11.12.11

அறுகோண அதிசயம்.

சகோதரர் ரஸ்மி ஹமீத் அவர்கள் அழைப்பு இதழில் எழுதிய கட்டுரை
இறை வேதம் என்பதற்கான மிக முக்கியமான சான்றுகளில் ஒன்றுதான் அதில் நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு முரணான எந்த ஒரு கருத்தும் இருக்கக் கூடாது என்பது. உலகில் இறைவேதம் எனக் கூறப்படும் எந்தவொரு நூலாக இருந்தாலும் அவை அனைத்திற்கும் இந்தத் தகுதி இல்லை என்பதே நிஜம். ஆனால் இஸ்லாமியர்களாகிய நாம்  பின்பற்றும் இறைவாக்கான குர்ஆனும், ஹதீஸூம் அறிவியல் வழுவற்றதாக இருப்பதுடன் மேலதிகமாக இன்னொரு சிறப்பியல்பையும் கொண்டுள்ளது. அதுதான் இனிவரும் காலங்களில் அறிவியல் நிரூபிக்க இருக்கும் வெளிப்படை உண்மைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பே அடித்துக் கூறியிருப்பது.
குர்ஆனையும் ஹதீஸையும் ஆராய்ச்சி செய்த பெரும் பெரும் அறிஞா;கள் எல்லாம் எத்தனையோ அறிவியல் உண்மைகளை கூறியுள்ளாh;கள். இதுவரை காலமும் வெளிவராத எமது சிற்றறிவுக்கு உற்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டு பெறப்பட்ட ஒரு தகவலை எமது இதழான அழைப்புஇதழில் வெளியிடுகிறோம்.
தேன் உருவாக்கம் பற்றி அல்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை என்ன?
ஒரு தேன் கூட்டில் 3 வகையான தேனீக்கள் காணப்படும்.
1. இராணித் தேனி 
2. ஆண் தேனீ 
3.பெண் வேலையாளித் தேனீ
வேலையாளித் தேனீ தனது  ஆரம்பப்பருவத்தை தனது வீட்டிலேயே(தேன் கூட்டில்) கழிப்பதால் இவை வீட்டுத் தேனீக்கள் (hழரளந டிநநள)என அழைக்கப்படும். வீட்டை விட்டு வெளியேறும் பருவத்தை அடையும் நிலையில் இவை களத் தேனீக்கள்( கநைடன டிநநள) என அழைக்கப்படும்.
தேனீக்களின் சமிபாட்டுத் தொகுதியின் அமைப்பு மிகவும் வித்தியாசமானது.
தேனீக்களுக்கு இரண்டு வயிறுகள் உள்ளன. 1. உண்மையான வயிறு. 2. தேன் வயிறு  எனும் மேலதிகப் பை. இந்தத் தேன் வயிறானது தேனியின் உண்மையான வயிற்றுக்கு முன்னால் காணப்படும்.
தேனீக்கள் மலர்களில் உள்ள தேனை  உறிஞ்சி தேன் வயிற்றினுள் சேமிக்கும். இங்கு தேனை சேமிக்கும் தேனீக்கள் மலட்டுப் பெண் தேனீக்கள் ஆகும். இவை கநைடன டிநநள (களத் தேனீக்கள்) என அழைக்கப்படும். இவை முதிர்ச்சியடைந்த தேனீக்கள் ஆகும். இவற்றின் வேலை தேனை சேகரிப்பது மாத்திரமே. இதன் ஆயுட்காலம் 6-8 வாரங்கள் மாத்திரமே.
இந்த வேலையாளித் தேனீக்களின் முதிர்ச்சியடையாத இளமைத் தேனீக்கள் hழரளந டிநநள  (வீட்டுத் தேனீக்கள்) என அழைக்கப்படும். இந்த வீட்டுத் தேனீக்கள் தேன் கூடுகளில் இருக்கும். இவை தமது வயதுக்கு ஏற்ப பல்வேறு தொழில்களைச் செய்யும். ஆரம்பத்தில் இதன் தொழில் சுத்தம் செய்வதும், கூட்டை வடிவமைப்பதும், தேன்கூட்டின் வெப்பநிலையை 31-35 °ஊ வரை சீர்செய்வதும், தேன் கூட்டைப் பாதுகாப்பதும் ஆகும்.
பின்னர் இவை தாதியாக இருந்து பொறிக்கப்பட்ட தேன் குஞ்சுகளை பராமரித்து உணவளிக்கும். மேலும்  ராணித்தேனீயையும் ஆண் தேனீக்களையும் கவனிக்கும்.
வேலையாளித் தேனீக்கள் தேன் கூட்டிற்குத் திரும்பி வந்து தாம் உண்டு பாதி ஜீரணமான தேனை தேன் வயிற்றில் இருந்து நேரடியாக வீட்டுத்தேனீக்களின் வாயிலேயே வாந்தியெடுக்கும் . சிலவேளை தேன் கூட்டிலும் தேனைக் கக்கிவிடும். இது கிட்டத்தட்ட கால்நடைகள் அசைமீட்டுவது போன்ற ஒரு செயலாகும். இவ்வாறு பெறப்பட்ட தேன் அதிக நீர்த்தன்மை உடையதாகக் காணப்படும். இதன் நீர்த்தன்மையை 18மூ வரை குறைப்பதற்காக வீட்டுத்தேனீக்கள் இரண்டு வேலைகளைச் செய்யும்.
1. பல தடைவை மீண்டும் மீண்டும் தேனை விழுங்கி வாந்தியெடுக்கும்.
2. தமது சிறகுகளை அடிப்பதன் மூலம் நீரை ஆவியாக்கும். வேலையாளித் தேனீக்களினால் வாந்தியெடுக்கப்பட்ட தேனை வீட்டுத் தேனீக்கள் முகர்ந்து, தமது நாவால் நக்கி வெறுமையாக உள்ள தேன் கூட்டின் அறைக்குள் பு+ச்சு(piவெ) பூசுவது போல் நிரப்பும். இந்தத் தேனில் தேனீக்களின் நொதியங்கள் கலந்திருக்கும்.
பின்னர் வீட்டுத் தேனீக்கள் மெழுகு போன்ற ஒரு பதார்த்தத்தை தமது உடம்பு பக்கவாட்டியிலிருந்து சுரக்கும். அந்த மெழுகை அவை தமது முன் காலினால் எடுத்து தேன் நிரப்பப்பட்ட அறைகளை அடைத்து முத்திரையிடும்.
இந்த வேளையில் வீட்டுத் தேனி களத் தேனீக்களாக மாறும் வயதை அடைந்து விடும்( 3 வாரம்). அவை கூட்டை விட்டு வெளியேறி களத் தேனீ செய்யும் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கும்.
இப்போது அல்குர்ஆன் என்ன சொல்கின்கின்றது என்று பார்ப்போம்
இதே விடயத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் அருளப்பட்ட அல்குர்ஆன் மிக அற்புதமாகச் சொல்கிறது.
அதாவது,
குர்ஆன் கூறும் வசனம் இதுதான்.
மலைகளிலும்,மரங்களிலும்,மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்! என்று உமது இறைவன் தேனிக்களுக்கு அறிவித்தான்.அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது.அதில் மனிதர;களுக்கு நோய் நிவாரணம் உள்ளது.சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.(16:68,69)
இந்த வசனம் தேனீக்கள் என்று பன்மையாக ஆரம்பிக்காமல், தேனி என்று ஒருமையாக ஆரம்பிக்கிறது. அதாவது ”” மலைகளிலும்,மரங்களிலும்,மனிதர;கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! என்று அல்லாஹ் ஒருமையாக நீஎன்று ஆரம்பிக்கின்றான். மேலும் அதைத் தொடர்ந்து வரக்கூடிய இடங்களிலும் கூட சாப்பிடு”,  “செல்”,  என்று ஓருமையாகவே அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இப்போது நாம் ஆய்வுசெய்யவேண்டிய அந்த வசனத்தைப் பார்ப்போம்.
அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது.
ஏற்கனவே தேனீயைப் பற்றி ஒருமையாக ஆரம்பித்த வசனம் இவ்விடத்திலும் அதன்என்று ஒருமையாகவே ஆரம்பிக்கின்றது. அதாவது அதன் (அந்த ஒரு தேனியின்) வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது.
இங்கு ஒருதேனியைப் பற்றி பேசிய அல்லாஹ் வயிற்றில்இருந்து என்று கூறாமல் வயிறுகளிலிருந்துஎன்று கூறுவது கவனிக்கத்தக்கது.
ஒரு தேனிக்கு ஒரு வயிறு இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட வயிறுகள் இருப்பதாக கூறியிருப்பதில் இருந்து தேனீக்களுக்கு 2 வயிறுகள் உள்ளது என்ற இந்த விஞ்ஞான உண்மை தெளிவாகிறது.
ஒரு தேனியின் வயிறுகளில் இருந்து என்று நான் குறிப்பிட்டதால் இங்கு ஒரு நியாயமான சந்தேகம் தோன்றலாம். அதாவது தேனை சேமிக்க தேன் வயிறுஎன்ற ஒன்று மாத்திரம் இருக்கும் போது, அந்தத் தேன் வயிற்றில் இருந்து தேன் வெளிப்படாதா? “வயிறுகளில்இருந்து வெளிப்படுகின்றது என்று அல்லாஹ் இரண்டு வயிறையும் சேர்த்து குறிப்பிடுவது ஏன்?
தேனில் உள்ளடங்கியுள்ள பதார்த்தங்களையும், தேன் உருவாகும் விதத்தையும் கவனித்தால் இந்தச் சந்தேகம் நீங்கிவிடும்.
வெறும் பு+வில் இருக்கும் தேனில் அதிக அளவில் இயற்கை வெல்லம்( யெவரசயட ளரபயச)இ  சில மென் அமிலங்கள் ( றநயம யஉனைள), சில நச்சுப் பொருட்கள் ஆகியவை அடங்கியிருக்கும். ஆனால் தேனீக்களால் உருவாக்கப்படும் தேனில் வெறும் பூவில் இருக்கும் தேனில் காணப்படாத எளிய வெல்லம் , புரதம், பல்Nறுபட்ட நொதியங்கள், விற்றமின்கள், கனியுப்புகள், சில எண்ணெய் வகை, நிறப்பொருள், போன்ற ஏராளமானவை அடங்கியிருக்கும்.
இதில் புரதம், பல்வேறுபட்ட நொதியங்கள் என்பன தேனீக்களின் தேன் வயிறு அல்லாத உண்மையான வயிற்றில் காணப்படும் பொருட்களாகும். இங்கு இவை சேர்க்கப்படக் காரணம் தேன் வயிறும், உண்மையான வயிறும் அடுத்தடுத்து இருப்பதும் இரண்டு வயிறுகளுக்கும் இடையில் வால்வு(எயடஎந) ஒன்றின் மூலம் தொடர்பு இருப்பதும் ஆகும். மேலும் நான் ஏற்கெனவே விளக்கிய விளக்கத்துக்கமைய தேனின் ஈரத்தன்மையைக் குறைக்க வீட்டுத் தேனீக்கள் பலதடவை தேனை விழுங்கி வாந்தியெடுக்கும் போதும் இந்த மேலதிகப் பொருட்கள் சேர்க்கப்படும்.
எனவே தேன் என்பது தேனியின் இரண்டு வயிறுகளில் இருந்தும் வெளிப்படும் பாணம் ஆகும்.
தேனீக்களின் வாயிலிருந்தே தேன் வருகின்றது என்று 1400 ஆண்டுகளாக இருந்த நம்பிக்கைக்கு மாற்றமாக தேனீக்களின் வயிறுகளில் இருந்துதான் தேன் வெளிப்படுகிறது என்ற விஞ்ஞான உண்மையை குர்ஆன் கூறியிருப்பது அல்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான மிகப்பெரிய ஆதாரமாகும்.
இதில் இன்னுமொரு விஞ்ஞான உண்மையும் இருக்கிறது. அதாவது தேனீக்கள் தேனை சேகரிப்பது மலா;களில் இருந்து மாத்திரம் என்று நம்மில் அதிகமானோர் நினைத்துக்கொண்டிருக்கிறாh;கள். ஆனால் மலர்களில் தேன் இல்லாத நேரங்களில் தேனீக்கள் நன்கு பழுத்த பழங்களில் இருந்தும், தாவரங்களின் காயப்பட்ட பகுதிகளிலிருந்து வடியும் பதனீர், கள் போன்ற பொசிவுகளிலிருந்தும் இனிப்பைச் சேகரிக்கும்.
பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு!
என்ற இந்த அல்குர்ஆன் வசனம் இதைத்தான் சொல்லிக்காட்டுகிறது.
தேனின் ஒரு பகுதியை தேனீக்கள் சாப்பிட்டுவிடுவதாலேயே சாப்பிடுஎன்றும் கூறுகிறான்.
இங்கு மேலும் ஒரு விஞ்ஞான உண்மையையும் குர்ஆன் கூறுகிறது.
ஆண் தேனீக்களின் ஒரே வேலை இராணித்தேனீயுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு இராணித்தேனீயைக் கருக்கட்டச்செய்வது மாத்திரமே. ஆனால் பெண் தேனீக்களின் வேலை அதன் வயதுக்கு ஏற்ப மாறுபடும் என்பதை முன்பு விளக்கியுள்ளோம். இங்கு நாம் கூறவரும் முக்கிய விடயம் என்னவென்றால், தேனை சேகரிக்கச்செல்லும் தேனிக்களும் இந்த பெண் தேனீக்களே என்பதாகும். இதையும் நாம்; முன்பு விளக்கியுள்ளோம். இப்போது விடயத்துக்கு வருவோம்.
அதாவது அரபி மொழியில் வினைச்சொற்களை வைத்து அது ஆண்பாலைக் குறிக்கிறதா? பெண்பாலைக் குறிக்கிறதா? என்று கூறமுடியும். இவ்வசனத்தில் வரும் வினைச்சொற்களான கூடுகளை நீ அமைத்துக் கொள்! சாப்பிடு!, செல்! என்பன பெண்பாலைக் குறிக்கும் சொற்களே. அதாவதுஅமைத்துக் கொள்என்னும் வினைச்சொல் இத்தஹிதீ என்றும், “சாப்பிடுஎன்னும் வினைச்சொல்  குலீய்  என்றும், “சொல்என்னும் வினைச்சொல் பஸ்லுகீ  என்றும், பெண்பாலில் முடிவடைகின்றன. இம்மூன்று சொற்களும் யா எனும் எழுத்தில் முடிவடைந்துள்ளன. அரபியில் பெண்பாலில் அமையும் வினைச்சொற்கள் முடிவடையும் முறை இதுவாகும். இவை ஆண்பாலில் முடிவடையும் போது, “இத்தகித்” , “குல்” “பஸ்லுக்என கடைசி எழுத்து சுகூன் செய்யப்பட்டு முடிவடையும். ஆகவே இவ்வசனங்களின் எழுவாயாக இருக்கும் தேனீ என்பதும் பெண்பாலைச் சேர்ந்ததே.
எனவே தேனைச் சேகரிக்கச் செல்லும் தேனீக்கள் பெண்தேனீக்கள் என்ற விஞ்ஞான உண்மையையும் அல்குர்ஆன் பறைசாற்றுகிறது.

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP