27.8.12

ஒப்பந்தம் கையெழுத்தானது
கடந்த 26.08.2012 அன்று ராமநாதபுரம் மரைக்கார்ப்பட்டினத்தில்
101 தலைப்புகளில் விவாதம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது
அல்ஹம்துலில்லாஹ் ! அல்ஹம்துலில்லாஹ் !

இராமநாதபுரம் மரைக்காயர் பட்டினத்தில் ஜாமிஆ பள்ளிவாசல் வளாகத்தில் 26.08.12 அன்று ஷேக் அப்துல் காதிர் மகன் ஸைஃபுத்தீன் ரஷாதிக்கும் பீர் முஹம்மதுடைய மகன் ஜைனுல் ஆபிதீனுக்கும் இடையே கீழ்கண்டவாறு விவாத ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஒப்பந்த விதிமுறைகள் இரு தரப்பாலும் பேசி ஒப்பக்கொள்ளப்பட்டு இரு தரப்பாலும் தனித்தனியாக வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. வீடியோவில் இருதரப்பும் ஒப்புக்கொண்ட விதிமுறையின்படி கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

வீடியோவில் இரு தரப்பிலும் ஒப்புகொள்ளப்பட்ட படி 101 தலைப்பில் விவாதம் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.

முதல் கட்டமாக நடக்கும் விவாதத்தில் முதல் தலைப்பாக இஜ்மாஃ மார்க்கத்தின் ஆதாரமாகுமா? என்ற தலைப்பில் ஒரு நாளும் இரண்டாவது தலைப்பாக மார்க்கம் சொல்வதில் பீஜே செய்த பொய் பித்தலாட்டங்கள் மற்றும் மார்க்கம் சொல்வதில் ஸைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் மற்றும் பித்தலாட்டங்கள் என்ற தலைப்பில் இரண்டு நாட்களும் ஆக மொத்தம் மூன்று நாட்கள் விவாதிப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த விவாதம் திருச்சியில் நடைபெறும்.

2013 ஆம் ஆண்டு ஜனவரி 25 −ருந்து பிப்ரவரி 15 க்குள் நடத்தும் வகையில் இருதரப்பிலும் தலா மூன்று நபர்கள் கொண்ட பொறுப்பாளர்கள் விவாதம் செய்யும் இடத்தை முடிவு செய்ய வேண்டும். அரங்கம் முன்பதிவு செய்யப்படும் தேதிகளில் விவாதம் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

மீதமுள்ள 99 தலைப்புகளுக்கான விவாதத்தின் அடுத்தகட்ட தேதியும் இடமும் முதல் கட்ட விவாதத்தின் முடிவில் இருவரும் சேர்ந்து பேசி முடிவு செய்து அறிவித்துவிட வேண்டும்.

மீதமுள்ள 99 தலைப்புகளின் பட்டியலையும் பேசப்பட்ட விவாதத்தின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக இருதரப்பாரும் தனித்தனியாகத் தொகுத்து இருதரப்பும் சரிபார்த்து மீண்டும் முழுமையாக எழுதி முழு ஒப்பந்தத்தில் மீண்டும் இருதரப்பும் கையொப்பம் இட வேண்டும்,

இதனை நாங்கள் இருவரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு கையெழுத்து இடுகிறோம்.

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP