16.12.11

பிரிந்ததால் கிடைத்த விடை. பகுதி - 02

இடத்தின் முகப்புத் தோற்றம்
நபித்தோழர்களின் தியாக வாழ்வினை 
படம்பிடித்துக் காட்டிய சிலாபம் சம்பவம்.
SLTJ சிலாபம் கிளை தனியார் பள்ளிவாசலில் இருந்து, இறை அச்சத்தையும் கொள்கையையும் முன் நிருத்தி வெளியேறிய பின் பல வெற்றிகளை ஏக வல்ல  இறைவன் எம் கண்முன்னே காட்டினான்.

தவ்ஹீத் நிலையம் அமைக்க வாங்கிய இடம்
அனைத்தையும் இழந்தாலும் இறைவன் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கை, “இருந்ததை விட சிறப்பானதைப் பெற்றுத் தந்தது” என்று தான் சொல்ல சொல்ல வேண்டும். சிலாபம் கிளையினர் தனியாரின் இடத்திலிருந்து வெளியேறியதன் பின்னர் அழைப்பு மையம் ஒன்றினை அமைக்க இடம் வாங்கும் நோக்கில் பல முயற்சிகளை மேற்கொண்டனர். அப்போது பல லட்சம் பெருமதி வாய்ந்த அனைத்துப் பணிகளுக்கும் வசதியான ஓரிடம் இருக்கும் தகவல் எட்டியது. கணக்குப் பெரியதாய் இருந்தாலும் காரியம் நிரையவே செய்யலாம் என்பதினால் அதை வாங்கலாம் என்று  ஜமாஅத் நிர்வாகம் முடிவெடுத்தது.


“தர்மம் தலை காக்கும்” என்பார்கள்.
உண்மையிலே அதன் மூலம் தன்னையே நரகப் படுகுழியிலிருந்து காத்துக் கொள்ள இருப்பதையெல்லாம் இழக்கத் தயாரான சிலாபத்துக் கொள்கை வாதிகள்.
இடம் பார்த்து விட்டோம்.  பல லட்சம் தேவையென்றதும் நினையா விதத்தில் பணம் மற்றும் நகைகள் வந்து குவிந்தன.
லட்சக்கணக்கான பணம், வாகனம், காணி, இன்னும் சிறுவர்கள் முதற்கொண்டு தாம் அணிந்திருந்த நகைகள், சேமித்து வைத்த பணம் என்று இறை பணிக்காக அள்ளி இறைத்தனர்.
(இன்ஷா அல்லாஹ் விவரம் மிக விரைவில் வெளியிடப்படும் )

இறைவன் அருளால் இன்று (15.12.2011) இடம் வாங்குவதற்கான ஒப்பந்தமும் (Agreement) செய்து முடிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

எமது திட்டங்கள்
  • புதிதாக இஸ்லாத்தை ஏற்றோருக்கான அடிப்படைக் கல்வி வகுப்பு.(முற்றிலம் இலவசமாக)
  • உலகக் கல்வியுடன் கூடிய தரமான பிரச்சாரகர்களை உருவாக்கும் கல்விக் கூடம்.
  • குர்ஆன், சுன்னா அடிப்படையில் தொழுவற்கான இடம். 
  • ஜமாஅத்தின் உள்ளரங்கு நிகழ்ச்சிகளுக்காக கேட்போர் கூடம்.  
  • சிறார்களுக்கான நேசரி பாடசாலை.
  • சிறுவர் பூங்கா.        இன்னும் பல................
இந்த உயர் பணியை நிரைவேற்றிட உங்கள் பணம் மற்றும்  பொருள் உதவிகளை எதிர் பார்க்கிறோம்.

இறைவா! மறுமைக்கான இப்பணியை எங்களுக்கு இலவாக்குவாயாக.!
எம் பணிகளை அங்கீகரிப்பாயாக!.

M.J.M.S.சதாத் 
செயலாளர்
S.L.T.J.சிலாபம் கிளை

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP