4.12.11

ஹெம்மாத்தகமையில் ஏற்பட்ட தவ்ஹீத் புரட்சி.

விவாதத்திற்கு வருவார்களா தப்லீக் மவ்லவிகள்?
இலங்கை முஸ்லீம்கள் வாழும் ஊர்களில் பழமை வாய்ந்த நகரங்களில் ஒரு முக்கிய நகரம் ஹெம்மாதகமை எனலாம். இலங்கை மக்களுக்கு மத்தியில் அதிகமான ஆலிம்களை கொண்ட ஊராக அறியப்பட்ட இவ்வுரில் பலவிலதமான கொள்கைகளையும் கொண்ட மவ்லவிமார்களும் இருக்கிறார்கள்.

குறிப்பாக தவ்ஹீத் பேசிய ஆலிம்களையும், அதற்கு எதிராக ஆலிம்களையும் நிறையப் பெற்ற ஒரு ஊர் இந்த ஹெம்மாதகமை.

கடந்த 25.11.2011 வெள்ளிக் கிழமை இஷா தொழுகைக்குப் பின் ஹெம்மாதகமை தப்லீக் மர்கஸில் பித்அத் என்றால் என்ன என்ற தலைப்பில் உரையாற்ற எங்களுக்கு அனுமதி வேண்டும், பித்அத்தைப் பற்றி ஏகத்துவ வாதிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் அதற்காக நாங்கள் உங்களுக்கு பித்அத்தைப் பற்றிய தெளிவைத் தரத் தயார் என்று சொன்ன நேரத்தில் பள்ளியின் மேல் மாடியில் ஊர் மக்கள் அனைவரையும் வரவழைத்து அவர்களுக்கு உங்கள் பிரச்சாரத்தை நீங்கள் செய்யலாம் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்ததையடுத்து அங்குள்ள தவ்ஹீத் ஜமாத் சகோதரர்கள் இதற்குறிய ஏற்பாடுகளை செய்தார்கள்.

உலமாக்கள் முன்னிலையில் கொள்கையை உடைத்துப் பேசிய ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் ரஸ்மின் M.I.Sc மற்றும் சகோதரர் பர்ளீன் M.I.Sc ஆகிய இருவரும் பித்அத் பற்றி தப்லீக் ஜமாத் உலமாக்களுக்கு மத்தியிலேயே விளக்கம் தருவதற்காக ஹெம்மாதகமைக்கு சென்றார்கள்.

சரியாக மாலை 7.30 அளவில் பித்அத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் சகோதரர் ரஸ்மின் M.I.Sc அவர்கள் உரையாற்ற ஆரம்பித்தார். உரையின் ஆரம்பத்தில் இருந்தே பித்அத்தின் கோட்டையான தப்லீக் பள்ளியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் அனைவரும் அங்கிருந்தார்கள்.

பள்ளியின் தலைவரும் துணைத் தலைவரும் 7 வருடங்கள் மத்ரஸாவில் ஓதி பட்டம் பெற்ற உலமாக்கள். இவர்கள் தவிர இன்னும் சில உலமாக்களும் அங்கிருந்தார்கள்.

பள்ளியின் துணைத் தலைவராக இருந்த ரியாஸ் மவ்லவி என்பவர்தான் அனைத்து பித்அத்துக்களுக்கும் துலாக் கோலாக செயல்படுபவர். தலையில் மிகப் பெரிய தலைப்பாகை அணிந்து முழு நீல ஜுப்பா அணிந்திருக்கும் அவர் தான் அங்குள்ள தப்லீக் சகோதரர்களுக்கு ரோல் மாடல் என்று கூட சொல்ல முடியும்.

உரையின் ஆரம்பத்தில் “லா இலாஹ இல்லல்லாஹ்” தொடர்பான விளக்கம் கொடுக்கப்பட்டதன் பின் மார்கம் முழுமையாக்கப்பட்டு விட்டதனையும், நபியவர்களுக்குப் பின் இந்த மார்கத்தில் எந்தவொரு செயல்பாட்டையும் மார்கம் என்று யாரும் காட்டித் தர முடியாது. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டியதற்கு மாற்றமாக யார் எதைச் சொன்னாலும் அது மார்கமாக மாற முடியாது என்பது குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் துணையுடன் தெளிவாக விளக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து நமது சமுதாயத்தில் மார்க்கம் என்ற போர்வையில் பரவியுள்ள பித்அத்துக்கள் என்னென்ன அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் பட்டியல் போட்டு விளக்கம் கொடுக்கப்பட்டது.

தொழுகையின் ஆரம்பத்தில் நிய்யத் என்ற பெயரில் ஓதப்படும் சில அரபி வாசகங்கள்.

ஐங்காலத் தொழுகையின் பின் ஓதும் கூட்டு துஆ.

சுப்ஹுத் தொழுகையில் ஓதப்படும் குனூத்.

ஜும்மாவிற்கு சொல்லப்படும் இரண்டு பாங்குகள்,

ஜும்மாவில் இமாம் மஹ்ஷர் ஓதுவது,

ஜும்மாவில் கையில் ஒரு தடியை வைத்துக் கொண்டிருப்பது.

மரணித்தவர்களுக்கு கத்தம் ஓதுவது,

நல்ல நாட்கள் என்ற போர்வையில் பாத்திஹாக்களை ஓதுவது,

கந்தூரி கொடுப்பது,

போன்ற பல பித்அத்தான காரியங்கள் பட்டியல் போடப்பட்டு விளக்கப்பட்டதுடன் தொப்பி, தலைப்பாகை, ஜுப்பா என்பன சுன்னத்தா இல்லையா? என்பது போன்ற பல விஷயங்களும் சொற்பொழிவில் தெளிவாக விளக்கப்பட்டது.

அழகான கேள்விகளும், தெளிவான பதில்களும்.

பித்அத் செய்பவர்கள் நரகவாதிகள் என்றால் எங்கள் பள்ளியைச் சேர்ந்த உலமாக்களின் நிலை என்ன?

பயான் முடிந்தவுடன் கேள்வி, பதில் நிகழ்சி ஆரம்பமாகியது. கேள்வி, பதில் நிகழ்ச்சியில் முதலாவதாக கேட்ட சகோதரர் பித்அத் தொடர்பான தனது சந்தேகத்தை முன்வைத்தார்.

நபியவர்கள் காட்டித்தந்தவைகளை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என்கிறீர்கள். நபியவர்கள் காட்டித் தராத கூட்டு துஆ, குனூத் போன்றவை மார்கத்தில் இல்லாத புதிதாக உருவாக்கப்பட்ட பித்அத்துக்கள் என்றும் சொன்னீர்கள். அதற்கு ஆதாரமாக நீங்கள் கூறிய ஹதீஸில் மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படுபவைகள் பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் நம்மை சேர்க்கும் என்று தெரிவித்தீர்கள்.

அப்படியாயின் எங்கள் பள்ளி மவ்லவி மற்றும் ரியாஸ் மவ்லவி உள்ளிட்டவர்கள் தினமும் ஐங்காலத் தொழுகையின் பின் கூட்டு துஆ ஓதுகிறார்கள், சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுகிறார்கள், கத்தம் பாத்திஹா போன்ற மார்கம் காட்டித் தராத பல பித்அத்துக்களை செய்கிறார்கள் இவர்கள் அனைவரும் நரகம் தான் செல்வார்களா? என்று பித்அத் செய்யும் உலமாக்கள் முன்னிலையில் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.

கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோதரர் ரஸ்மின் அவர்கள் கேள்விக்குறிய பதிலை நபியவர்களே நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்கள் – உங்கள் கேள்விக்குறிய பதிலாக நான் எனது கருத்தை சொல்லமாட்டேன் நபியவர்களின் ஹதீஸையே சொல்கிறேன் என்று கூறிவிட்டு.

பித்அத் தொடர்பாக நபியவர்கள் கூறிய ஹதீஸை எடுத்துக் கூறினார்.

உரையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் ஆகும். வழிகாட்டுதலில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும். காரியங்களில் மிகக் கெட்டது (மார்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டதாகும். (மார்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்ரும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்திற்கு இட்டுச்செல்லும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : நஸாயீ – 1560)

அதன் பின் அந்த ஹதீஸிற்கு விளக்கம் சொல்லும் போது பித்அத் செய்பவர்களுக்குறிய தண்டனை நரகம் தான் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். இதனடிப்படையில் சத்தியம் எது? அசத்தியம் எது? என்பதை இந்த உலமாக்கள் தெரிந்ததன் பின்னாலும் மார்கத்தில் இல்லாத பித்அத்துக்களை செய்வார்கள் என்றால் இஸ்லாத்தின் பார்வையில், நபியவர்களின் ஹதீஸின் படி நரகத்துக்குறிய காரியத்தை இவர்கள் செய்கிறார்கள் என்பது தெளிவானது.

இதனை நானாக சொல்லவில்லை. நபி (ஸல்) அவர்கள் தான் சொல்கிறார்கள். அதனால் தயவு செய்து பித்அத் செய்யும் உலமாக்கள் இன்றிலிருந்து அதைவிட்டு நீங்கி நபியவர்களின் வழிகாட்டுதல் படி தங்கள் இபாதத்துக்களை அமைத்துக்கொள்ள முன்வர வேண்டும் இல்லாவிட்டால் அல்லாஹ்விடத்தில் நாளை மறுமையில் இவர்கள் மாபெரும் குற்றவாளிகளாக நிற்பார்கள். என்று பித்அத் செய்யும் உலமாக்களின் முன்னிலையிலேயே சத்தியக் கொள்கை தெளிவாக சொல்லப்பட்டது.

ஆதாரமின்றி திண்டாடிய 20 வருட ஆலிம்(?).

நபியவர்களின் தெளிவான ஹதீஸை வைத்து நாம் கூறிய பதிலை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவமில்லாமல் பித்அத்திற்கு துணை போக வேண்டும் என்பற்காக கருத்துக் கூறுவதற்காக எழுந்த பள்ளியின் துணைத் தலைவர் ரியாஸ் மவ்லவி அவர்கள்,

நமது தரப்பு பேச்சாளர் ஆற்றிய உரையை குருடன் யானையைப் பார்ப்பது போன்றது என்று வர்ணித்துவிட்டு,

நீங்கள் பித்அத் செய்வர்கள் நரகம் என்று சொல்வது மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கும். நான் 20 வருடங்களுக்கு மேலாக குர்ஆன், சுன்னாவை ஆய்வு செய்கிறேன். இன்று இரவு இஷா தொழுகைக்குக் கூட நாங்கள் கூட்டு துஆ ஓதத்தான் செய்தோம். அப்படியிருக்கையில் இது நரகத்திற்குறிய செயல் என்று நீங்கள் சொல்வது தவறு என்று தனது வாதத்தை முன்வைத்தார்.

யானையைப் பார்த்ததாக சொன்ன குருடன் யார்?

அவருடைய கருத்துக்கு பதிலளித்த நமது பிரச்சாரகர், 20 வருடங்கள் குர்ஆன், சுன்னாவை ஆய்வு செய்ததாக சொல்லுகிறீர்களே இருபது வருடங்கள் நீங்கள் செய்த ஆய்வில் ஒரு ஹதீஸையாவது உங்கள் பித்அத்திற்கு ஆதாரமாக காட்ட முடியுமா?

பித்அத்தை செய்து கொண்டு குர்ஆன், சுன்னாவை ஆய்வு செய்வதாக கூறுவது தான் உண்மையில் குருடன் யானையைப் பார்த்த கதையாக உள்ளது என்பதை ரியாஸ் மவ்லவி தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி உண்மையில் நீங்கள் 20 வருடன் மார்க்கத்தைப் படித்தவர் என்றால் நீங்கள் செய்யும் பித்அத்துக்களுக்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியுமா? இன்று விடிய விடிய வேண்டுமானாலும் நாங்கள் நிற்கத் தயார் நீங்கள் தயாரா? என்று ஒன்றுக்கு பல முறை கேட்டும் பதில் தரத் திராணியற்று மௌனித்துப் போனார் 20 வருட ஆலிம்(?)

குழம்பியது யார்? பொது மக்களா? பித்அத் ஆலிம்களா? பதில் கொடுத்தார் பள்ளியின் தலைவர் நிஸாம் மவ்லவி அவர்கள்.

நமது பயானை பற்றிய விளக்கம் சொல்ல முற்பட்ட 20 வருட ஆலிம்(?) ரியாஸ் அவர்கள். இந்த பயானைக் கேட்டவர்கள் அனைவரும் தற்போது குழம்பிப் போய் இருக்கிறார்கள் என்று கூறி தூய்மையான மார்க்கத்தை தெளிவாக புரிந்து கொண்ட ஹெம்மாத்தகமை மக்களை திசை திருப்ப முயற்சி செய்தார்.

அப்படி அவர் சொல்லும் போதே எழுந்து நின்ற பள்ளிவாயளின் தலைவர் சகோதரர் நிஸாம் ஆலிம் அவர்கள் ரியாஸ் மவ்லவி சொல்வதைப் போல் இங்கு யாரும் குழம்பிப் போகவில்லை மார்க்கத்தை அறிவதற்காகத் தான் அனைவரும் கூடினார்கள். இங்கு சொல்லப்பட்ட கருத்துக்களை மிகத் தெளிவாக மக்கள் விளங்கியிருக்கிறார்கள் அதனால் மக்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள் என்று கூறி வீனாக மக்களை குழப்பும் வேலையை ரியாஸ் மவ்லவி செய்யத் தேவையில்லை என்று மிகத் தெளிவான பதிலை ரியாஸ் மவ்லவியை நோக்கி அனைத்து சகோதரர்களுக்கும் மத்தியில் அவர்களின் இடத்திலேயே கூறினார்.

நடத்தப்பட்ட பயானினால் குழம்பிப் போனவர்கள் கை தூக்குங்கள் என்றார் 20 வருட ஆலீம் ரியாஸ் அவர்கள். அப்போது அங்கு கூடியிருந்தவர்களின் அவருக்கு சாதகமாக வெரும் மூன்று பேர்கள் மாத்திரம் தான் கைதூக்கினார்கள். மற்ற அனைத்து சகோதரர்களும் நடத்தப்பட்ட பயான் எங்களுக்கு தெளிவைத் தான் உண்டாக்கியது என்பதற்கு சாட்டியாளர்களாக மாறினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

சத்தியத்தை மறைக்க முயன்று தனக்கு சாதகமாக ஆள் சேர்க்க நினைத்த அசத்தியவாதியை அல்லாஹ் மக்களுக்கு இணங்காட்டினான்.

கை உயர்த்தச் சொல்லி மூக்குடைபட்ட 20 வருட ஆலிம் செய்வதறியாது திகைத்துப் போனார்.

இனிமேல் கூட்டு துஆ ஓத மாட்டேன் என்று கூறி சத்தியத்தை ஏற்றுக் கொண்ட பள்ளித் தலைவர் சகோதரர் நிஸாம் மவ்லவி.

பிரச்சினை முற்றிப் போன நேரத்தில் மக்களை அமைதிப் படுத்தும் விதமாக பேச ஆரம்பித்த பள்ளியின் தலைவர் மவ்லவி நிஸாம் அவர்கள் நானும் இவ்வளவு காலமாக கூட்டு துஆ, குனூத் போன்ற பித்அத்துக்களை செய்திருக்கிறேன். அல்லாஹ்விடத்தில் அதற்கு நான் மண்ணிப்புக் கேட்டுக் கொள்வேன் இனிமேல் இந்த பித்அத்தான காரியங்களை நான் செய்யமாட்டேன் என்று மக்கள் மத்தியில் உறுதி கூறுகிறேன் என்று சத்தியக் கொள்ளையை ஏற்றுக் கொண்ட செய்தியை சந்தோஷமாக அறிவித்தார்.

எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகின்றான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி – 71)

என்ற ஹதிஸை சுட்டிக் காட்டிய பள்ளியின் தலைவர் இந்நிகழ்ச்சியின் மூலம் நமக்கு அல்லாஹ் நலவை நாடியிருக்கிறான். ஆகையினால் இச்சந்தர்பத்தை நாம் தவறவிடக் கூடாது.

ரியாஸ் மவ்லவி உள்ளிட்டவர்கள் தங்கள் பித்அத்துக்களை மக்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டும். அதனால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்துடன் ரியாஸ் மவ்லவி உள்ளிட்ட பித்அத் செய்யும் ஆலிம்கள் பகிரங்க விவாதம் ஒன்றை செய்து தங்கள் கருத்தை நிரூபித்துக் காட்டாத வரை நாம் இதை விட்டுவிட மாட்டோம்.

நான் இன்னும் 07 மாதங்கள் இந்தப் பள்ளியின் தலைவராக இருப்பேன் அதற்குள் கண்டிப்பாக இரு தரப்புக்கும் இடையிலான பகிரங்க விவாதம் ஒன்றிற்கு நாம் ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறோம். அதற்கு இங்கு வந்துள்ள அனைத்து சகோதரர்களும் உங்கள் ஒத்துழைப்பை தரவேண்டும் என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து இறுதியாக பேசிய ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோதரர் ரஸ்மின் அவர்கள் ஹெம்மாதகமை மக்கள் பித்அத்தை விட்டு சுன்னாவின் பக்கம் திரும்ப வேண்டும். குர்ஆனையும், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டுதலையும் மாத்திரம் தான் நாம் பின்பற்ற வேண்டும். அதனால் மார்க்கத்திற்கு முரனான பித்அத்தான காரியங்களை செய்யும் ரியாஸ் ஆலிம் உள்ளிட்டவர்களுடன் பகிரங்க விவாதம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்வதுடன் தூய்மையான முறையில் இஸ்லாத்தைப் பின்பற்றுவதற்கு தயாராகும்படியும் கேட்டுக் கொண்டதுடன், பித்அத்துக்களை தூக்கியெறிந்து சுன்னாவின் பக்கம் சத்தியக் கருத்தை ஏற்றுக் கொண்ட பள்ளித் தலைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

இறுதிக் கட்டமும் இனிமையாக…………………….

பித்அத் வாதிகளுடன் கண்டிப்பாக விவாத ஏற்பாட்டை செய்வதாக உறுதியளித்த ஹெம்மாதகமை சகோதரர்கள் அனைவரும் நிகழ்சியின் இறுதியில் நமது ஜமாத் பிரச்சாரகர்களான சகோதரர் பர்ளீன் மற்றும் ரஸ்மின் ஆகியோருடன் கை குலுக்கி – முஸாபஹா செய்து சத்தியத்தை ஏற்றுக் கொண்ட தங்கள் சந்தோஷத்தைப் பரிமாறிக் கொண்ட காட்சி உள்ளத்தை குளிர வைத்தது. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!


அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய் களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.(61:08)
'உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடிய தாகவே உள்ளது என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17: 81)


வீடியோவைப் பாருங்கள்.

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP