைத்துக்கும் பதில் சொல்லப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில் அப் பதிலில் தவறிருந்தால் அதை மறுத்து எழுதியிருக்க வேண்டும். ஆனால் இன்று வரை அவ்வாறு செய்யாமல் தனது அறியாமையால் புதிது புதிதாக புரளியை கிளப்பி வருகிறார். அந்த வரிசையில் பலவேஷத்தில் “அசத்தியவாதிகளை அடையாளம் காட்டும் சூனிய பத்வா!” என்ற தலைப்பில் புதிதாக ஒரு குப்பையை கொட்டி வைத்திருக்கிறார். அதைப்படித்தாலே விளங்கிவிடும் இவர் ஏழு வருடங்களாக மத்ரஸாவில் குப்பை கொட்டிய லட்சணம். அந்த அளவுக்கு அற்புதமாக உளறி வைத்திருக்கிறார்.
இதில் சூனியம் தொடர்பான எதிர்வாதங்களுக்கு ஏதும் பதில் சொல்லியிருக்கிறாரா? அல்லது சூனியத்தை நம்புவது ஷிர்க் அல்ல என்பதற்கு குர்ஆன் ஹதீஸ் வழியில் நின்று ஆதாரங்கள் எதுவும் வைத்திருக்கிறாரா என்றால் ஒன்றுமற்ற சூனியமாகவே காட்சி தந்துகொண்டிருக்கிறது. குர்ஆன் மற்றும் நபிவழியில் தாங்கள் இருப்பதாக பீற்றிக்கொள்ளும் மேற்படியார் வாதம் என்றபெயரில் பரேலவிகளை மிஞ்சுமளவுக்கு கண்டதையும் வாந்தி எடுத்து வைத்திருக்கிறார். அதை சுத்தம் செய்யும் தேவையிருக்கிறது. இல்லை என்றால் இவரது ஆழுகல் வாதங்களால் சில அப்பாவிகள் கூட அழுகிவிடுவர்.
இவருடைய மொத்தக்கட்டுரையிலும் ஏதோ சூனியம் என்பதை ஒட்டுமொத்தமாக நாம் மறுப்பது போல பாசாங்கு செய்கிறார்.
சூனியம் என்ற கலை அறவே இல்லை என்று மறுப்பது போலவும் அதை எமக்கு கண்டுபிடித்து மறுப்பளிப்பது போலவும் பாவனை செய்கிறார்.
நாம் சூனியம் என்ற ஒன்று அறவே இல்லை என்று மறுக்கிறோமா? குர்ஆன் சூனியம் இருக்கிறது எனும்போது இதை எவ்வாறு மறுக்க முடியும்? 2:102ம் வசனத்தில் அல்லாஹ் சூனியம் என்று ஒன்று இருப்பதாக கூறுகிறான். அது என்ன? கணவன் மனைவிக்கிடையில் பிளவை ஏற்படுத்துவது சூனியம். இதை இருப்பதாக சொன்னால் யார் மறுக்கப்போகிறார்கள்? ஆனால் நீங்கள் சூனியம் என்று சொல்வது இதைத்தானா? இதுதான் சீப்பையும் சிக்கு முடியையும் வைத்து செய்வார்களா? அவ்வாறுதான் அல்லாஹ் சொல்கிறானா? நபியவர்களுக்கு செய்ததாக நீங்கள் சொல்லும் சூனியம்தானா இது? நபியவர்களுக்கும் அவர்களது மனைவியருக்குமிடயில் பிரிவினை ஏற்பட்டதாகத்தான் நீங்கள் நம்பும் அந்த செய்தியில் வருகிறதா? ஏன் இவ்வாறு உளறுகிறீர்கள்? எதை எதோடு முடிச்சுப்போடுகிறீர்கள்?
நாம் இல்லை என்று சொல்லும் சூனியம் என்ன? ஏன் சொல்கிறோம்?
அல்லாஹ்வுக்கு நிகராக எதுவும் இல்லை என்பதும் அவனைப்போன்ற ஆற்றல் யாருக்கும், எதற்கும் இல்லை என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை. இந்த அடிப்படையை தகர்க்கும் எந்த செய்தியும், செயலும் இஸ்லாத்துக்கு முரணானது! நம்புவதும் ஷிர்க்கானது. இறந்த மனிதர்களிடம் போய் உதவி தேடுவதை நாமும் நம்மை எதிர்க்கும் சலபியும் சேர்ந்தே ஷிர்க் என்று சொல்கிறார். (இன்று குராபிகளுக்குப் பள்ளி கட்டிக் கொடுப்போர் நாளை தர்ஹா கட்டினாலும் கட்டிவிடுவார்கள். ஏன்? நாம் அதை ஷிர்க் என்று எதிர்ப்பதால்)  ஏன் இந்த செயலை ஷிர்க் என்கிறோம்? இறந்தவர்களை அல்லாஹ் என்று நம்பியா இவர்கள் கேட்கிறார்கள்? இல்லை! அவர்கள் ஒருபோதும் அப்படி சொல்வதில்லை. பின்னர் இது எப்படி ஷிர்க்கானது? மனிதர்கள் உதவுவதற்கும், படைத்த இறைவன் உதவுவதற்கும் இடையில் பெரிய வித்தியாசம் உள்ளது. மனிதன் இன்னொரு மனிதனுக்கு உதவவோ அல்லது தீங்கு செய்யவோ வேண்டுமாயின் ஏதாவது புறச்சாதனத்தின் உதவி தேவை. இஸ்மாயில் சலபியிடம் நான் 5000 ரூபாய் வேண்டுமென்று கேட்டால் இஸ்மாயில் இருந்த இடத்தில் இருந்து கொண்டு பணம் வேண்டுமா? இதோ வந்துவிட்டது என்று சொன்னவுடன் எனக்கு வந்துவிடுமா? அல்லது, என்னிடம் வந்து அவருடைய பொக்கட்டினுள் கையை இட்டு 5000 ரூபாயை எடுத்து என்னிடம் நீட்டுவார். இல்லாவிடின் பறகஹதெனியவிலிருந்துகொண்டு எனது அக்கவுண்டுக்கு பணம் அனுப்ப வங்கிக்கு செல்ல வேண்டும். ஆனால் அல்லாஹ் இப்படித்தான் தருவானா? அவன் அர்ஷில் இருந்து கொண்டு கொடுக்க நாடுவான். அவ்வளவுதான்! அது எப்படியோ என்னை வந்துசேர்ந்துவிடும். இறந்தவர்களிட்ம கேட்கும் போது எந்த நிலை வருகிறது? இஸ்மாயில் உதவுவது போன்று உதவுகிறாரா? அல்லது அல்லாஹ் உதவுவது போன்று உதவும் தன்மை வருகிறதா? அல்லாஹ் எவ்வாறு உதவுவானோ அந்த தன்மை வருவாதால் அவர்களால் உதவ முடியாது! அவர்களிடம் அவ்வாறு கேட்பது ஷிர்க் என்கிறோம்.
இப்போது இஸ்மாயில் சலபி எதற்கு படியளக்கிறாரோ அந்த சூனியத்தின் தன்மை எப்படி இருக்கிறது? ஒருவன் எங்கோ இருந்துகொண்டு எதையோ நோண்டுவானாம். நாம் இங்கே பாதிக்கப்படுவோமாம். இது யாருடைய தன்மை? ஒரு மனிதன் தீங்கு செய்வது போன்று புறச்சாதனத்தை பயன்படுத்தி தீங்கு செய்கிறான் என்று வருகிறதா? அல்லது எங்கோ இருந்துகொண்டு எந்த கருவியும் பயன்படுத்தாமல் அல்லாஹ் அழிப்பதுபோல் இந்த செயல் இருக்கிறதா? இப்படி இருந்தால் அது ஷிர்க் இல்லையா? சலபி இதற்கு ஏதாவது பதில் சொல்லியிருக்கிறாரா? இது ஷிர்க் இல்லை! மனிதத் தன்மைதான் இதிலும் வருகிறது என்று நிறுவியிருக்கிறாரா? அறவே கிடையாது.  இந்த முதன்மைக் கேள்விக்கு பதிலளிப்பதை விட்டுவிட்டு வளாவளா கொழாகொழா என்று கண்டபடி உளறினால் அதற்கு என்ன அர்த்தம்?
பொய் வாதத்துக்கு போலி சமாளிப்பு
இவ்வாறெல்லாம் அந்த சூனியத்தை நம்புவது ஷிர்க் என்று நிறுவிய பின் அதை மறுக்க முடியாமல் அது ஷிர்க்குதான் என்று ஒப்புக்கொள்ளவே செய்கிறார். ஆனால் அதை முற்றாக மறுக்க முடியாமல் பூசி மெழுகி அல்லாஹ் தான் நாடியதை செய்பவன். அவன் நாடினால் நடக்கும். அல்லாஹ் நாடினால் சூனியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சக்தி வந்துவிடுகிறது என்று போலியாக சமாளிக்கிறார். இப்படி எந்தவொரு அறிவுள்ள ஆலிமாவது சொல்வார்களா? அல்லாஹ் நாடினால்தான் எல்லாம் நடக்கும் என்பது உண்மைதான். அல்லாஹ் நாடினால் ஷிர்க்கும் சத்தியமாகும் என்று சொல்ல முடியுமா? இறந்தவர்களிடம் உதவி தேடுவது ஷிர்க் என்று சொல்லும் சலபியிடம் அந்த கொள்கையை ஆதரிக்கும் ஒருவர் சென்று அல்லாஹ் அனைத்துக்கும் ஆற்றலுள்ளவன் அல்லவா? அல்லாஹ் நாடினால் இறந்தவர்களுக்கு உதவும் சக்தியை கொடுக்கமாட்டானா? என்று கேட்டால் இவர் என்ன சொல்வார்? அதை ஒத்துக்கொண்டு கப்ர் வணங்கியாக மாறிவிடுவாரா? (போற போக்கில் மாறிவிடுவார்கள் போன்றுதான் தோன்றுகிறது. சான் சான் என்றுதானே முன்னேறுவர். இன்று குராபிகளுக்கு கோடி ரூபாய்க்குப் பள்ளி, நாளை தர்கா, நாளை மறுநாள் கோயில்!??? யா அல்லாஹ் நிதி நிறுவனங்களை அதிவல் சம்பளத்திற்காக ஆடுபவர்களை நீயே காப்பாற்று.) இதே பதிலை சலபியிடம் கப்ர் வணங்கிக்கூட்டம் சொல்லும்போது ஏற்க மாட்டார். ஆனால் அதையே தான் நம்பிக்கொண்டிருக்கும் ஷிர்க்கை நியாயப்படுத்தும் கவசமாக தூக்கிக்காட்டுவது கயமைத்தனம் இல்லையா? அல்லாஹ் நாடுவதுதான் நடக்கும். ஆனாலும் அவனது தன்மையை இன்னொன்றுக்கு கொடுப்பதையா அல்லது இறை தன்மையை பாதிக்கும் விடயங்களையோ அவன் நாடவே மாட்டான் என்பதை சலபி முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இனி அக்கட்டுரையில் இஸ்மாயில் சலபி அவர்கள் அணுகியுள்ள கோணம் எந்தளவுக்கு கோணல் என்பதை பாக்கலாம்.
பூமாராங்கா? பூச்சாண்டியா?
உமரலியுடன் பி.ஜே நடத்திய விவாதத்தில் பி.ஜே இரண்டு கேள்விகளைக்கேட்டாராம். அந்த இரண்டு கேள்விகள் மூலமாக பி.ஜே உமரலியை வாதத்தில் வீழ்த்திவிட்டாராம். இப்பாது பி.ஜே கேட்ட கேள்வியை அவரிடமே “பூமராங்” போன்று திருப்புவதாக (நல்லா திருப்புராரு) ஜம்பம் அடிக்கிறார்.
முதலவாதாக “எனது சமுதாயத்தில் ஒரு கூட்டம் மறுமை நாள் வரை சத்தியத்தில் இருக்கும்” என்று வரும் ஹதீஸை சுட்டிக்காட்டி பி.ஜே உமரலியிடம் நீங்கள் சொல்லுவது சத்தியமாக இருந்தால் இதற்கு முன் இந்த சத்தியக்கருத்தை சொன்னது யார்? சென்ற நூற்றாண்டில் சொன்னது யார்? என்று கேட்ட கேள்வியை இப்போது சூனியத்தை நம்புவது ஷிர்க் என்றிருந்தால் இந்த சத்தியக்கருத்தை இதற்கு முன் சொன்னவர்கள் யார்? என்று ஒரு அற்புதமான கேள்வியை கேட்கிறார்.
தான் அறிவுபூர்வமாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு உளறிக்கொட்டுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார் சலபியார்.
நமது நிலை தவறு என்பதை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நிரூபிக்க வக்கற்றுப்போய் தற்போது பூமாராங் என்று பூ சுற்ற ஆரம்பித்துவிட்டார். இதில் கொஞ்சமேனும் நியாயமிருக்கிறதா? உமரலியின் உளரலையும் நாம் சொல்லும் உண்மையையும் சம்மந்தமே இல்லாமல் சிண்டு முடிகிறார் சலபியார். விவாதம் என்று வரும்போது எதிர்த்தரப்பின் மடமையை புரிய வைக்க பலவிதமான கேள்விகளை கேட்பதுண்டு. அக்கேள்வி எல்லா இடத்துக்கும் பொருந்தாது. களியக்காவிளை விவாதத்தில் கூட மத்ஹபை பின்பற்ற ஆதாரமாக நபித்தோழர்களை சிறப்பித்துச்சொன்ன ஒரு வசனத்தை (9:100) காட்டினர். அங்கு இமாம்களை பின்பற்ற வேண்டுமென்று சொல்லவில்லை! நபித்தோழர்களை குறித்துத்தான் வருகிறது. நீங்கள் அதை காட்டுவதாக இருந்தால் அன்சாரி மத்ஹபையோ அல்லது முஹாஜிர் மத்ஹபையோ எடுத்துவைய்யுங்கள்! என்று சொன்னார்.
சலபி இப்போது இதை எடுத்துக்காட்டி பி.ஜே ஸஹாபாக்களை பின்பற்ற சொல்லிவிட்டார் என்றால் அது சரியாகிவிடுமா? இது கடைந்தெடுத்த முட்டாளடத்தனமில்லையா? உமரலியின் நிலையும் நமது நிலையும் ஒன்றா? உமரலி ஒரு ஹதீஸை தப்பும் தவறுமாக விளங்கி வாதிட்டார். அதனால் அவரிடம் இது கேட்கப்பட்டது. நாம் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட செய்தி பச்சைப்பொய்! அது இஸ்லாத்தையும், இறைத்தூதரையும் கொச்சைப்படுத்துகிறது அகிலத்தின் அருட்கொடையை மனநோயாளியாக்கிறது  என்று பல்வேறு தக்க காரணங்களை கூறி மறுக்கி
றோம். நமக்கு பதில் சொல்ல முடியாமல் மூளையும் மூலாதாரமும் இல்லாமல் சொன்ன பதில்கள் அனைத்துமே தவறு என்று நிரூபித்த பின்னர் வேறு வழியின்றி இப்படி கேட்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? பி.ஜே, சலபி சொல்லும் அர்த்தத்தில்தான் கேட்டாரா? சலபி இப்போது அக்கேள்வியை கேட்பாராயின் நாம் அவரிடம் ஒரு கேள்வியை கேட்கிறோம். விடுபட்ட நபிவழி என்று அப்துல்லாஹ் பின் பாஸ் எழுதிய புத்தகத்தை எதற்கு தமிழாக்கம் செய்து வெளியிட்டீர்கள்? விடுபட்ட நபிவழி என்று பின் பாஸுக்கு முன் யார் சொன்னார்? உங்கள் கருத்துப்படி அது எக்காலத்திலும் இருந்திருக்க வேண்டுமே! இப்படியிருந்தும் எதற்கு வெளியிட்டீர்கள்? ஏன் இந்த இரட்டை நிலை? அவர் அரபி நாம் அஜமி என்பதற்காகவா? அரபி விசுவாசம் இதிலுமா காட்டுகிறீர்கள்? இன்னும் சொல்லப்போனால் மேற்படி விவாதத்தில் சலபியும்தான் இருக்கிறார். பி.ஜே கேட்டதன் நியாயம் அவருக்கு விளங்கியிருந்தும் மணமுரண்டாக இதை தூக்கி காட்டுவதிலிருந்து இவர் எந்தளவுக்கு தடம் புரண்டுவிட்டார் என்பது புலனாகிறதா?
மேற்படியார் கேட்பது போன்று கேட்டால் கூட ஆம்! அப்படி சொல்லியுமிருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவலுக்காக இங்கே பதிவு செய்கிறோம்.
இமாம் அபூபக்கர் ராஸீ அல் ஜஸ்ஸாஸ் என்பார் இப்படி சொல்லியிருக்கிறார்
أحكام القرآن للجصاص ت قمحاوي (1 / 60):
بِالْقَدَحِ فَتَقَطَّعَ الْحَجَرُ قِطْعَةً قِطْعَةً فَغَرِقَتْ السَّاحِرَةُ فَيُصَدِّقُونَهُ وَمَنْ صَدَّقَ هَذَا فَلَيْسَ يَعْرِفُ النُّبُوَّةَ ولا يأمن أَنْ تَكُونَ مُعْجِزَاتُ الْأَنْبِيَاءِ عَلَيْهِمْ السَّلَامُ مِنْ هَذَا النَّوْعِ وَأَنَّهُمْ كَانُوا سَحَرَةً وَقَالَ اللَّهُ تعالى وَلا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتى وَقَدْ أَجَازُوا مِنْ فِعْلِ السَّاحِرِ مَا هُوَ أَطَمُّ مِنْ هَذَا وَأَفْظَعُ وَذَلِكَ أَنَّهُمْ زَعَمُوا أَنَّ النَّبِيَّ عَلَيْهِ السَّلَامُ سُحِرَ وَأَنَّ السِّحْرَ عَمِلَ فِيهِ حَتَّى قَالَ فِيهِ إنَّهُ يُتَخَيَّلُ لِي أَنِّي أَقُولُ الشَّيْءَ وَأَفْعَلُهُ وَلَمْ أَقُلْهُ وَلَمْ أَفْعَلْهُ وَأَنَّ امْرَأَةً يَهُودِيَّةً سَحَرْته فِي جُفِّ طَلْعَةٍ وَمُشْطٍ وَمُشَاقَةٍ حَتَّى أَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ فَأَخْبَرَهُ أَنَّهَا سَحَرَتْهُ فِي جُفِّ طَلْعَةٍ وَهُوَ تَحْتَ رَاعُوفَةِ الْبِئْرِ فَاسْتُخْرِجَ وَزَالَ عَنْ النَّبِيِّ عَلَيْهِ السَّلَامُ ذَلِكَ الْعَارِضُ وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى مُكَذِّبًا لِلْكُفَّارِ فِيمَا ادَّعَوْهُ من ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ جَلَّ مِنْ قَائِلٍ وَقالَ الظَّالِمُونَ إِنْ تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَسْحُوراً ومثل هذه الأخبار من وضع الملحدين تعليا بالحشوا الطَّغَامِ وَاسْتِجْرَارًا لَهُمْ إلَى الْقَوْلِ بِإِبْطَالِ مُعْجِزَاتِ الْأَنْبِيَاءِ عَلَيْهِمْ السَّلَامُ وَالْقَدْحِ فِيهَا وَأَنَّهُ لَا فَرْقَ بَيْنَ مُعْجِزَات الْأَنْبِيَاءِ وَفِعْلِ السَّحَرَةِ وَأَنَّ جَمِيعَهُ مِنْ نَوْعٍ وَاحِدٍ وَالْعَجَبُ مِمَّنْ يَجْمَعُ بَيْنَ تَصْدِيقِ الْأَنْبِيَاءِ عَلَيْهِمْ السَّلَامُ وَإِثْبَاتِ مُعْجِزَاتِهِمْ وَبَيْنَ التَّصْدِيقِ بِمِثْلِ هَذَا مِنْ فِعْلِ السَّحَرَةِ مَعَ قَوْله تَعَالَى وَلا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتى فَصَدَّقَ هَؤُلَاءِ مَنْ كَذَّبَهُ اللَّهُ وَأَخْبَرَ بِبُطْلَانِ دَعْوَاهُ وَانْتِحَالِهِ
இவ்வாறு (சூனியக்காரர்களால் எதார்த்தத்திற்கு மாற்றமான காரியங்களைச் செய்ய முடியும் என்று) நம்பக்கூடியவர் தூதுத்துவத்தைச் நுபுவ்வத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை. மேலும் நபிமார்கள் செய்த அற்புதங்களும் சூனியமாகும் என்ற கருத்து இதனால் ஏற்படும். நபிமார்கள் சூனியக்காரர்களாக இருந்தார்கள் என்றும் நம்ப வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் சூனியக்காரன் எங்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதைவிடவும் பாரதூரமான வேலையை சூனியக்காரனால் செய்ய முடியும் என்று மோசமான கருத்தைச் சிலர் கூறுகின்றனர். அது என்னவென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. அவர்கள் சொல்லாதவற்றைச் சொன்னதாகவும் செய்யாததைச் செய்ததாகவும் எண்ணும் அளவுக்கு அந்த சூனியம் அவர்களிடத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு யூதப் பெண் சிக்குமுடியிலும் சீப்பிலும் பேரீச்ச மரப் பாளையிலும் நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்தாள். ஜிப்ரீல் வந்து அதைத் தெரியப்படுத்திய உடன் அது அகற்றப்பட்டு நபி (ஸல்) அவர்கள் குணமானார்கள் என்று நம்புகின்றனர்.
நபி (ஸல்) அவர்களுக்கு இது போன்று சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று இறை மறுப்பாளர்கள் வாதிட்ட போது அதை மறுக்கும் விதமாக நீங்கள் சூனியக்கார மனிதனைத் தான் பின்பற்றுகிறீர்கள் என அநியாயக்காரர்கள் கூறுகிறார்கள் என்று அல்லாஹ் கூறினான்.
இது போன்ற செய்திகள் தூதுத்துவத்தில் குறையை ஏற்படுத்துவதற்காகவும் நபிமார்கள் செய்த அற்புதங்களை மறுப்பதற்காகவும் நபிமார்கள் செய்த அற்புதங்களுக்கும் சூனியக்காரர்கள் செய்த செயலுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டும் ஒன்று தான் என நம்ப வைப்பதற்காகவும் இறை நிராகரிப்பாளர்கள் இட்டுக்கட்டிய செய்திகளாகும்.
நபிமார்கள் செய்த அற்புதங்கள் உண்மையானவை என்று நம்பக்கூடியவர்கள் சூனியக்காரனாலும் இதுபோன்று செய்ய முடியும் என்று நம்புவது ஆச்சரியமாக உள்ளது. அல்லாஹ் எவர்களின் வாதத்தை தவறானது என்று கூறி அவர்கள் பொய்யர்கள் என்று தெரிவித்தானோ அத்தகையவர்களை இவர்கள் உண்மைப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். சூனியக்காரன் எங்கு வந்தாலும் அவன் வெற்றி பெற முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
இவரது இரண்டாவது கேள்வி என்னவெனில் பைஅத் செய்யாதவன் ஜாஹிலிய்யத் மரணத்தை தழுவுகிறான் என்ற ஹதீஸைக்காட்டிய உமரலியிடம், இந்த ஹதீஸை சொல்லும் அறிவிப்பாளர்கள் யாருமே பைஅத் செய்யவில்லை என்றால் உங்கள் வாதப்படி அவர்கள் காபிராகிவிடுகின்றனர். எனவே முஸ்லிமகள் அறிவிக்கும் ஹதீஸை காட்டுங்கள் என்று கேட்க உமரலி வாயடைத்துப்போனார். இப்போது நம்மிடம் சூனியத்தை நம்புவது ஷிர்க் என்றால் புகாரி, முஸ்லிம் போன்றோர் முஷ்ரிக் ஆகிவிடுவர் . எனவே அவர்களின் கிதாபை ஆதாரம் காட்டக்கூடாது என்று அளந்து விடுகிறார். ஆனால் ஏற்கனவே இது பதில் சொல்லப்பட்ட வாதம்தான்.
இந்த வாதத்துக்கு பதில் அளிக்கப்பட்டதை தெரிந்த சலபி அப்பதிலை எப்படி மறுக்கிறார் என்று பாருங்கள்!
இவர்களது பயான்களைக் கேட்காத வரைக்கும் காபிராகும் வாய்ப்புக் குறைவு. கேட்டால் காபிராகும் வாய்ப்புக் கூடுதலாக உள்ளது என்று கூறுகின்றனர். இவர்களது உரைகளைக் கேட்பது நல்லதா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்
என்னே ஒரு கையாளாகாத்தனம். எமது உரையைக் கேட்டால் இவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்ற தொடை நடுக்கம். அசத்தியம் இப்படித்தான் ஆட்டம் காணும்.
 நாம் ஒரு ஹதீஸை ஆதாரமாக வைத்து மேற்படி பதிலை சொல்கிறோம். அது தவறு என்று மறுக்கவும் முடியாமல் அக்கருத்தை ஏற்கவும் முடியாமல் ஓலமிடுவது எதைக்காட்டுகாட்டுகிறது? இது ஒரு மார்க்கம் படித்தவனுக்கு அழகா?  மாடு மேய்ப்பவனின் அங்கலாய்ப்பா? என்பதை மக்களே சிந்தித்துப்பார்க்கட்டும். இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போய் கடைசியில் இவர்களது பயான்களை கேட்காதீர்கள் என்று சொல்லும் சலபியைப்பார்க்கும் போது, வஹாபிகளின் உரையைக்கேட்காதீர்கள்! உங்களை குழப்பிவிடுவார்கள் என்று குராபிகள் கரடி விட்டது ஞபாகம் வருகிறது. கடைசியில் சலபி ஷிர்க்கை நியாயப்படுத்த குராபிகளின் வாதத்தையே வாந்தி எடுக்கும் நிலைக்கு போயிருப்பதை எண்ணி வியப்பாக இருக்கிறது. அசத்தியவாதிகளின் அடையாளம் இப்படித்தான் புலப்படும். அல்லாஹ் வழி கெட்டவர்களைப்பற்றி சொல்லும் போது பின்வருமாறு சொல்கிறான்.
நேர்வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (4:115)
இந்த வசனத்தை மெய்ப்பிக்கும் போக்கு சலபியிடம் வந்துவிட்டது என்பது விந்தனை!
பி.ஜே உமரலியின் அனைத்து வாதங்களையும் முறியடித்துவிட்டு இக் கேள்விகளை கேட்டார். நீங்களோ சூனியத்தை நிலை நாட்ட முன்வைத்த வாதங்கள் அனைத்தும் தவிடுபொடியானதன் பின் வேறு வழியின்றி உங்களது மானத்தை காப்பாற்றிக்கொள்ள அரைவேக்காட்டுக் கேள்ளிகளைக் கேட்கிறீர்கள். இது பூமாராங் கிடையாது! பூச்சாண்டி ரேங்க்! (Rank)
அடுத்து பித்அத் வாதிகளைப்பார்த்து குறித்த பித்அத் தொடர்பான விடயங்கள் நபியவர்கள் செய்யவில்லையே அவர்களுக்குத் தெரியாததா? இவர்களுக்கு தெரிந்துவிட்டது என்று கேட்கும் கேள்வியை இப்போது நம்மை பார்த்து கேட்கிறாராம்? எப்படி?
சூனியம் என்பது அன்றுதொட்டு இன்றுவரை இருந்து வருகின்றது. அல்லாஹ் நாடினால் சூனியத்தால் பாதிப்பு வரும் என்று நம்புவது ஷிர்க் என்றிருந்தால் அதை நபியவர்கள் அறிவித்திருக்க வேண்டும். அப்படி அவர்கள் அறிவிக்கவில்லையாம். நுணுக்கமான ஷிர்க்காம். இவர்கள்தான் இதைக் கண்டுபிடித்துச் சொல்கின்றார்களாம்.
அப்படியென்றால், மார்க்கம் இன்னும் பூரணமாகவில்லை. நாம்தான் கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கத்தைப் பூரணப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். சூனியத்தில் ஷிர்க் இருக்கும் விடயம் நபியவர்களுக்குக் கூடத் தெரியாமல் போய்விட்டது. மார்க்கத்தை நபியவர்கள் தெளிவாக, பூரணமாக மக்களுக்குப் போதிக்கவில்லை. நாம்தான் மார்க்கத்தின் முக்கியமான ஒரு அடிப்படையைக் கண்டுபிடித்திருக்கின்றோம். இது நபிக்குக்கூட தெரியாமல் போய்விட்டது. எங்கள் தலைவர் கண்டுபிடித்தார். நபி(ஸல்) அவர்கள் சத்தியத்தைத் தெளிவாகப் போட்டு உடைக்கவில்லை. நாம்தான் போட்டு உடைக்கின்றோம் என்று கூறப்போகின்றீர்களா?
சலபியிடம் சரக்கு இல்லை என்பதற்காக இப்படியெல்லாம் சலப்புகிறார். சூனியம் என்பது இல்லவே இல்லை என்று நாம் சொல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதற்கு மறுப்பளித்து கொண்டிருக்கிறார். நாம் என்ன சொல்கிறோம் என்பதை செவியுற்று மறுப்பளிக்காமல் இப்படி தானாகவே ஒரு தீமை(Theme) உண்டுபண்ணிக்கொண்டு மறுப்பது நிழலுடன் யுத்தம் செய்வதற்கு சமன்! இப்படி நிழலுடன் யுத்தம் செய்வோரை மெண்டல் என்று சொல்வார்கள்.
சூனியம் என்பதற்கு சலபி சொல்லும் சக்தி இருப்பதாக காபிர்களும் நம்பினார்கள். அதை அல்லாஹ் மறுத்துவிடுகிறான். சூனியம் என்றால் சூழ்ச்சியும், ஏமாற்றும் தந்திர வித்தையும்தான் என்று அல்லாஹ் விளக்கிவிட்டதை இதற்கு முன் பல தடவை நாமும் விளக்கிவிட்டோம். ஆனால் அதற்கு இன்றுவரை சலபியின் பதிலைக் காணோம்! இவ்வாறு சூனியத்தின் பெயரால் ஏமாற்றுவது பெரும்பாவம் என்றும் நபிகளார் விளக்கிவிட்டார்கள். இதற்கு மேல் சலபிக்கு யார் விளக்க வேண்டும்? ஒரு வேளை சவூதியிலிருந்து சில சில்லறைகளுடன் இதற்கும் சான்றிதழ் வந்தாதான் ஒத்துக்கொள்வார்களோ?
சூனியம் நுனுக்கமான ஷிர்க் என்பதை கண்டுபிடித்து நாம் சொல்வதை மறுக்க முடியாமல் கிண்டலடிக்கும் கீழ்த்தரமான வேலையை செய்கிறார். ஆனால் நாம் நுனுக்கமான ஷிர்க் இருக்கிறது என்று நாம் இவரைப்போன்று கண்ணை மூடிக்கொண்டுதான் சொல்கிறோமா? அல்லது இந்த ஹதீஸிலிருந்து விளங்கியது என்று சொல்கிறோமா?
(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும்,அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த போதனையை உமக்கு அருளினோம். (1644)
அல்லாஹ்வின் மார்க்கத்தை விளக்குவதற்காக நபியவர்களை அனுப்பியிருக்கிறான் எனபதோடு நிறுத்திக்கொள்ளாமல் நாமும் சிந்திக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறான். அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லியவற்றிலிருந்து நாமும் விளங்க வேண்டிய விடயங்களும் இருக்கிறது. வாழைப்பழத்தை உரித்து சலபியின் வாயில் வைத்தாலும் அதை உண்ணத்தெரியாமல் இவர் வாழப் பழம் மாதிரித்தான் சாப்பிடுவார்) வேறு அல்லது தெரியாதது போல் பாசாங்கு செய்தால் அதற்கு நாம் பழியாக முடியுமா? சிந்திக்க முடியாத அளவுக்கு தனது மூளையை அரபிகளிடம் அடகு வைத்துவிட்டாரா என்ன?
மார்க்கம் முழுமையடையவில்லையா?
சூனியத்தை நம்புவது ஷிர்க் என்று சொன்னால் மார்க்கம் முழுமைப்படுத்தவில்லை என்று வருமாம். அப்படியானால் ஷிர்க் இருக்கிறது என்று வந்தால் அல்லாஹ்வின் தன்மையையும், அவனது மார்க்கத்தையும் கேலிக்கூத்தாக்கும் நிலைக்கு வரும் என்பதை சிந்திக்கத்தவறிவிட்டார் சலபியார். வஹியைப் பின்பற்ற வேண்டும். வஹீ என்பது அல் குர்ஆனும், நபி வழியும் மட்டும்தான். இதையன்றி வேறு எதுவுமில்லை என்று நாம் சொல்லும்போது, இல்லையில்லை.. சஹாபாக்களையும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது மட்டும் மார்க்கம் முழுமையடையவில்லையா என்ற கேள்வி வராதா? இதற்கு என்ன சொல்லப்போகிறார் சலபியார்? மார்க்கத்தில் இல்லாத ஒன்றை சொல்லும் போது இக்கேள்வியைக் கேட்கலாம். அது நியாயமான வாதம்!. இதுதான் மார்க்கம் என்று ஒரு காலத்தில் தவறாக விளங்கிவிட்டு தற்போது அது தவறு! இது இஸ்லாம் கிடையாது என்று சொல்லும் போது மார்க்கம் முழுமையடையவில்லை என்று வராது. மாறாக முழுமையடைந்த மாரக்கத்தை புரிந்து கொள்வதில் நாம்தான் தவறு இழைத்திருக்கிறோம் என்று வரும். இந்த வேறுபாட்டை உணர முடியாமல் பரிதவிக்கிறார் சலபியார்.
தஜ்ஜாலும் சூனியமும்
சூனியம் ஷிர்க்கில்லை என்பதை மறுக்க முடியாமல் அங்குமிங்காக சென்று சில சில்லறை வாதங்களை சொல்பவர் தற்போது தனது கவசமாக தஜ்ஜாலை தூக்கிக்காட்டுகிறார். தஜ்ஜாலும் அற்புதம் செய்வான் என்று வருகிறதே அதையும் மறுபீர்களா என்று கேட்கிறார். தஜ்ஜாலுக்கும் சூனியத்துக்கும் கொஞ்சமாவது தொடர்பிருக்கிறதா?
அல்லாஹ் தஜ்ஜாலை முஃமின்களுக்கு சோதனையாக இறுதிக்கட்டத்தில் அனுப்புவான். அவன் அற்புதங்களை செய்து காட்டுவான் என்று வருகிறது. இதை மறுக்கத்தேவையில்லை! ஏனெனில் தஜ்ஜால் விடயம் விதிவிலக்கு. மேலும் தஜ்ஜாலுக்கு ஆற்றல் இருப்பதாக நம்புபவன் யார் முஸ்லிமா? முஷ்ரிக்கா? தஜ்ஜாலை நம்பினால் முஷ்ரிக்! சூனியத்தை நம்புபவனும் முஷ்ரிக்! தஜ்ஜாலின் சேட்டை முஃமின்களிடம் பலிக்காது. சூனியம் காபிர்களுக்கும் ஈமானில் உறுதி குறைந்தவருக்கும்தான பலிக்கும் எனபாரா? அப்படியானால் நபிகளாருக்கு பழித்தது என்று சலபி எவ்வாறு சொல்ல முடியும்? இதில் சலபிக்கென்ன சப்போர்ட் இருக்கிறது?
அடுத்து சில சுவாரஸ்யமான சங்திகளை சொல்கிறார்…
ஒரு மஸ்ஜிதில் ஒரு இமாம் தொழத் தயாராகின்றார். இவர்களில் ஒருவர் சூனியம் பற்றி என்ன சொல்றீங்க! என்று கேட்டாராம். ஏன் என்று கேட்டதற்கு சூனியம் இருக்கிறது என்று சொன்னால் உங்களுக்குப் பின்னால் தொழ முடியாது. இல்லையென்றால் தொழலாம் என்றாராம். மற்றும் சில இடங்களில் நாம் ஆய்வில் இருக்கின்றோம் என்று கூறும் இமாம்களுக்குப் பின்னால் தொழுது வருகின்றனராம்.
இதை இவர் சொன்னதால் நாமும் சில கூடுதலான தகவல்களை சொல்ல வேண்டியிருக்கிறது. முஷ்ரிக்கிற்குப்பின்னால் தொழுவது கூடாது என்பதற்காக அவ்வாறு கேட்பதில் எந்த தவறும் இல்லை! ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்களுக்கு கீழிருக்கும் பள்ளியிலுள்ள இமாமக்ளே சூனியத்தை நம்புவதில்லை என்பதுதான். இந்தளவுக்குத்தான் இவரது வாத்த்தின் தரமிருக்கிறது. இவர் போன்றவர்களைப் பின்பற்றித் தொழாததற்கு வேறு சில முக்கிய காரணங்களும் உண்டு. அதை சொல்ல வைத்து விடாதீர்கள்.
இவர்கள் கோழி இறைச்சி வாங்கப் போனாலும் நீங்கள் சூனியத்தை நம்புகின்றீர்களா? ஏனென்றால் நீங்கள் சூனியத்தை நம்பினால் நீங்கள் அறுப்பதை நாம் சாப்பிட முடியாது என்று கேட்பார்களா?
சலபிக்கு சூனியத்தில்தான் வீக் என்றால் ஹலால் ஹராம் தொடர்பான விடயத்திலும் விடலைப்பையன் போன்றே இருக்கிறார். இறைச்சி ஹலால் என்பதற்கு அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுப்பதே போதுமானது. சலபி கப்ர் வணங்குவது ஷிர்க் என்பதால் அவர்கள் கடையில் இறைச்சி வாங்குவதில்லையா?பறகஹதெனியவில் சுன்னா முஹம்மதியாவா இறச்சிக் கடை போட்டுள்ளது?அல்லது சவூதியிலிருந்துதான் இறக்குமதி செய்கிறாரா? அவருக்கே வெளிச்சம்.
திருமணத்தின் போது எதிர்த் தரப்பினரிடம் நீங்கள் சூனியத்தை நம்புகின்றீர்களா? அப்படி நம்பினால் உங்களை நான் மணமுடிக்க முடியாது. ஏனெனில் முஷ்ரிக்கை மணமுடிக்க முடியாது என்று கேட்பார்கள் போலும்! கேட்கட்டும்… கேட்கட்டும்…. சூனியம் பிடித்து அலைகிறார்கள் என்று மக்கள் பேசிக் கொள்வார்கள்…
முஷ்ரிக்கை திருமணம் செய்யக்கூடாது என்று அல்லாஹ் சொல்வதால் திருமணத்துக்கு முன் விசாரிப்பது அல்லாஹ்வின் கட்டளையை மதிப்பது என்றுதான் அர்த்தம்! அலவியின் குடும்பத்தில் திருமண பந்தம் வைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ்வின் கட்டளையெல்லாம் அற்பமானதுதானே! கமிஷன் கிடைத்தால் போதும் என்பதற்காக வழிகெட்ட கொள்கைக்காரர்களுக்கும், ஆளரவமற்ற பகுதிகளில் பள்ளி கட்டும் படு அயோக்கியத்தனத்துக்கும் இப்படிப்பட்ட புலன் விசாரணை தேவையில்லை! அல்லாஹ்வின் திருப்தியை விட்டுவிட்டு அரபிக்கு ஆப்பு வைத்து வயிறு வளர்க்க விரும்பும் சலபி,சுன்னா முஹம்மதிய்யா அதனால்தான் தப்லீக்கு காரர்களுக்கும் சுன்னத் ஜமாஅத்தினருக்கும் பள்ளி கட்டிக்கொடுக்கிறார்கள் போலும்!
சலபியின் வாதங்களைப் பார்க்கும் போது சூனியத்தினால் புத்தி பேதலித்து உளறுவது போன்று உள்ளது. பரவாயில்லை… கிடைத்த சலபி பட்டத்துக்கு ஏற்ப படு சூப்பராக சலப்புகிறார்.
சூனியம் தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட பத்வாவுக்கு இப்படி வானுக்கும் பூமிக்குமாய் குதிப்பவர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (?) கூட்டு துஆவை ஆதரித்து அளத்த பத்வாவுக்கு எதிராக வாய் திறந்திருப்பாரா? அதற்கெதிராக ஓரிரு வார்த்தைகளாவது மறுத்து சொல்லியிருப்பாரா? ஏன் சொல்லவில்லை? ஜம்இய்யதுல் உலமாவில் இந்த வகையறாக்களுக்கு இருக்கும் பங்கும் பறிபோய்விடும் என்றா? இவர்களெல்லாம் பேசும் தவ்ஹீத் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை பொதுமக்களாகிய நீங்களே சிந்தித்துப்பாருங்கள்.

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP