11.7.11

“நபி ஸல் அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள் (நவூது பில்லாஹ்)

குமைனி போன்றவர்களை அன்றைய இஸ்லாமிய உலகம் எப்படி கவனித்தது என்றால் அவர் ஒரு போராளி, இஸ்லாமிய ஆட்சியை நிறுவதற்காக போராடுபவர், அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுப்பவர் என்று தான் எல்லோறும் நினைத்தார்கள். அதற்காக பாராட்டினார்கள்.
இதனால் குமைனி ஷியா கொள்கையை விட்டுவிடுவார், ஷியா, ஷன்னி என்று பிரித்து பார்க்கமாட்டார், ஈரானிய ஷியாக்கள் சன்னி களுக்கு இனி எந்த தொல்லைகளும் கொடுக்கமாட்டார் என்றுதான் இஸ்லாமிய உலகம் என்னிக்கொண்டிருந்தனர்.
ஆனால் இந்தக்கருத்துக்கு மன்னை போட்டுவிட்டார் குமைனி. குமைனி அவருடைய கஷ்புர் அஸ்ரார் போன்ற கிதாபுகளில் ஷியா கொள்கையை பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டு அதை உறுதி படுத்தவும் செய்திருக்கிறார்.
ஆகையால் இன்றைய இஸ்லாமிய சன்னி இளைஞர்கள் குமைனியை இப்போதும் நடுநிலையாளர் என்ற கருத்தை கொண்டுருக்கிறார்கள். ஆகையால் இது போன்ற இளைஞர்களுக்கு குமைனியின் கொள்கைகள் என்ன என்பதை விளக்க வேண்டும் என்ற அடிப்படையில் இதை தொகுத்து வழங்குகிறேன்.

12 இமாம்கள் பாவத்தி­ருந்து பாதுகாக்கப்பட்டவர்கள்.
இமாம்கள் தவறு, மறுதி. கவனக்குறைவு இவைகளை விட்டு பாதுகாக்கப்பட்டவர்கள். இமாமிய்யத் பதவி நபி பதவியை விட அந்தஸ்து கூடியது.
நூல்:  ஹயாத்துல் குலூப் பாகம் 3 பக்கம் 10 மஜ்­ஸி என்ற ஷியா இமாம் இதை எழுதியிருக்கிறார்.
இது அன்றைய இருந்த ஷியாக்களின் கொள்கைகள். ஆனால் இந்த குப்ரிய்யத்தான கொள்கையை குமைனியும் வாந்தி எடுத்திருக்கிறார்.
இமாம்களுக்கு ஹலால் ஹராம் என்று தீர்மானிக்கும் அதிகாரம்.
அல்லாஹ் அனைத்தையும் படைப்பையும் படைத்து அவைகளை இன்ôம்களுக்கு முன்னால் கொண்டு வந்து அவைகளை இன்ôம்களுக்கு கட்டுப்படும்படி சொன்னான். அவைகளில் காரியங்களை அவர்களிடம் ஒப்படைத்தான். எனவே அவர்கள் தாங்கள் நாடியதை ஹலால் ஆக்குவார்கள். தாங்கள் நாடியதை ஹராம் ஆக்குவார்கள்.
நூல்: உஸீலுல் காபி பக்கம் 287.

இமாம்கள் மறைவானவற்றை அறிவார்கள்.
இமாம்கள் நடந்ததையும், இனி நடப்பவைகளையும் அறியக்கடியவர்கள். அவர்களுக்கு தெரியாமல் எதுவும் இருக்காது.
நூல்: உஸீலுல் காபி பக்கம் 160.
இதே கருத்தை குமைனி சொல்கிறார்.
நம்முடைய மத்ஹபில் அவசியம் நம்பவேண்டிய விஷயங்களில் நம்முடைய இமாம்களுக்கு நபிமார்களுக்கோ, மலக்குக்கோ இல்லாத் அந்தஸ்து இருக்கிறது.
நூல்:  இஸ்லாமிய ஆட்சி பக்கம் 52 இது கேய்ரோவில் 1979 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட இஸ்லாமிய ஆட்சி என்ற புத்கத்தில் உள்ளது. மேலும் அபுல் ஹஸன் அலீ நத்வீ அவர்களும் தன்னுடைய ஸீவ்ரதானி முதலாததானி என்ற புத்கத்தில் பக்கம் 77 ல் உறுதி செய்துள்ளார்.

திருக்குர்ஆனுக்கு ஒப்பான போதனைகள்.
நமது     இமாம்களின் போதனை திருக்குர்ஆனின் போதனைகளைப் போலவையாகும்.
இஸ்லாமிய ஆட்சி பக்கம் 112.

பாவம் அறியா இமாம்கள்.
அவர்கள் (இமாம்கள்) விஷயத்தில் அவர்கள் பாவம் செய்ததாகவோ, மறதியாக தவறு செய்ததாகவோ யாரும் கற்பளைன கூட செய்ய முடியாது.
இஸ்லாமிய ஆட்சி பக்கம் 91.

குர்ஆன் மாற்றப்பட்டு விட்டது.
குர்ஆனில் திரிபுகள் நடந்து விட்டது என முதவாதிரான செய்தி இருக்கிறது என்று ஷியா இமாம்கள் கூறுகிறார்கள்.
நூல்: பஸ்லுல் கிதாப் பக்கம் 238 மற்றும் 329.
குர்ஆனி­ருந்து சில வசனங்களை நீக்குவது ஸஹாபாக்களுக்கு எளிதான காôரியமாக இருந்தது.
நூல்: கஷ்புல் அஸ்ரார் பக்கம் பக்கம் 114.
(இதை அபுல் ஹஸன் அலீ நத்வீ அவர்களும் ஸீவ்ரதானி முதலாததானி என்ற புத்தகத்தில் உறுதி செய்துள்ளார்.)

ஸஹாபாக்கள் ஹதீஸ்களை இட்டுகட்டுபவர்கள்.
அபூஹீûரைரா, ஸமுரா பின் ஜீன்துப், மர்வான் பின் ஹிகம் இம்ரான் பின் ஹத்தான், அம்ரு இப்னு ஆஸ் இவர்கள் போன்றோர் செய்திகளை ஷியா இமாம்கள் கொசுவுக்கு சமமாக கூட பார்ப்பதில்லை.
அஸலுஸ் ஷியா வ உமூவ்லஹா பக்கம் 79.
அபூபக்கர் சித்தீக் அவர்கள் நபிமார்கள் நாங்கள் எதை விட்டுச் சென்றேமோ அவைகளுக்கு யாரும் வாரிசாக மாட்டார் என்ற செய்தியை இட்டுக்கட்டி விட்டார்.
‘நூல்: கஷ்புல் அஸ்ரார் பக்கம் 112.

ஸஹாபாகள் அனைவரும் காபிர்கள்.
நபி ஸல் அவர்களுக்கு பின்னால் மூன்று நபித்தோழர்களைத்தவிர மற்ற அனைவர்களும் முர்தத் ஆகிவிட்டார்கள். அவர்கள் யார் என்று கேட்கப்பட்ட போது மிக்தாத் பின் அஸ்வத் அபூதர் கிபாரி ஸல்மான் பார்ஸி ஆகியோர் என்று பதில் சொன்னார்.
காபி பாகம் 3 பக்கம் 85.

நபி ஸல் அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள் (நவூது பில்லாஹ்)
காத்தமுல் முர்ஸலீன் அவர்கள் மனிதர்களை சீர்திருத்டதுவதற்காக அவர்களை பக்குவப்படுத்துவதற்காக நீதி நேர்மையை நிலைநாட்டுவதற்காக வந்தார்கள். ஆனால் தம் காலத்தில் வெற்றியடையாமல் போய் விட்டது.
தெஹ்ரான் டைம்ஸ் ஷபான் 1400.
இம்பாக்ட் இன்டர்நேஷனல் லண்டன் 24,8,1984
பாகிஸ்ஙதானி­ருந்து வெளிவரும் ஈஷியா ஹிஜ்ரி 1404 செம்டம்பர் 23 1984. என்ற பத்திரிக்கையிலும் இது வெளிவந்த செய்தியாகும்.
நாம் இந்த கட்டுரைகளை எழுதுவதற்கு     உறுதுனையாக இருந்த புத்தகம் குமைனி சுதூத் பில் அகாயித் என்ற அரபி புத்தகமாகும்.

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP