9.7.11

சாரத்தைக் கிழித்துக் கைக்குட்டை தைக்கும் நஷ்டவாளிகள்

(2009 ம் ஆண்டு ரமழான் மாதத்தில் நமது ஜமாஅத்தால் வெளியிடப்பட்டதாகும்)


யார் இந்த அபுல் அஃலா மௌலானா மௌதூதி?
இணைவைப்பையே இயற்பெயராய்க் கொண்டவர். புரியவில்லையா? அபுல் அஃலா என்பதற்கு அர்த்தமே அல்லாஹ்வின் தந்தை என்பது தான்.தலைமையே இப்படிக் கோணலாக இருக்கும் போது இனி இந்த மௌதூதியின் அடிச்சுவட்டைப் பின்பற்றும் ஞானிகளான அஷ்ஷெய்க் அகார் முஹம்மதும், மற்றும் இவர்களது இஸ்லாமிய(???) கூட்ட மாமேதைகளும் இஸ்லாத்தைக் குழிதோண்டிப் புதைப்பதொன்றும் ஆச்சரியமில்லை தானே?இஸ்லாத்துக்கும், ஜமாஅதே இஸ்லாமிக்கும் எந்த சம்பந்ததும் இல்லை என்று யாரும் அவசரப்பட்டுக் கூறிவிடாதீர்கள். அது தவறு. ஏனெனில் சம்பந்தம் உண்டு. அவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் இடையிலான சம்பந்தம் என்ன தெரியுமா? இஸ்லாத்தை அழிப்பதற்கென்றே உருவெடுத்தவர்கள் அவர்கள். இதை நாமாகச் சொல்லவில்லை. கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடிக்கவுமில்லை. தமது இதழ்களிலும், உரைகளிலும் அவர்களே இதைப் பகிரங்கமாகவும், தைரியமாகவும், ஏன், மடத்தனமாகவும் ஒப்புக்கொள்வதை நீங்களே பார்க்கலாம் இதோ:மடமை 1: இவர்களின் சிங்கள வெளியீடான ப்ரபோதய இதழில் பிரசுரிக்கப்படும் அனாச்சாரங்கள் ஏராளம். அதில் ஒன்று தான் இறந்தவர்களிடம் உதவி தேடிப் பிரார்த்திக்கலாம் என்று ஒருமுறை அல்லாஹ்வையே மறந்து எழுதியமை.மடமை 2: பாவங்களில் மிகப்பெரியது இணைவைத்தலே என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்திருக்க, இதை அப்படியே அமுக்கிவிட்டு, இவர்களையும், இவர்களது மறைந்த தலைவர் அபுல் அஃலா மௌதூதியின் பெயரையும் நியாயப்படுத்தும் முகமாகப் பாவங்களிலெல்லாம் பெரும்பாவம் கல்லாமையே என்று தமிழ்ப் புராணங்களின் கருத்துக்களை ஏந்திப் பிடிக்கும் அநியாயம்.மடமை 3: இஸ்லாத்தில் கப்று வணக்கத்தை அறிமுகப்படுத்தி, அதை உலகெங்கும் பரப்பி வரும் ஷீஆக்களை ஆதரிப்பதும், அவர்கள் கொள்கையை சரிகாண்பதும் மட்டுமல்லாமல் இலங்கையில் ஷீஆக் கொள்கையை முதன்முதலில் அறிமுகப்படுத்திய மகத்தான பணியைச் செய்ததும் இந்த ஜமாஅதே இஸ்லாமியே. இதற்கான ஆதாரங்கள் இதோ:அ) ஜமாஅதே இஸ்லாமியின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான காலம்சென்ற எஸ்.எம். மன்ஸூர் அவர்களால் எழுதப்பட்ட ஈரான் மக்கள் புரட்சி என்னும் நூல் மூலமாக ஷீஆக் கொள்கை முதன்முதலாக இலங்கைக்கு அறிமுகப்படுத்தப் பட்டது.ஆ) அவ்லியாக்களை வழிபடலாம், மற்றும் அவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்னும் கருத்தை ஆதரிக்கும் முகமாக 'ப்ரபோதய' எனும் இவர்களது சிங்கள சஞ்சிகையில் அவ்வப்போது வெளிவரும் கட்டுரைகள்.இதெல்லாம் ஒருபுறமிருக்க..தரீக்காக்கள் என்றால் என்ன?மனிதன், மிருகம், கல், மண்.. என்று எதை வேண்டுமானாலும் அல்லாஹ் என்று அழைக்கத் தயங்காத அத்துவைதக் கொள்கையின் மறுவடிவமே தரீக்கா கொள்கை. இதுமட்டுமா? அல்லாஹ்வுக்கே பாடம் படித்துக் கொடுக்கும் அப்துல் காதிர் ஜீலானி போன்ற மகான்களையே தடுக்கி விழும்போது கூட 'யா முஹையத்தீன்' என்று உதவிக்கு அழைக்கும் முஷ்ரிக்குகளும் இந்தத் தரீக்கா வாதிகள் தாம். மேலும் இறந்தவர்களை வணங்குவது, காலில் விழுந்து சாஷ்டாங்கம் செய்வது, நபிவழியை மறுப்பது போன்ற அத்தனை இணைவைப்புக்களையும், அனாச்சாரங்களையும் தமது உயிர்நாடியாகக் கொண்டுள்ளவர்களும் இந்தத் தரீக்காக்கா வாதிகள் தாம். இப்பேர்ப்பட்ட தரீக்காக்கள் தம்மைப்பற்றித் தாம் எழுதியதைவிட ஜமாஅதே இஸ்லாமி தரீக்காவைப் பற்றி எழுதி, அதை விளம்பரப்படுத்தியதே அதிகம். உதாரணத்திற்கு வேண்டுமானால் கடைசியாக வெளிவந்த ஆகஸ்ட் 2009 அல்ஹஸனாத் இதழின் ஆசிரியர் தலையங்கத்தைப் புரட்டிப் பாருங்கள். 'தரீக்காக்களும், ஏனைய இயக்கங்களும் முஸ்லிம் சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதற்காகவே தோற்றுவிக்கப்பட்டன' என்று ஆசிரியர் எழுதியுள்ளதைப் பார்த்த பிறகும் உங்களுக்கு வியப்பாக இல்லையா? சகோதரர்களே, சிந்தியுங்கள்! நரகப் படுகுழியை நோக்கிய தெளிவான நீண்ட பாதையில் இந்த ஜமாஅதே இஸ்லாமி நம் சகோதரர்களை இழுத்துச் செல்வதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தால், நாளை மஹ்ஷரில் அல்லாஹ்விடம் நாம் என்ன பதில் சொல்வது? சிந்தியுங்கள்!கல்வி கற்க வேண்டும் என்னும் கோஷத்திற்கு அடுத்தபடியாக ஜமாஅதே இஸ்லாமி போடும் அடுத்த கோஷம் தான் 'சமூக ஒற்றுமை'. எவன் எந்தக் கொள்கையில் இருந்தாலும் பரவாயில்லைளூ ஆனால் முஸ்லிம் சமூகம் என்ற அடிப்படையில் ஒரு குடையின் கீழ் அனைவரும் சேர்ந்திருந்தால் மட்டும் போதும் என்பது தான் இந்தக் கோஷத்தின் சாராம்சம். பார்ப்பதற்கு மிகவும் அழகான ஒரு வாதம் தான். நாகப்பாம்பு கூட படமெடுத்து ஆடும்போது அழகாககத் தான் இருக்கும். கையைப் போட்டுப் பார்த்தால் தான் உண்மை புரியும். இந்த ஒற்றுமை இஸ்லாம் போதிக்கும் ஒற்றுமையல்லளூ இஸ்லாத்தை அழிக்கும் ஒற்றுமை. இதே மாதிரியான ஒற்றுமை தான் ஜாஹிலியா யுகத்தில் நபியவர்களையும், அவர்களது தோழர்களையும் அழித்தொழிப்பதற்காக மஜூஸிகளையும், சிலை வணங்கிகளையும், யூதர்களையும், நஸாராக்களையும் ஒன்றுசேர வைத்தது. இஸ்லாத்தின் வரலாற்றில் எங்கு பார்த்தாலும் சத்திய இஸ்லாம் மட்டும் தனித்து நிற்கும். அதனை எதிர்த்து ஏனைய அனைத்து சக்திகளும் ஒன்றுதிரண்டு நிற்கும். அது அப்படித் தான் எப்பொழுதும் இருக்கும் என்று அல்லாஹ்வே சொல்கிறான்: (குர்ஆன்-3:173)சரி, ஒரு பேச்சுக்காக ஜமாஅதே இஸ்லாமியின் வாதப்படியே வேறுபட்ட கொள்கைகளிலிருக்கும் அனைவரும் ஒன்றுபட்டே தான் இருக்க வேண்டுமென்றே வைத்துக் கொள்வோமே. அப்படியானால் ஷீஆக்களோடும், கப்று வணங்கிகளோடும், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கவாரிஜ்களோடும், ஏன் அரசியல்வாதிகளோடும் கூட கூட்டு வைத்துக் குலாவிக் கொஞ்சும் இந்த ஜமாஅதே இஸ்லாமி ஏகத்துவவாதிகளை மட்டும் ஏன் ஒதுக்கி வைத்து விமர்சிக்கின்றது? தூய சத்தியத்தில் மட்டும் நாம் தனித்து நிற்பதாலா? ஆம். இதுமட்டுமல்லளூ இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன:அ) ஜமாஅதே இஸ்லாமியின் கொள்கையும், வழிகெட்ட ஏனைய கூட்டங்களின் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று பொருந்திப் போகும் அதேவேளை தவ்ஹீதை விட்டும் தூரமாக இருப்பது.ஆ) தமக்கு நெருக்கமாக உள்ள இந்த வழிகெட்ட கொள்கைகளுடன் கூட்டு வைத்து இலங்கையின் ஆட்சியைப் பிடிக்கும் உள்நோக்கம் மட்டுமே இவர்களது பிரதான இலக்கு.இதைக் கூட நாமாகக் கண்டுபிடித்து சொல்லவில்லை. அவர்களின் வாக்குமூலமே இதைப் பின்வருமாறு உறுதிப்படுத்துகிறது:ஆகஸ்ட் 2009 அல்ஹஸனாத்தில் 'ரமழான் பன்பாடுகளின் பயிற்சிப் பட்டறை' எனும் தலைப்பில் சகோ. அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் (நளீமி) அவர்களது கட்டுரையொன்று பிரசுரிக்கப்பட்டது. பார்ப்பதற்கு இக்கட்டுரை கோமாளித்தனமாக இருந்தாலும் அதன் விளைவு எவ்வளவு பாரதூரமானது என்பது நடுநிலையோடு பார்க்கும் எவருக்கும் புரியும். இக்கட்டுரையில் இவர் இரவுத் தொழுகையின் விடயத்தில் எவ்வாறு ஏனைய கட்சிகளுடன் சமரசம் செய்து, கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் எனும் உள்நோக்கத்துடன் தந்திரோபாயம் செய்வதாக நினைத்துக்கொண்டு மடத்தனமாக உளறியிருக்கிறார் என்று நீங்களே பாருங்கள். 'முஸ்லிம்களுக்கு மத்தியிலுள்ள உட்பூசல்களுக்கும், சர்ச்சைகளுக்கும் காரணம் அறியாமையும், அறியாமையும் மோதுவதாகும்.' அதாவது ஜமாஅதே இஸ்லாமி, தரீக்கா, ஷீஆ ஆகிய இவர்களது கூட்டணி தவிர்ந்த தவ்ஹீத் வாதிகள் தாம் மடையர்கள். இம்மடமை இன்னொரு மடமையான தப்லீக்கோடு மோதும் போது இவ்வாறு பிரச்சினை ஏற்படுகின்றது என்பது தான் இவரது வாதம். அதேவேளை இவர் சொல்வது போல் அறிவும் அறியாமையும் மோதுவதால் பிரச்சினை ஏற்படாது. ஆக, இவர்களது கூற்றுப்படியே வைத்துப் பார்த்தால், தவ்ஹீத் வாதிகளாகிய நாம் மடையர்கள். ஜமாஅதே இஸ்லாமியின் அதிபண்டிதர்களான நீங்கள் அறிவாளிகள். இங்கு அறிவும் (ஜமாஅதே இஸ்லாமியும்), அறியாமையும் (தவ்ஹீதும்) கலந்துரையாடுவதாலோ, விவாதிப்பதாலோ எந்தப் பிரச்சினையும் ஏற்படப் போவதில்லையே! நல்ல பலன் தானே கிட்டப் போகிறது என்பதைப் பகிரங்கமாகப் பறைசாற்றும் உங்களுக்குத் தானே நாம் எத்தனையோ தடவைகள் 'கலந்துரையாடலாம் வாருங்கள்' என்று கெஞ்சாத குறையாய் அழைப்பு விடுத்தோம். எந்த அழைப்புக்கும் ஏன் நீங்கள் பதிலளிக்கவில்லை? ஏன் எமது அழைப்பை மதித்து வரவில்லை? ஏ.சீ. அகார் அவர்களை ஏசாத குறையாகப் பலதடவை அழைத்தும், ஏசீ ரூமுக்குள் தானே பதுங்கியிருக்கிறார்! ஹஜ்ஜுல் அக்பரைப் ஹஜ்{க்குப் போவதை விடப் பலமடங்கு அலைந்தலைந்து துரத்தித் துரத்திப் பேச அழைத்தும், பலன் தான் என்ன? தெருநாய் துரத்தத் தலைதெறிக்க ஓடும் நொண்டிப் பிச்சைக்காரனைப் போல நம்மைக் காணுமிடமெல்லாம் ஒளிந்தோடுவது மட்டுமே அவரது வேலையாக இருக்கிறது. மின்ஹாஜ் மௌலவியோ ஒருபக்கம் அப்பிராணி. பேச அழைக்கும் நேரத்திலெல்லாம் அப்பாவித்தனமாக தலைமையிடம் தான் கேட்க வேண்டுமென்று தலையைப் பாவித்துத் தப்பிக் கொள்வார்.நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். உங்களின் வாதப்படியே உங்களை மீண்டும் ஒருமுறை பேச அழைக்கிறோம். இதற்காவாவது நேர்மையான முறையில் ஒரு பதில் தாருங்கள். அதாவது 'ஜமாஅதே இஸ்லாமி இஸ்லாமிய வரையறைக்குள் இல்லை. ஜமாஅதே இஸ்லாமி ஒரு தனி மதம்' என்பது தான் எமது வாதம். இதை நாம் இன்ஷா அல்லாஹ் நிரூபிப்போம். அறிவாளிகள் என்று உங்களை நீங்கள் கருதினால், கருத்தோடு கருத்து மோத நேருக்கு நேர் எம்மை எதிர்கொள்ள முன்வாருங்கள். இதற்கு நீங்கள் பயந்து ஓடி ஒளிய மாட்டீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஆம், ஓடியொளிவதற்குத் தான் இதில் என்ன இருக்கிறது? நாம் என்ன உங்களை அடித்துக் கொல்லவா போகிறோம்? நேருக்கு நேர் நின்று நாகரீகமான முறையில் பேசித் தானே தீர்த்துக் கொள்ளப் போகிறோம். நீங்கள் சத்தியத்தோடிருந்தால் நீங்கள் ஏன் பயப்படப் போகிறீர்கள்? ஆகவே நாம் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம். இதற்கும் பதிலில்லாமல் இன்னும் நீங்கள் மௌனமாக இருந்தால், உங்களைப் பொய்யர் என்றும், பேடிகளென்றும் அழைப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. ஏனெனில்,வீண் சண்டைக்குப் முன்வராதவன் மிதவாதிளூ பாராட்டுக்குரியவன்ளூ எனவே பாராட்டுகிறோம். வாயால் அறிவுபூர்வமாகப் பேசித் தீர்க்க முன்வராதவன் பொய்யன், பேடிளூ தோலுரிக்கப்படவேண்டியவன்ளூ எனவே தான் இங்கு தோலுரிக்கிறோம்.அடுத்ததாக இவர்களது அக்கட்டுரை தராவீஹ் தொழுகையைப் பொருத்தவரை (அப்படியும் ஒரு தொழுகையா???) 8 ரக்அத்துகளுக்கு தெளிவான ஆதாரங்கள் உண்டு என்று கூறிவிட்டு, ஏனையவை தெளிவற்ற ஆதாரம் என்பதைத் தன்னையறியாமலே ஒத்துக் கொள்கிறார். எந்த சத்தியத்தை மறைக்க நினைத்தாரோ, அதை அவரது வாயிலிருந்தே அல்லாஹ் வெளிப்படுத்தி விட்டான். யாராவது 8 ரக்அத்துகள் தொழுதால் அவர்களைக் குழப்பவாதிகள் என்று சொல்லக் கூடாது என்று இவர் முதலைக் கண்ணீர் வேறு வடிக்கிறார். ஆடு நனைவது உண்மையில் ஓநாய்க்குக் கவலையென்றால் இவர்களின் இதழ்களில் 'ஒன்றுபட்ட உம்மத்தை இரவுத் தொழுகை மூலம் பிரித்ததே தவ்ஹீத் வாதிகள் தாம்' என்று ஊளையிட்டது ஏன்? அதேநேரம் 20 ரக்அத்துகளுக்கு ஆதாரம் இல்லாமலில்லையென்று கூறும் இவரும் இவரது சகாக்களும் வரலாறு நெடுகிலும் ஒரு சரியான ஆதாரத்தையாவது நபிவழியிலிருந்து எடுத்துக் காட்டினார்களா? நீங்கள் பக்கம் பக்கமாக எழுதி, உங்கள் மேதாவித்தனத்தைக் காட்டவேண்டிதேயில்லை. இரண்டே வரிகளில் நாம் அடங்கிப் போகும் வண்ணம் 20 ரக்அத்துகளுக்கு ஆதாரபூர்வமான ஹதீஸிலிருந்து ஒரேயொரு சான்றைக் காட்டிவிடுங்களேன். பிரச்சினை முடிந்து விடும். காட்டவே மாட்டீர்கள்ளூ உலகம் அழியும் வரை நாம் கத்தினாலும் உங்களால் காட்ட முடியாது. இருந்தால் தானே காட்ட முடியும். நீங்கள் பொய்யர்களென்பது உங்கள் ஜமாஅத் உறுப்பினர்கள் கூட அறிந்த விடயம் தானே. அதனால் நீங்கள் ஆதாரம் காட்டாமல் ஒளிந்தோடுவதால் ஒன்றும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கும் கோமாளிக் கும்பலின் சலவை செய்யப்பட்ட மூளைகளெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் தெளிவடைந்து விடாது என்றே நினைக்கிறோம்.'ஹரம் ஷரீபின் வரலாறு நெடுகிலும் 20 ரக்அத்துக்களே தொழுவிக்கப்பட்டு வருகின்றன.' என்று வாய்கூசாமல் இவர் சொல்லியிருப்பது இவரது அடுத்த பொய். வரலாறு என்று இவர் குறிப்பிட்டது ஆதம் நபியிலிருந்தா? மக்கா வெற்றியிலிருந்தா? அல்லது நபியும் ஸஹாபாக்களும் மறைந்த பின்னரிலிருந்தா? அல்லது இவர் மௌலவிப் பட்டம் பெற்றதிலிருந்தா? தவ்ஹீத் வாதிகள் பின்பற்றும் நபிகளாரின் காலத்தில் ஹரம் ஷரீபில் 20 ரக்அத்துகள் தொழுவிக்கப்படவில்லை. நீங்கள் கூறும் வரலாற்றில் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) என்ற ஒரு பாத்திரம் இருந்ததா? அல்லது மௌதூதி தான் முஹம்மத்(ஸல்) அவர்களின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டாரா?'உலகின் பல நாடுகளில் 20 ரக்அத்துகளே நடைமுறையில் உள்ளன. இதனால் தராவீஹ் 20 ரக்அத்துகள் என்பதும் சரியே' என்பது இவரது அடுத்த வாதம். உலகின் பல நாடுகளில் ஷீஆக்கள் விபச்சாரத்தை 'முத்ஆ' எனும் போலியான சட்டத்தின் மூலம் நியாயப்படுத்துகின்றனர். இன்னும் பல நாடுகளில் இறந்தவர்களை கடவுளென்கின்றனர். வேறு பல நாடுகளில் காபிரைத் திசைதிருப்புமுகமாக எப்பேர்ப்பட்ட பெரும்பாவத்தையும் 'தக்கிய்யா' என்னும் சட்டத்தின் அடிப்படையில் செய்யலாமென்ற கிறுக்குத்தனமான வாதத்தை நியாயப்படுத்துகின்றனர். இன்னும் பல நாடுகளில் குறைந்த வட்டியை ஹலாலென்கின்றனர். இசையையும், மதுபானத்தையும் கூடுமென்கின்றனர். சில நாட்டு அறிஞர்களோ ஏகத்துவத்தைக் கூறும் இக்ஃலாஸ் அத்தியாயத்துக்கு தப்ஸீர் எனும் பெயரில் அத்துவைதத்தைக் கற்பிக்கின்றனர். இதுபோன்று உலகின் பல நாடுகளில் வரலாறு நெடுகிலும் நடந்துகொண்டிருக்கும் இத்தீமைகளையும் தராவீஹை நீங்கள் நியாயப்படுத்தியது போன்று நியாயப்படுத்த வேண்டிது தானே? அவற்றை மட்டும் ஏன் விட்டு வைத்தீர்கள்? என்று உங்களிடம் கேட்க முடியாது. ஏனென்றால் இவ்வனைத்து விடயங்களும் உலகின் பல நாடுகளிலும் உங்கள் கூட்டத்தைச் சார்ந்த அறிஞர்களாலும், இயக்கவாதிகளாலுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, இரவுத் தொழுகைக்கு 20 ரக்அத்துக்கள் என்பதற்கு குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஆதாரம் காட்டாமல் உலக நாடுகளை நீங்கள் ஆதாரம் காட்டுவது ஒன்றும் ஆச்சரியமில்லை.அதிகமான மக்கள் செய்வது 'முத்தவாத்திர் அமல்' என்று அரபி வார்த்தையைப் பிரயோகித்து இதை வாசிக்கும் ஜமாஅதே இஸ்லாமி பொதுமக்களுக்கு அவர் கூறிக்கொள்ளும் உண்மை என்னவென்றால், ஜமாஅதே இஸ்லாமியின் வாசகர்கள் அரபு தெரியாத மடையர்கள். நாம் என்ன சொன்னாலும் எதிர்க் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று பறைசாற்றுவதே.சகோ. அகாருக்கு முடியுமானால் 'முத்தவாத்திர் அமல்' என்பதை அடுத்த முறை தமிழில் மொழிபெயர்த்துப் போட்டுக் காட்டட்டும். முத்தவாத்திர் என்பது ஹதீஸ்கலையில் நபிகளாரின் ஒரு செய்தியை ஸஹாபாக்களிலும், தாபிஈன்களிலும், தப்உத் தாபிஈன்களிலும் பத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையினரால் அறிவிக்கப்படும் ஆதாரபூர்வமான செய்தியைக் குறிக்கும். இவர் வாதப்படி முஸ்லிம்களே அல்லாத காபிர்களில் அனேகமானவர்கள் (முத்தவாத்திர்) செய்யும் செயலான (அமலி) சிலைவணக்கத்தைக் கூட முத்தவாத்திர்; அமல் என்று செய்வது கூடும். 'முரண்பாடுகளின் மொத்த வடிவமே நானும் எனது ஜமாஅதே இஸ்லாமி உலமாக்களும் தாம்' என்பதை சகோ. அகார் அவர்கள் தெளிவாகக் கூறி மக்களுக்குத் தெளிவுபடுத்தி விட்டார். இதற்குப் பிறகும் அகார் அவர்கள் தனக்குத் தானே முரண்பட்டுப் பேசமாட்டார் என்று மக்கள் விளங்கினால், அதற்கு சகோ. அகார் அவர்கள் பொறுப்பல்ல என்பதை பின்வரும் முரண்பாடு எடுத்துக் காட்டுகிறது:அதாவது, தராவீஹின் ரக்காத்துக்கள் எட்டா? இருபதா? என்று சர்ச்சை ஏற்படக் காரணம் அது 'நபில் முத்லக்' என்ற அந்தஸ்தைப் பெற்றிருப்பதாலாம். இவ்வாறு கூறிவிட்டு 'நபில் முத்லக்' என்றால் என்னவென்று கூறாமல் இவரது ஸ்டைலிலேயே விட்டுவிட்டார். என்ன செய்ய? நாமாவது அதன் அர்த்தத்தை சொல்லித்தானே ஆகவேண்டும். நபில் முத்லக் என்பது ரக்காத்துக்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படாத உபரியான(நபில்) தொழுகை. இவர் வாதப்படி இரவுத் தொழுகை நபில் முத்லக் என்றால், 8 ரக்காத்தக்கு தெளிவான ஆதாரம் உண்டு என ஆரம்பத்தில் குறிப்பிட்டு ரக்காத்துகளை வரையறை செய்தது எவ்வாறு? இல்லாத இருபதை உள்ளது என்று இரவுத் தொழுகையை வரையறுத்தது நாமா? நீங்களா? இமாம் அஹ்மத் அவர்களைக் காட்டி இரவுத்தொழுகையை உலக வரலாற்றில் முதன்முறையாக 36 ரக்அத்துக்களென என வரையரை செய்தது யார்? தர்க்க ரீதியாக பார்த்தாலும் உங்கள் வாதம் மிகவும் அபத்தமானது. நாமாவது இரவுத் தொழுகையை 8 என்று மட்டுமே வரையறுத்தோம். நீங்களோ 8, 20, 36 என மூன்று வரையறைகளை கூறுகிறீர்கள். ஒரு குறித்த விடயத்துக்கு 3 வரையறைகள் இருக்குமானால் அது வரையறுக்கப்படாதது என்று அர்த்தமா? அல்லது வரையறுத்தே ஆகவேண்டும் என்பதற்காக வலிந்து வரையறுக்கப்பட்டதா? எம்மைவிட வலிந்து வரையறை செய்த நீங்கள், அடுத்த வினாடியே வரையறையற்றது எனக் கூறுவது, நீங்கள் முரண்பட்டுத்தான் பேசுவீர்கள் என்பதை மேலும் மக்களுக்கு தெளிவாகப் பறைசாற்றுவது ஆகாதா? இன்னும் இதில் வேடிக்கை என்னவென்றால், இரவுத் தொழுகையை 8, 20, 36 என வரையறுத்துவிட்டு, பின்னர் 'வரையறை அற்றது' என்று தனக்குத் தானே முரணாகவும் எழுதிவிட்டு, முடிவில் தொழாமலும் இருக்கலாம் என்று முரண்பாட்டுக்கே முரண்பாடு கற்பித்து உள்ளீர்களே! உங்களை எந்தக் கூட்டத்தில் சேர்ப்பது?நபிலுக்கும் சுன்னத்துக்கும் வேறுபாடு தெரியாத உங்களை உங்கள் பாஷையில் புகழ்வதென்றால் 'நீங்கள் அறிவாளிகள்'. உங்கள் அறிவையும், அறிவையும் மோதவிட்டு இந்த முரண்பாட்டுக்கு விளக்கம் தர வேண்டும். விளக்கம் தந்தால் நீங்கள் அறிவாளிளூ நாங்கள் பொய்யர். விளக்கம் தரவில்லையென்றால் நீங்கள் பொய்யர். எப்படி வசதி?

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP