12.7.11

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பிறைக் குழு ஆரம்பம்.

நோன்பு, ஹஜ், இத்தா உள்ளிட்ட பல கடமைகளை முஸ்லீம்கள் பிறையை அடிப்படையாகக் கொண்டே நிறைவேற்றுகிறார்கள். இந்தப் பிறையை சுன்னா அடிப்படையில் நம்பகத் தன்மையுடன் தீர்மானிக்கும் தேவை பன்னெடுங் காலமாக இந் நாட்டில் நிலவி வருகிறது.  இந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்காக,  குர்ஆன், சுன்னா அடிப்படையில் இலங்கை முழுவதையும் பிறை பார்ப்பதற்குறிய எல்லையாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத், பிறைக் குழு ஒன்றை ஆரம்பித்துள்ளது.
நாடு முழுவதும் இயங்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் கிளைகளின் சகோதரர்கள் மாதா மாதம் பிறை பார்க்கும் புனிதப் பணியில் ஈடுபடவுள்ளனர். (இன்ஷா அல்லாஹ்)
எனவே எதிர்வரும் ரமழான் மாதத்தின் தலைப் பிறை தீர்மானிக்கும் விஷயத்தில் தொடங்கி அனைத்து அன்பர்களும் எமக்கு ஒத்தாசை வழங்குமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறோம்.
பிறை கண்ட தகவல்களை இரு சாட்சியங்களின் துணையுடன் பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.
0112677974, 07771763210771524524

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP