28.10.11

பன்றித் தோல் வியாபாரம் கூடுமா? (Face book விவாதம்) Part 1

பன்றித் தோல் வியாபாரம் சம்பந்தமாக எமது பிரச்சாரகர் சகோதரர் ரஸ்மி அவர்களுக்கும் அஹ்மத் ஹூசைன் என்ற ஸலபிக்கும் இடையில் நடந்த எழுத்து விவாதம்.

பன்றி தோல் வியாபாரம் கூடும் மற்றும் இது ஹலால் என்று இவர்கள் சொல்லுகிறார்கள்.
அறிவாக சிந்திக்கிறோம் என்று முட்டாள் தனமா அவர்களே பதில் தந்து மக்களை வழிகேடுப்பதை இதில் காணலாம். பன்றி வாங்குவது மற்றும் விற்பது ஹராம் என்று பி ஜெயே ஒரு வீடியோ கிளிப்பில் சொல்லி இருக்கிறார். இப்போ இவர்களுக்கு பன்றி தோல் ஹலாலா ஆகிவிட்டது. என்ன கொடுமை இது..

வஹி அடிப்படையில் தான் நாம் எது ஹராம் , ஹலால் என்று தீர்மானிக்க வேண்டும். இவர்களுக்கு இந்த சின்ன அறிவு கூட இல்லாததை நாம் காணலாம். பன்றி தோல் வியாபாரம் கூடும் என்று சொல்லுகிரவருக்கு  தகுந்த பதில் இதில் உள்ளது.  இன்னும் பி ஜே சொல்லுவது தான் எங்களுக்கு வஹி என்று நம்புகிற பக்தர்களுக்கு, நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

முதலில்
 அல்லாஹுவின் மார்க்கம் ஞானம்  இல்லாமல் யாருக்குமே இஸ்லாத்தில் பத்வா தருவதற்கு அனுமதி இல்லை. அவ்வாறு  கூரிகிரவர்க்கு அல்லாஹ் முன் எச்சரிக்கையாக கூறிகிறான்..

7:33. “என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம்,  
வெளிப்படையான அல்லதுஅந்தரங்கமானமானக்கேடான செயல்ள்;
 பாவங்கள்நியாயமின்றி (ஒருவருக்கொருவர்)கொடுமை செய்வது  
ஆதாரமில்லாமலிருக்கும் போதேநீங்கள் அல்லாஹ்வுக்கு
இணைகற்பித்தல்நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின்  
மீது (பொய்யாகக்கூறுவது(ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக.

மேலும்,
 ஹராம் என்று சொல்லப்படும்  ஒன்றை தகுந்த  ஆதாரம் இன்றி ஹலால் என்று சொல்லுவது யாருக்குமே இஸ்லாத்தில் அனுமதி இல்லை. இதற்க்கு அல்லாஹ் முன் எச்சரிக்கையாக கூறிகிறான் 
16:116. உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றிபொய்யாக வர்ணிப்பது  
போல்இதுஹலாலானதுஇது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது
  பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் -நிச்சயமாகஎவர் அல்லாஹ்வின் மீது  
பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள்வெற்றியடைய மாட்டார்கள்.

இரண்டாவது
 பன்றி விற்பது ஹராம் .. அது ஒரு முஸ்லிம்கோ அல்லது காபிற்கோ விற்றாலும் ஹராம் ... 
இதற்க்கு ஆதாரம் .....
1.         அல்லாஹ் கூறிகிறான் 6:145. (நபியே!) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும்இரத்தத்தையும் பன்றியின்  
மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில்எதுவும்  
தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” - ஏனெனில்இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றனஅல்லது  
அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர்சொல்லி அறுக்கப்பட்டது  
பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது)
ஆனால்எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டுவரம்பை மீறாமலும் பாவம் செய்ய 
நினைக்காமலும்புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க
மன்னிப்போனாகவும்பெருங்கருணையுடையோனுமாகவும் 
 இருக்கின்றான்.

 நபி (ஸல்) அவர்கள் ஒரு  அடிப்படையான விஷயத்தை கற்று தருகிறார்கள்... நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் அல்லாஹ் ஒன்றை தடுத்தால் அதன் தன்மையும் செய்து தான் தடுக்கிறான்.

And the Messenger (peace and blessings of Allaah be upon him) taught us an important principle when he said: “When Allaah forbids a thing, He (also) forbids its price.” Narrated by Abu Dawood, 3488; classed as saheeh by Shaykh al-Albaani in Ghaayat al-Maraam, 318. 

2 .  2236. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலிஅறிவித்தார்
நபி(ஸல்அவர்கள் மக்கா வெற்றியின்போதுநிச்சயமாக அல்லாஹ்வும்  
அவனுடையதூதரும் மதுபானம்செத்தவைபன்றிஉருவச் சிலைகள்  
ஆகியவற்றை விற்பனைசெய்வதைத் தடை செய்துள்ளனர்!" என்று  
கூறினார்கள்அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களேசெத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப்  
பூசப்படுகின்றன.தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது;
 மக்கள் விளக்கெரிக்க அவற்றைப்பயன்படுத்துகின்றனர்எனவேஅதைப்  
பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டதுஅதற்குநபி(ஸல்அவர்கள், 'கூடாதுஅது விலக்கப்பட்டது!' எனக் கூறினார்கள்அப்போது தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களை சபிப்பானாகஅல்லாஹ் யூதர்களுக்குக்  
கொழுப்பைஹராமாக்கியபோதுஅவர்கள் அதை உருக்கி விற்றுஅதன்  
கிரயத்தை சாப்பிட்டார்கள்!"என்று கூறினார்கள்
Volume :2 Book :34
 இதற்க்கு சில அறிஞர்கள் கூறிய கருத்து ..
Al-Nawawi said:
With regard to dead meat, alcohol and pork, the Muslims are unanimously agreed that it is haraam to sell all of these. 

Al-Qaadi said: This hadeeth indicates that whatever we are forbidden to eat or make use of, we are also forbidden to sell, and it is not permissible to consume its price, as in the case of the animal fat mentioned in this hadeeth. 
Sharh Muslim, 11/8

Ibn Rajab al-Hanbali said, after quoting the ahaadeeth about the prohibition on alcohol: 

 மேல கூறிய குரான் வசனமும் மற்றும் ஹதீஸிலும் தெழிவாக புரிந்து கொள்ளலாம்..
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் அல்லாஹ் ஒன்றை தடுத்தால் அதன் தன்மையும் செய்து தான் தடுக்கிறான். நபி (ஸல்) அவர்கள் சாராயத்தை சபித்தார்கள் அதாவது .. யார் அதை குடிக்கிறோ, யார் அதை விற்பனை செய்கிறாரோ, யார் அதை வாங்கிரரோ, யார் அதை சுமந்து செல்கிறாரோ etc ...
அதே போல் தான் பன்றி விஷயமும் ..யார் அதை வளர்கிறாரோ, யார் அதை உன்னுகிறாரோயார் அதை விற்பனை செய்கிறாரோ, யார் அதை வாங்கிரரோ, யார் அதை சுமந்து செல்கிறாரோ etc ...

 மூன்றாவது
 இவர்கள் வைக்கும் ஆதாரத்தை அலசி பார்க்கலாம்
 1 . அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலிஅவர்கள் கூறியதாவது:  
நபி (ஸல்அவர்கள்ஒரு செத்தஆட்டைக் கடந்து சென்றபோது/ ,,இதன் தோலை நீஙகள் பயன்படுத்தக்கூடாதா,, என்றுகேட்டார்கள்.  
நபித்தோழர்கள்/,,இது செத்த ஆடாயிற்றே!,, என்றனர்அதற்கு ,, 
அதைஉண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது!,, என்று  
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.

 அதை உன்பதை தான் தடை உள்ளது என்ற இந்த நபியின் வார்த்தை யில் அழகிய விளக்கம் உல்லது.இதன் விலக்கம் " செத்த ஆடு மற்றும் எந்த ஹராமான மிருகம் ஆனாலும் அதை உன்பதை தடை உல்லது. ஆனால் பன்றியை விற்க வே தடை உல்லது. "

சாப்பிட தடை செய்யப்பட்ட மற்ற மிருகங்கள் விற்பதற்கு தடை இல்லை. ஏன் என்றால், அவைகள் சாப்பிட மட்டுமே ஹராம். மற்ற விஷியங்களுக்கு அவைகளை பயன் படுத்தி கொல்லலாம். ஆனால் சாப்பிடுவதர்க்கு மட்டும் இல்லை, எதர்க்கு பயன் படுத்த கூடாது என்பதால் தான் பன்றியை விற்பதர்க்கே தடை உள்ளது. தானாக செற்றவையும், பன்றியையும் நபி(ஸ) அவர்கள் விற்க தடை செய்துள்ளார்கள் என்பது ஹதீஸ் மூலமாக தெளிவாகிறது. 

 இந்த ஹதீஸில் சொல்லப்பட்டது ஆடு என்பது தெளிவாக உள்ளது. பதம் செய்தால் சுத்தமாக ஆகி விடும் என்பதும் ஆட்டின் தோலைதான் குரிக்கும். ஆடு சம்மந்தமாகத்தான் நபி(ஸ) அவர்கள் இதில் பதில் சொல்கிறார்கள். செத்த ஆட்டின் இரட்சி , அதன் கொலுப்பு சாப்பிடுவதர்க்கும் ஹராமாகும். அதனால் செத்த ஆட்டின் இரட்சியும், கொலுப்பும் விற்க்கவோ வேரு ஏதாவதுக்கு உபயோகிக்கவோ தடை செய்துள்ளார்கள் நபி(ஸ்). ஆனால் ஆட்டின் தோல் சாப்பிடும் பொருள் அல்ல. அதனால் அந்த ஆட்டின் தோலை மட்டும் எடுத்து அதை விற்கவோ உபயோகிக்கவோ அனுமதித்துள்ளார்கள். ஆனால் பன்றி அதுப்போல் அல்ல. ஒரு ஆடு உயிருடன் இருக்கும்போது அதை விற்க அனுமதி உள்ளது. ஏன், சாப்பிடுவதற்கு தடை உள்ள கழுதை , மற்றும் கொரை பற்கள் உள்ள பாம்பு போன்றவற்றை கூட உயிருடன் விற்க தடை உள்ளதாக எதுவும் இல்லை. இதனால் தான் சாப்பிடுவதற்கு தடை உள்ள பாம்பின் தோல் மூலம் செய்ய பட்ட பொருள்கள் கூட ஹராம் இல்லை. ஆனால் பன்றி அதைபோல் அல்ல. அதை முற்றிலும் விற்கவே தடை உள்ளது. நபி(ஸ) அவர்கள் கோரை பற்கள் உள்ள மிருகங்கள் , வேட்டையாடும் பரவைகளை கூட சாப்பிட தடை செய்துள்ளார்கள். ஆனால் அவைகளை விற்க தடை செய்ய வில்லை.இப்படி இருக்க பன்றியை மட்டும் முற்றிலுமாக விற்கவே தடை என்ற நபியின் தெலிவான ஹதீஸ் இருக்கும்போது, பன்றியின் தோலை மட்டும் அனுமதிப்பது நபியின் கட்டலைக்கு மாற்றமாகும்.

ஈசா (அலை) அவர்கள் மருப்படியும் பூமிக்கு வரும்போது சிலுவையை உடைப்பார்கள், பன்றியை கொல்லுவார்கள் என்று ஹதீஸ் உள்ளது.சாப்பிட ஹராமான மற்ற மிருகங்களை அவர் கொல்லமாட்டார்கள்.ஹராமான மற்ற மிருகங்கள் சாப்பிடுவதற்கு மட்டுமே ஹராம். சாப்பிட மட்டும் பன்றி ஹராம் இல்லை. அதை எந்த வகையுலும் உபயோகிப்பதும் ஹராமாகும். உயிருடன் இருக்கும்போது விற்கவே தடை என்றால், அதை எப்படி வாங்கி , தோலை உரித்து உபயோகிப்பது மட்டும் ஹலாலாகும்?

 ஹலான மிருகத்திற்கும் ஹராமான மிருகத்திற்கும் வித்தியாசம்
 ஆடுமாட்டுஒட்டகம் போன்ற மிருகம்
 1 . இவை உரியுருடன் இறுக்கும் போது வாங்கலாம் , இது ஹலால்
2 . முறையான இஸ்லாத்தின் முறையில் இவர் அறுக்க பட்டாள் அதை உண்பதற்கு ஹலால்
3 . இதன் தோலை பதனிட பட்டாள் ஹலால், அதை நான் பயன்படுத்தலாம்

 தின்பதற்கு தடையுள்ள மிருகங்கள் (பூனைபுலிகழுதை...)
 1 . இவை உரியுருடன் இறுக்கும் போது வாங்கலாம் , இது ஹலால்
2 . உண்ணுவதற்கு ஹராம்
3 . இதை வாங்குவது ஹராம் மற்றும் இதன் தோலை பதனிட பட்டாள் ஹலால், அதை நான் பயன்படுத்தலாம்

 பன்றி
 1 . இவை உரியுருடன் இறுக்கும் போது ஹராம்
2 . உண்ணுவதற்கு ஹராம்
3 . இதன் உடலில் இறுக்கும் எந்த பொருலும் பயன்படுத்துவது முற்றிலும் ஹராம் ..
2 .  பதனிட பட்ட எல்லா தோள்களும் தூய்மையானவைஎன்று அல்லாஹ்
வின் தூதர்கூறியுள்ளார்கள் 
ஆதாரம்:பைஹகி 64 , அஹ்மத் 1797 .

பதனிட பட்ட எல்லா தோள்களும் தூய்மையானவை என்று அறிவிப்பு உள்ளது. இதில் பன்றி தோல் அடங்குமா என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளன..
 எப்பவும் இஸ்லாத்தில் ஒரு விஷயம் சரியான விபரம் இல்லாமல் இருந்தால் அல்லது சந்தேகமாக இருந்தால் , அதை இப்படி கை ஆழ வேண்டும் என்பதை கீழ் உள்ள ஹதீஸ் நமக்கு சொல்லி தருகிறது..

52. 'அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவைமேலும்  
அனுமதிக்கப்படாதவையும்தெளிவானவையாய் இருக்கின்றன
 இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்குஇடமானவையும்  
இருக்கின்றன அவற்றை மக்களில் பெரும்பாலலோர் அறிய மாட்டார்கள். 
எனவேசந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தம்  
மார்க்கத்திற்கும் தம்மானம் மரியாதைகளுக்கும் களங்கம்  
ஏற்படுத்துவதிலிருந்து விலம் விடுகிறார். 
சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் 
(கால் நடைகளை)மேய்ப்பவரைப் போன்றவராவார்அவர்  
வேலிக்குள்ளேயே (கால்நடைகளைமேயவிடநேரும் 
எச்சரிக்கைஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது 
எச்சரிக்கைநிச்சயம்அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள்  
அவனால் தடை செய்யப்படடவையாகும்.எச்சரிக்கைஉடலில் ஒருசதைத் 
 துண்டு இருக்கிறதுஅது சீர் பெற்று விட்hடல் உடல்முழுவதும் சீர் பெற்று 
 விடும்அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். 
புரிந்து கொள்ளுங்கள்அதுதான் இதயம்!' என்று இறைத்தூதர்(ஸல் 
அவர்கள் கூறினார்கள்:என நுஃமான் இப்னு பஷீர்(ரலிஅறிவித்தார்
Volume :1 Book :
 இதே விஷயம் முஸ்லிம்ளையும் திர்மதி லையுளும் பதிவோ செய்ய பட்டு உள்ளது 
Whoever avoids those matters which are unclear, has protected his religion and honor.” (Al-Bukhari, no. 52 and Muslim, no. 1599)
“Leave whatever causes you to doubt, in favor of whatever does not cause you to doubt.” (Al-Tirmidhi, no. 2518)
 ஆகையால் இதில் பன்றி அடங்காது என்றுதான் சொல்கிறோம். பன்றியை வாங்குவதே ஹராம் என்று தெரிந்த சஹாபாக்கள் இந்த ஹதீசை இவர்களை போல்  புரிந்துக்கொண்டு பன்றித்தோல் வியாபாரம் செய்ய்ய வில்லை. "எல்லா தோல்களும்" என்று இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். சரி, மனித தோலும் இதில் 
அடங்குமா? என்று நீங்கள் எனக்கு சொல்லுங்கள். மனித தோல் களை பதனிட படலாமா? அதை உபயோகிக்கலாமா?
இது ஹராம் ஏன் என்றால், மனித தோல்களை எடுக்க வேண்டும் என்றால் இரண்டு முரை உல்லது. உயிருடன் உல்ல மனிதரை கொல்வது, பின்பு அவரின் தோலை உரிப்பது. இது ஹராமாகும். இரண்டாவது முரை-- இரந்த உடலின் தோலை உரிப்பது.
இதுவும் ஹராமாகும்.(இரந்த உடலை கஷ்டப்படுத்துவது ஹராம்) .
அப்போது ஹராம் மூலம் செய்ய கூடிய மனித தோல் வியாபாரம் ஹராம் என்றால், பன்றியை வாங்கும் ஹராமை செய்து தான் செய்ய கூடிய பன்றி தோல் வியாபாரம் மட்டும் எப்படி ஹலால் ஆகும்? பன்றிதோல் பதனிடபட்டால் ஹலால் என்று எந்த ஹதீஸும் இல்லை. அப்படி இருந்தால் உங்கள் கருத்தை நான் ஏற்று கொல்கிறேன்.
 "எல்லா தோல்களும்" என்று நபி(ஸ) சொல்லும்போது மனித தோல் இதில் அடங்காது என்று அனைவரும்  புத்திக்கு தோன்றுகிறதே, அதே புத்திக்கு தோன்ற வேண்டிய விஷயம் தான் "பன்றி தோல் இதில் அடங்காது" என்பது. நீங்கள் நினைக்கலாம் ," இது நபி(ஸ) 5 அரவு உள்ள வற்றை ...தான் சொல்கிறார்கள்" என்ற நினைப்பிற்கும் 
எந்த ஆதாரமும் இல்லை. நபி(ஸ) அவர்கள் மீது ஏன் கலங்கம் ஏர்ப்படுத்துகிறீர்கள்? ஒரு உனவை சாப்பிடுவதா, இல்லையா என்று நமது பகுத்தரிவை வைத்து முடிவெடுக்க சொல்ல வில்லை நமது மார்கம். நபி(ஸ) அவர்கள் தடுக்காத எல்லா உனவுகளும் ஹலால் ஆகும். ஏன் என்றால், அல்லாஹ் இந்த மார்கத்தை பூரனமாக ஆக்கி விட்டான். அவன் எந்த தவரும் செய்ய்ய வில்லை. "கோரை பற்க்கள்" உல்லவற்றை நபி(ஸ) அவர்கள் தடுத்துள்ளார்கள் அல்லவா, இதில் மனிதனும் அடங்குவான். ஜாஹிலியாக்கள் செய்ய்ய வில்லை என்று நாமே முடிவெடுக்கும் மார்கம் இல்லை இஸ்லாம்.
வஹீ மூலம் அறிவிப்பை மட்டுமே அடிப்படையாக கொண்ட மார்கம் இஸ்லாம். இது யாரும் செய்ய்ய வில்லை என்று என்னாதீர்கள் . காட்டு வாசிகள் செய்கிறார்கள். எது சரி எது தவரு என்று இஸ்லாம் மூலமாக த்தான் நமக்கு தெரியும். அருவெருப்பாக இருக்கிறது என்பதால் இது ஹராம் இது ஹலால் என்று முடிவெடுப்பது இஸ்லாமிய மார்கம் இல்லை.

 நான் பன்றிக்கும் மற்ற மிருகத்திற்கும் வித்தியாசத்தை காட்டினேன். நான் மேற்கூரிய ஆதாரத்தை வைத்து பார்த்தால் ...பன்றி விற்கவோ வாங்கவோ தடை என்று அனைவருக்கும் தெரியும்.. 
 அப்போ பன்றி வாங்கவே தடை இறுக்கும் போது ,,,நீங்கள் எதை வைத்து பன்றி தோல் உரித்து அதை பயன்படுத்துவீர்கள் . பிறகு அதை வியாபாரம் செய்வீர்கள்???

பன்றி தோல் ஒருவருக்கு வேணும் என்றால்...பன்றி வாங்குவது ஹராம், அதை வளர்ப்பது ஹராம், அதை காக்குவது ஹராம்..இப்படி எல்லாமே ஹராமா இறுக்கும் போது.. பன்றி இறந்தவுடன் நீங்கள் அதன் தொலை உரிப்பீர்களா???? உங்கள் பணியில் பார்த்தால் பன்றி இறந்தவுடன் தான் நீங்கள் தொலை உரிக்க முடியும்..

யாருடைய பன்றி தொலை நீங்கள் உரிப்பீர்கள்??? உங்களுடைய பன்றியாக இருந்தால் .. அதை வாங்குவதே ஹராம்.... இல்லை இல்லை நான் பன்றியை வாங்க மாட்டேன், பதம் படுத்திய தோலை மட்டும் தான் வாங்குவேன் என்று சொன்னால்....அப்போ நீங்கள் மற்றவரை ஹராமான செயலை செய்ய தூண்டுகிறீர்கள்..அதாவது.. மற்றவர்கள் பன்றியை வாங்கி, அதன் தோலை உரித்து , அதை பதம் படுத்தி பிறகு நீங்கள் அதை வாங்குவீர்கள் ..அப்படி தானே.!!! அப்போ நீங்கள் பன்றி வியாபாரத்தை ஊக்க படுத்துரீர்கள். இதுவே ஹராம் ஆச்சே..

 இறுதியாக,
 9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும்தம்  
சந்நியாசிகளையும்மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்
கிக் கொள்கின்றனர்ஆனால்அவர்களே ஒரே இறைவனைத் தவிர 
(வேறெவரையும்வணங்கக்கூடாதென்றேகட்டளையிடப்பட்டுள்ளார்கள் 
வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை -அவன்  
அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.

 The Companion `Adi Ibn Hatim, who was a Christian before accepting Islam, asked the Holy Prophet Sallallahu 'Alayhi Wasallam: Peace be upon him with reference to this verse as to why the Holy Qur'an should blame the Christians for having taken their religious scholars as lords when they were never guilty of worshipping them. The Holy Prophet Sallallahu 'Alayhi Wasallam: Peace be upon him in his turn asked him if it was not a fact that their scholars had declared many things as forbidden although Allah had permitted men to eat them, and that conversely they had declared as permissible what had been forbidden, and that the Christians obeyed their scholars in both the respects. `Adi admitted that it was so. Therefore, the Holy Prophet Sallallahu 'Alayhi Wasallam: Peace be upon him remarked that this was
exactly how they 'worshipped' their scholars.

அல்லாஹ் ஹலாலான ஒன்றை இந்த பாதரியார் அதை ஹராமாக்குவார், அதே போல் அல்லாஹ் ஹராம் என்று ததுத்ததை இவர் ஹலாலாக்குவர். இதை மக்கள் ஏற்று கொள்வார்கள். அது தான் இந்த கிறிஸ்துவ சமுதாயம் இந்த பதிரியார்க்கு செய்த வழிபாடு, இபாதத்து என்று நபி முஹம்மத் ரசூல்லாஹ் (sAw) நமக்கு விளக்கப்படுத்தினார்கள்.

மேற் கூறிய குரான் வசனமும் ஹதீசும் எதை சொல்லுகிறது என்றால் அல்லாஹ் ஒன்றை ஹராம் என்று சொல்கின்ற போது , இந்நோருவர் அதை கூடும் என்று சொன்னால், நாம்கள் அதை கூடும் என்று ஏற்று கொண்டால்.... அந்த கருத்தை சொன்னவறை கடவுளாக ஏற்று கொண்டோம் என்று அருத்தம் ... இந்த வசனம் கூறுகிறது.

எமது பிரச்சாரகர் ரஸ்மி கொடுத்த பதில்.
ஆய்வு செய்து ஓயமுன் அறிவாளி யார் அடிமுட்டாள் யார் என்று அங்கலாய்க்கக் கூடாது. மண்டையில் தட்டும் போது தொண்டையில் இறங்கும் மசாலாவை ஆய்வென்று அவசரப்பட்டு முடிவெடுக்கவும் கூடாது.

ஸஹாபிகளை வஹ்ஹாபின் நிலைக்கு உயர்த்திய ஸலபுகள், வஹியின் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும் என்று எம்மைப் பார்த்துக் கேட்கலாமா? வஹியைப் பீஜே சொன்னால் ஜேஜே போடுவது வஹி என்பதற்காக மட்டுமே. சம்மனச் சம்மதத்தோடு ஸலபிச் சகவாசமே சத்தியம் என்று நினைக்கும் பைத்தியங்கள் பக்திப் பற்றி பேசக் கூடாது. 
தனிமனித தக்லீதும், தரங்கெட்டத் தனிமனித தாக்குதலும் தரத்தில் ஒன்றுதான். 

மக்குத்தனத்தை மார்க்கஞானம் என்று விளங்கிய மூளை முடிச்சுகள் முக்கியெடுத்த முரண்பாடுகளின் பட்டியல் நீளும் போது ஞானம் எது ஊணம் எது என்று தெளிவாகவே புரியும்.
இனி இவரின் ஐயறிவு ஆய்வுக்குள் நுழைவோமா?

மூளை முடிச்சின் முதல் பேச்சு
//பன்றி விற்பது ஹராம் .. அது ஒரு முஸ்லிம்கோ அல்லது காபிற்கோ விற்றாலும் ஹராம் ... இதற்க்கு ஆதாரம் ..//

//1 . அல்லாஹ் கூறிகிறான் 6:145. (நபியே!) நீர் கூறும்: தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங்கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு அடிப்படையான விஷயத்தை கற்று தருகிறார்கள்... நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் அல்லாஹ் ஒன்றை தடுத்தால் அதன் தன்மையும் செய்து தான் தடுக்கிறான்.//

என்று பன்றி விற்பதற்கு தடையென்பதற்கு ஆதாரமாக ஒரு வசனத்தைக் காட்டியுள்ளார். மேலும் நபிகளார் எதைத் தடுத்தார்களோ அதை விற்கவும் தடை என்று ஒரு ஹதீஸையும் கூறி இரண்டையும் இணைத்து பன்றி விற்பது தடை என்று நிறுவியுள்ளார் 

இவர் வாதப்படி இதில் பன்றி விற்பது மட்டும் ஹராம் அல்ல. மாறாக 'தானாக இறந்தவை, வடியும் இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது ஆகிய அனைத்தும் விற்கத் தடை என்றுதான் வரும். இவர் வாப்படியே செத்த ஆடும் விற்கத் தடை.

ன்றி விற்கக் கூடாது என்பதற்கு மூளை முடிச்சு காட்டும் 2 வது
ஆதாரம்

//உமர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கூடாது! அது விலக்கப்பட்டது!' எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!' என்று கூறினார்கள். //

இதிலும் விற்பதற்குப் பன்றி மட்டுமா தடை செய்யப்பட்டுள்ளது? மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்! என்றுதான் உள்ளது. எனவே இந்த ஹதீஸ் படியும் செத்த ஆடு விற்கத் தடை. எதை எழுதுகிறோம் என்று ஞானிகள் குழம்பக் கூடாது.
மேலும் மதுபானத்தைப் பற்றி இவர் குறிப்பிடும் போது
//அதை யார் குடிக்கிறோ, யார் அதை விற்பனை செய்கிறாரோ, யார் அதை வாங்கிறாரோ, யார் அதை சுமந்து செல்கிறாரோ //என்று இருக்கும் ஹதீஸோடு பன்றியையும் சேர்க்கிறார். அதாவது,
//அதே போல் தான் பன்றி விஷயமும் ..யார் அதை வளர்கிறாரோ, யார் அதை உன்னுகிறாரோ, யார் அதை விற்பனை செய்கிறாரோ, யார் அதை வாங்கிரரோ, யார் அதை சுமந்து செல்கிறாரோ ....//

இவ்வாறு ஹதீஸில் உள்ளது போன்ற மாயையை ஏற்படுத்துகிறார். எந்தக் கிதாபில் இதே போன்று வாசகம் பன்றிக்கும் உண்டு என்று தெளிவாக இவர் கூற வேண்டும்.

இவர் இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் என்றால், பன்றித்தோல் பதனிட முந்திய நிலையில் பன்றி விற்கப்பட்டு, வாங்கப்பட்டு, சுமக்கப்பட்டு, இருந்திருக்க வேண்டும். சாராயத்தை சுமக்க முடியாதது போல பன்றியையும் சுமக்க முடியாது. அப்போது எப்படி பதனிடப்பட்ட பன்றித் தோல் ஹலால் என்று சொல்ல முடியும்?
என்ன அழகான ஆய்வு! 
இவரது வாதப்படி இவரது உதாரணத்தையே நாமும் எடுப்போம். பதனிடப்பட்ட பன்றித்தோல் கூடும் என்பதில் இருந்தே பதனிடப்படாத பன்றித்தோல் கூடாது என்று வந்துவிடும். இதே போல சாராயத்தில் இருந்து வரும் வினாகிரி ஹலாலானது. இந்த வினாகிரியைத் தயாரிக்க என்ன செய்யவேண்டும் என்று இவர் கூற வேண்டும். சாராயத்தை வாங்க வேண்டுமா? விற்க வேண்டுமா? சுமக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா?
இவர் பதனிடப்பட்ட பன்றித் தோலுக்குக் கேட்கும் அத்தனை கேள்விகளையும் வினாகிரிக்கும் கேட்கலாம். பன்றிக்காவது விற்பது என்றுதான் வந்துள்ளது. சாராயத்துக்கு சுமப்பது வரை ஹதீஸில் வந்துள்ளது.
வினாகிரி பற்றிய இவரின் முடிவு என்ன என்பதையும் இவர் சொல்லனும்.
அடுத்ததாக இவர் இப்படிக் கூறுகிறார்

//அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள்ஃ ஒரு செத்த ஆட்டைக் கடந்து சென்றபோதுஃ இஇஇதன் தோலை நீஙகள் பயன்படுத்தக்கூடாதாஇஇ என்று கேட்டார்கள். நபித்தோழர்கள்ஃ இஇஇது செத்த ஆடாயிற்றே!இஇ என்றனர். அதற்கு இஇஅதை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது!இஇ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.//

என்ற ஹதீஸைக் கூறிவிட்டு இவ்வாறு விளக்கமளிக்கிறார். 
//'அதை உன்பதை தான் தடை உள்ளது என்ற இந்த நபியின் வார்த்தை யில் அழகிய விளக்கம் உல்லது.இதன் விலக்கம் ' செத்த ஆடு மற்றும் எந்த ஹராமான மிருகம் ஆனாலும் அதை உன்பதை தடை உல்லது. ஆனால் பன்றியை விற்க வே தடை உல்லது.'//

என்று பன்றியை மடடும் விற்கத் தடையுள்ளது போன்று காட்டுகிறார்.
செத்த ஆடும், பன்றியும் நீங்கள் வைத்த ஆதாரப்படி உண்ணவும் தடை, விற்கவும் தடை என்று உள்ளபோது பன்றிக்கு மட்டும் கூறுவது கூடாது.

இன்னும் இதில் வேடிக்கை என்னவென்றால் இதற்கு அடுத்த பந்தியிலேயே இவருக்கு இவரே முரண்பட்டு தானாகச் செத்ததும், பன்றியும் விற்கத் தடை என்கிறார். 

எனவே இவர் எடுத்துக்காட்டிய வாதப்படி எது செத்துவிட்டதோ அது ஹராம். எது ஹராமோ அதை விற்கக் கூடாது. எனவே செத்த ஆடும், செத்த புலியும், செத்த பன்றியும் ஒரே அந்தஸ்து உடையவையே. 
பதனிடப்பட்ட எல்லாத் தோல்களும் தூய்மையானவை என்று நபிகளார் கூறியதிலிருந்து செத்துப்போன ஆட்டுத்தோல் சுத்தமானது என்றால் செத்துப்போன புலித்தோலும் சுத்தமானதுதான். செததுபபோன பன்றித் தோலும் சுத்தமானதுதான். 

எல்லாத் தோலும் சுத்தமானது என்றால் மனிதத் தோலுமா என்று வேறு கேட்கிறார். 
மனிதனுக்கு உள்ள சட்டம்தான் அடுத்த விலங்குக்குமா? இறந்த மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன என்பது போல இறந்த ஆட்டுக்கும் உண்டு என்றால் இந்தக் கேள்வியைக் கேட்கலாம்.
தொடரும்......

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP