9.7.11

துர்மணம் தேடும் ஜமாஅதே இஸ்லாமி அமீர் ஹஜ்ஜூல் அக்பர்

(அல்ஹஸனாத் ஜுன் 2007 இதழில், ஜமாஅதே இஸ்லாமி அமீர உஸ்தாத்(?)ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் என்பவர்,’நறுமணம் நீக்கி துர்மணம் தேடும் விமர்சிகர்கள்’ என்ற தலைப்பில், தவ்ஹீத்வாதிகளை எல்லாம் அரை குறை என்று – தான் ஓர் அரை குறை என்பதை மறந்துவிட்டு – கொச்சைப்படுத்தி எழுதியிருந்தார். அவரது விமர்சினத்திலுள்ள முரண்பாடுகளுக்கும் தவறான விடயங்களுக்கும் பதில் அளிக்கப்படுகிறது.)
கடந்த அல்ஹஸனாத் ஜுன் 2007 இதழில் காக்கா ஹஜ்ஜுல் அக்பர் என்பார் : ஹஸனுல் பன்னா, மவ்லானா மவ்தூதி, மவ்லானா இல்யாஸ், ஸையித் குதுப், யூசுப் அல்கர்ளாவி, ரஷீத் அல்ஃகன்னூஸி, உமர் தில்மஸானி, பைஸல் மவ்லவி போன்றோர் இஸ்லாமிய உம்மத்தின் அங்கீகாரத்தைப் பெற்றவர்கள் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டு, வாதிடுகின்றார்.உண்மையில், இங்கு இவரால் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் பெரிய அறிஞர்களோ, ஆய்வாளர்களோ அல்லர் என்பது உலகறிந்த உண்மை. இவர்கள் உலகிலுள்ள மிகச் சொற்பமான, இஸ்லாத்தை விளங்காத சில ஆதரவாளர்களைப் பெற்ற, பல தவறான கொள்கைகளையுடைய இயக்கவாதிகள் மாத்திரமே. இமாம் இப்னு தைமிய்யா, அல்பானி, P.ஜைனுல் ஆபிதீன் போன்ற பன்முக ஆளுமையுடைய அறிஞர்களுக்கு நிகரானவர்களும் அல்லர். வெறுமனே இயக்க ஸ்தாபகர்கள், இயக்கவாதிகள். அவ்வளவுதான் இவர்களின் பெருமை. இவர்களில் பலர் அகீதாவில் தவறு விட்டதால், சமகால பல்துறை சார்ந்த அறிஞர்களால் மிக வன்மையாக விமர்சிக்கப்பட்டவர்கள். எந்தளவுக்கென்றால், சமகால ஹதீஸ் துறை அறிஞர்களில் ஒருவர், யூசுப் கர்ளாவி பற்றி ஒரு விமர்சன நூல் எழுதியுள்ளார். (இஸ்காத் அல்கல்புல் ஆவி யூசுப் அப்தில்லாஹ் அல்கர்ளாவி) யூசுப் கர்ளாவி ஒரு வெறிபிடித்த நாய் என்று தனது நூலுக்கு பெயரிட்டு விமர்சித்துள்ளார். இந்தளவு கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டவர்களுக்குத்தான் சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் என்று நீங்கள் போலிப் புகழ் தேடிக் கொடுக்க முனைகின்றீர்.நீங்கள் பெயர் குறிப்பிட்டுத் துதிபாடுபவர்களில் மவ்தூதி தவிர, மற்றவர்கள் எகிப்தில் பல முஸ்லிம் இளைஞர்களைக் குர்பான் கொடுத்ததைத் தவிர, இதுவரை எதையும் சாதிக்காத இக்வான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். மவ்தூதி என்பவர் நபி () அவர்களின், தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பை மறுத்தவர். நபி () அவர்கள் யூகத்தின் அடிப்படையில் பேசிவிட்டுச் சென்றுவிட்டார்கள் என்று ஹதீஸைக் கேவலப்படுத்திவர். (பார்க்க: முiவாயடிரச சுயளயயடை றுயடஅயளயயடை P.57) இதை மவ்தூதி தனது தப்ஹீமில் ‘யூஸூப் நபி ஹிட்லருக்கு நிகரான அதிகாரத்தை வேண்டினார்’ என்று நபியையும் குர்ஆனையும் கேவலப்படுத்தியவர். இவ்வாறு, நபிமார்களை அவமதிப்பவர்களை முஸ்லிம் உம்மத் எவ்வாறு அங்கீகரிக்கும்? மவ்லானா இல்யாஸைப் பற்றிப் பேசவே தேவையில்லை. தப்லீக் இயக்கத்தின் கொள்கை கோட்பாடுகளை அவதானித்தால், அவரது இஸ்லாமிய அறிவு ஞானத்தையும் சமூக அங்கீகாரத்தையும் பட்டென்று புரிந்து கொண்டு விடலாம்.இலங்கையில் கூட, நீங்கள் குறிப்பிட்டுள்ள இயக்கவாதிகள், ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான்களான ஆகுஊனு தவிர்ந்த மற்ற இயக்கங்களின் அங்கீகாரத்தைப் பெறாதவர்கள். ஜமாஅத்தே இஸ்லாமியும் இக்வான்களான ஆகுஊனுயும், இல்யாஸ் மவ்லானாவின் சமூக அங்கீகாரக் கருத்துக்களை(?) எடுத்துக் கூறுவதில்லை. தவ்ஹீத்வாதிகளுக்கு எதிராக, தப்லீக் ஜமாஅத்வாதிகளைத் தூண்டிவிட மாத்திரம் அவரின் பெயரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதேபோல், தப்லீக் ஜமாஅத் மஜ்லிஸ்களில், ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான் (ஆகுஊனு) இயக்கவாதிகளின் கருத்துக்கள் பேசப்படுவதில்லை. ஏன்? ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான் (ஆகுஊனு) இயக்கவாதிகளின் ஒரே இலட்சியம் கி(இ)லாபத் கனவுதான். எனினும் இவர்களே இரண்டாகப் பிரிந்து, பல துருவங்களாக உள்ளனர். இவர்களே ஒற்றுமைக் கோஷத்தையும் இடைவிடாது போட்டும் வருகின்றனர்.‘முதலில் விமர்சிக்கப்படுபவரையும், அவரது மகிமைகள், அவர் செய்திருக்கும் மகத்தான பணிகள் என்பவற்றையும் சிலாகித்துக் குறிப்பிட்ட பின் அவரது உலக மறுமை நற்பேறுகளுக்காக துஆச் செய்துவிட்டு அடுத்ததாக,ஒரு முஸ்லிம் தன் அடுத்த சகோதர முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைப்பாடு என்ற வகையில் தவறுகளைச் சுட்டிக்காட்டிப் பண்பாடாக விமர்சிக்கும் போதும், பின்னால் அந்தத் தவறுகளுக்காக அல்லாஹ் அவரை மன்னித்து விடுவானாக! என்று பிரார்த்தனை செய்யும் போதும் மனம் புல்லரித்து விடுகின்றது. ஒரு மனிதரிடம் அடக்கமும் அறிவும் இருக்கின்றது என்பதற்கான அடையாளம்தான் இத்தகைய விமர்சனமாகும்.’ என்று எழுதியுள்ளீர்.‘ஒருவரை விமர்சித்தால், அவரது மகிமைகள், அவர் செய்திருக்கும் மகத்தான பணிகள் என்பற்றையும் சிலாகித்துக் குறிப்பிட்ட பின்னர்தான்…’ என்று தொடரும் நீங்கள், இதற்கு முன்னர் அறிஞர் P.து.யையும் பல தவ்ஹீத் அறிஞர்களையும் விமர்சித்துள்ளீர்கள். நீங்கள் எழுதியபடி, அறிஞர் P.து. அவர்கள் செய்துவரும் நற்பணிகளை எல்லாம் சுட்டிக் காட்டித்தான் விமர்சித்தீர்களா?•    இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியூடாக இஸ்லாத்தின் தூதை, முஸ்லிமல்லாத மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களில் கணிசமான ஒரு தொகையினரை, இஸ்லாத்தில் நுழைய வைத்து, பலரை இஸ்லாத்தின் ஆதராவாளர்களாக மாற்றியதை எடுத்துக் காட்டித்தான் விமர்சித்தீர்களா?•    வரதட்சணை கொடுமைகளால் ஏற்பட்ட சீரழிவுகளை எடுத்துக்காட்டி, இஸ்லாமிய பெண் விடுதலைக்காக அவர் ஆற்றிவரும் புரட்சிகரமான பணிகளை எடுத்துக் காட்டித்தான் விமர்சித்தீர்களா?•    அமேரிக்க, இஸ்ரேலின் அராஜகங்களை பகிரங்கமாக மேடை போட்டு அவர் கண்டித்து ஆற்றிய உரைகளை எடுத்து விளக்கித்தான் விமர்சித்தீர்களா?•    தூய்மைத் தவ்ஹீத் வாதத்தை ஆய்வினடியாய் எடுத்துக் கூறி, ஷிர்க்-பித்அத்களையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிப்பதில் அவர் ஆற்றிவரும் நிகரற்ற பணிகளை எடுத்துக் காண்பித்துத்தான் விமர்சித்தீர்களா?•    காதியானிஸம், தரீக்காயிஸம், சூபிஸம், 19யிஸம், கிறிஸ்தவர்கள் போன்ற பல்வேறு தவறான மதவாதிகளுடன் அவர் விவாதித்து, இஸ்லாத்தின் பெருமையை நிரூபித்ததையெல்லாம் எடுத்துக் கூறித்தான் விமர்சித்தீர்களா?•    20 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்து, உரை, ஆய்வு போன்ற அனைத்து ஊடகங்களாலும் அவர் சத்திய இஸ்லாத்தைக் காப்பதற்காக இடைவிடாது போராடி வருவதைக் குறிப்பிட்டுக் கூறித்தான் விமர்சித்தீர்களா?•    இந்த நாட்டில் தவ்ஹீத் அமைப்புக்கள் செய்து வரும் நற்பணிகளையெல்லாம் சிலாகித்துத்தான் விமர்சித்தீர்களா?ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான் இயக்கங்களின் தவறான கொள்கைகளை எவருக்கும் அஞ்சாமல், துணிகரமாகவும் விவேகமாகவும் விமர்சித்தார் என்பதற்காக மட்டும் அவரை விமர்சித்தீர்கள். உங்கள் இயக்கம் சார்ந்தவர்களை விமர்சிக்கும் போது, நாங்கள் மட்டும் நன்மையைக் கூற வேண்டும். நீங்கள் எப்படியும் விமர்சிக்கலாம் என்ற இறுமாப்புத்தானே இவ்வாறு எழுதவைத்துள்ளது. ‘ஒருவரிடம் அடக்கமும் அறிவும் இருக்கின்றது என்பதற்கான அடையாளம்தான் இத்தகைய விமர்சனமாகும்…’ என்று தொடரும் நீங்கள், மற்றவர்களின் ஒரே ஒரு நற்பணியைக் கூட சுட்டிக் காட்டிப் பண்பாடாக விமர்சிக்கவில்லை;. மனிதத் தவறுகளுக்காக அல்லாஹ்விடம் அவர்கைளை மன்னித்து விடுவாயாக! என்று நீங்கள் பிரார்த்தனை செய்யவில்லை.எனவே, நீங்கள் எவ்வாறு விமர்சிக்க வேண்டும் என்று மற்றவர்களுக்குக் கூறுகின்றீரோ, அந்தப் பண்புகள் உங்களிடமே இல்லை. உங்களின் வாதப்படி உங்களிடமே அடக்கமும் அறிவும் இல்லை என்பதை நீங்களே ஏற்றுக்கொண்டுவிட்டீர். நீங்கள் ஓர் அரைகுறை என்பதை எழுத்தாலும் பேச்சாலும் மட்டுமல்ல, பத்வாக்களாலும் கூட நிரூபித்துள்ளீர்கள். ஒரு முறை சிலாபம் பள்ளியின் ஹவ்லில் நாய் விழுந்த போது, உங்களிடம் ஹவ்லை சுத்தம் செய்வது எவ்வாறு என்று கேட்கப்பட்டபோது, மண்போட்டு ஏழு முறை கழுவ வேண்டும் என்றீர். இதையே சகோ. அகார் முஹம்மதிடம், உங்கள்; பத்வாவை யார் சொன்னது என்று குறிப்பிடாமல் கேட்டபோது, யார் இவ்வாறு அரைகுறை பத்வா வழங்கியது? அது, தவறு. நாயை வெளியே எடுத்து வீசினால் போதும் என்றார். ஆகவே, அகார் முஹம்மதும் உங்களை அரைகுறை என்று கூறியுள்ளார்.இஸ்லாமிய அடிப்படையை, கலிமாவின் விளக்கத்தை அரை-குறையாகப் புரிந்துகொண்டவர்களை விமர்சிக்கும் தவ்ஹீத்வாதிகளை எல்லாம் அரைகுறை என்று எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? மாதம்பையில் லுஹர் தொழுகையை 5 ரக்ஆத்துக்கள் தொழுவித்துவிட்டு ஸலாம் கொடுத்தீர்கள். அதை நினைவுபடுத்திய பின், நீங்கள் திரும்பத் தொழ வேண்டும் என்று சுடசுட அரைகுறை பத்வா வழங்கினீர்கள். 4 ரகஅத் தொழுகையை மறதியாக 5 ரக்ஆத்துக்கள் தொழுதால், இரண்டு ஷஸஜ்தா| செய்ய வேண்டும் என்ற அன்றாடத் தொழுகை சட்டமே தெரியாத அறிவுமகாஞானி நீங்கள், இதையும் மறந்து மற்றவர்களுக்கு அரைகுறை என்கிறீர்களே! ஹஜ்ஜுல் அக்பர் நானா! இது நியாயம்தானா? மத்ரஸா சான்றிதழ் கூட இல்லாத உங்கள் பெயருக்கு முன்னால் ‘உஸ்தாத்’ பட்டம் எவ்வாறு வந்தது? ‘உஸ்தாத்’ பட்டம் பெற எவ்வளவு தகுதியும், P.hன முடித்த பின்னர் பல வருட அனுபவமும் வேண்டும். இவையெல்லாம் உங்களிடம் இருக்கின்றனவா? நீங்களும் ஜாமிஆ நளீமிய்யாவில் துரஅp ழுரவ என்பதை மறந்து, மற்றவர்களை அரைகுறை என்று எழுதுவது உங்களுக்குக் கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா?; இயக்கவாதிகள் மீதான அளவு மிஞ்சிய பாசம், கடந்த காலத்தை எல்லாம் மறக்கடித்துவிட்டதா? அல்லது தவ்ஹீத்வாதிகள் மீதுள்ள வெறுப்பா?சகோ. ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள், முஸ்லிம் சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் என்று அறிமுகப்படுத்திய சிலரில், செய்யித் குதுப் என்பவரும் ஒருவராவார். இவர் வாழ்ந்த காலப் பகுதியில் உலகில் எங்கும் முஸ்லிம்கள் இல்லை என்று, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் காபிராக்கியவர்! செய்யித் குதுப் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தையும் காபிர் என்றார் என்பதை, அதே இயக்கத்தைச் சேர்ந்த யூசுப் கர்ளாவி தனது ஷஅவ்லியாத்து ஹரகதில் இஸ்லாமிய்யா| என்ற நூலில் ஏற்றுக் கொள்கின்றார். இவர் முஸ்லிம் சமூகத்தை அங்கீகரிக்கவே இல்லை. செய்யித் குதுப், மூஸா நபியையும் இப்ராஹீம் நபியையும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்றும், மூஸா நபியை இனவெறியர் என்றும் கொச்சைப்படுத்தியவர். முஸ்லிம் சமூகத்தை அங்கீகரிக்காத இவர், எவ்வாறு முஸ்லிம் உம்மத்தின் அங்கீகாரத்தைப் பெறுவார்? பெற முடியும்? சூறா அல் – இஃலாஸுக்கு விரிவுரை (?) வழங்கும் போது, அனைத்திறைவாத(அத்வைத)க் கொள்கையை பிரதிபலித்திருக்கின்றார். அல்குர்ஆன் படைக்கப்பட்டது என்றும் எழுதியுள்ளார். இவரது முகத்தில் இஸ்லாத்தின் அடையாளங்கள் கூட இருந்ததில்லை.யாரடா என்று கேட்கப்பட்ட மேதை யார்? தரீக்கா வழிபாட்டையும், ஷிர்க்கையும், ஷீஆயிஸத்தையும் ஆதரித்தவர், உமர் தில்மஸானி (மூன்றாவது இக்வானியத் தலைவர்- சினிமாத் தியட்டரில் அஸரையும் லுஹரையும் ஜம்வு செய்தவர்) சிகரட் குடித்துக்கொண்டு வந்தபோது, தடுக்கவும் – ஏவவும் மாட்டேன் என்று சொன்னவர். பல இளைஞர்களின் இரத்தத்தை வீணாக ஓட்டியவர். அவர்தான் நீங்கள் போற்றும் மாமேதை ஹஸனுல் பன்னா. P.து. என்றாலும் ஓரளவு கண்ணியமாக விமர்சித்தார். ரபீவு மத்கலி வெறிபிடித்த நாய் என்று எழுதியுள்ளாரே! இதற்கு என்ன சொல்லப் போகின்றீர்கள். மத்கலி ஒரு சமகால மாமேதை. அவரின் உள்ளத்திலுள்ள இஸ்லாத்தின் அறிவுப் பாரம்பரியத்தை ஹஸாபிய்யா தரீக்கா மந்திர சக்தியால் பன்னா கடத்திவிட்டாரா? உலக அதிசயம்தான். தவறான கொள்கைகளை விமர்சித்தால் இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியம் எடுபட்டுவிடுமா?தரீக்கா வழிபாட்டை அங்கீகரித்தோர்தான் மாமேதைகளா? அல்லாஹ் தனது நண்பராக்கிய இப்ராஹீம் நபியை ஒழுக்கம் கெட்டவர் என்று தூற்றியவர்கள் தான் மாமேதைகளா? இவர்களின் கருத்துககளுக்;குத்தான் கண்ணியம் கொடுக்க வேண்டுமா? இவர்களையெல்லாம் முஸ்லிம் சமூகம் எவ்வாறு அங்கீகரிக்கும்? எங்கள் கொள்கை உள்ளத்தில் செய்யித் குதுபைவிட, நபிமார்களும் ஸஹாபாக்களும் மரியாதையில் உயர்ந்து நிற்கின்றார்கள். ஏகத்துவ வாதிகளுக்கும் இயக்கவாதிகளுக்குமிடைலுள்ள வேறுபாடு இங்குதான் வெளிச்சத்திற்கு வருகிறது. ஹஸனுல்பன்னா, மவ்லானா இல்யாஸ் போன்றவர்கள் தரீக்கா சிந்தனை சார்ந்தவர்கள். இவர்கள் முஸ்லிம் உம்மத்தின் அங்கீகாரத்தைப் பெறாத, குறுகிய சில ஆதராவாளர்களை மட்டுமே கொண்ட ஜமாஅதே இஸ்லாமி, இக்வான் (ஆகுஊனு) போன்ற இயக்கங்களின் ஆதரவை மட்டும் பெற்றவர்கள். நபிமார்களை இனவெறியர்கள், ஹிட்லர் போன்ற அதிகாரத்தை வேண்டியவர்கள் என்றெல்லாம் தூற்றிய இவர்கள், சகோ. ஹஜ்ஜுல் அக்பருக்கும் அவர் தலைமை வழங்கும் ஜமாஅத்தே இஸ்லாமிக்கும், மீள்பார்வைக்கும் வேண்டுமானால், நேசத்திற்குரியவர்களாக தெரியலாம். ஆனால், ஏகத்துவவாதிகளுக்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் இவர்களைவிட பாசத்திற்கும் நேசத்திற்கும் உரியவர்களாக உள்ளனர். அதனால்தான் நாம் அல்குர்ஆனையும் நபி வழியையும் மட்டும் பின்பற்ற வேண்டும் என்கின்றோம்.கண்மூடித்தனமாக எந்த அறிஞர்களின் பின்னாலும் நாம் செல்வதில்லை. தவ்ஹீத் உலமாக்கள் தவறுவிட்டால், எப்படி ஜமாஅதே இஸ்லாமி, ஆகுஊனுகளின் தவறான கருத்துக்களை விமர்சிக்கின்றோமோ, அதேபோன்று விமர்சிக்கின்றோம். தவ்ஹீத்வாதிகளிடம் என்னவன் உன்னவன் என்ற வேறுபாடுகள் இல்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? இஸ்லாமியப் பாரம்பரியங்களை இதயத்திலிருந்து தூக்கி எறிந்துவிட்டு, மனோ இச்சைகளையும் இயக்க நலனையும் பெரிதாக மதிப்பவர்களின் வழி எங்கள் வழி அல்ல என்று உறுதியாகக் கூறுகின்றோம். முஸ்லிம் சமூக அங்கீகாரமற்றவர்களுக்காகவும் இஸ்லாத்தையும் இறைத்தூதர்களையும் அவமதித்தவர்களுக்காகவும் வாதிட்டு, அல்குர்ஆனையும் ரசூல்மார்களையும் ஸஹாபாக்களையும் அவமதிக்கும் ஈனச் செயலுக்கு நாம் ஒருபோதும் துணை நிற்கமாட்டோம்.‘குர்ஆனிய வசனங்களில் காணப்படுகின்ற அற்புதமான ஓசை நயத்தில் தன்னைப் பறிகொடுத்த அவர் அதில் காணப்படுகின்ற இசை நுணுக்கங்களை விபரிக்கின்றார். துர்மணம் தேடுவோருக்கு அது போதாதா? அவரது மூக்கு இசை என்ற சொல்லில் பட்டுவிடுகிறது. உடனே அந்த சொல்லின் கூடாத வாசம் அவரது மூக்கைத் துளைக்கிறது.’ நறுமணம் மூக்குக்குக் அடிப்பது போன்று துர்மணமும் தெரிய வேண்டும். இல்லாவிட்டால், மலத்தையும் பிணத்தையும் உண்ண மனிதன் ஆரம்பித்துவிடுவான். எனவே, நாங்கள் குறை-நிறைகள் இரண்டையும் பேசுகின்றோம். நல்லறிஞர்களிடம் நளினத் தன்மையையும் குறைமதிகளிடமும் முஸ்லிம் உம்மத்தை தவறாக வழிநடாத்தியவர்களிடமும் கடுமையான விமர்சனத் தன்மையையும் கடைப்பிடிக்கின்றோம்.தவ்ஹீத் அறிஞர்கள், ஜமாஅதே இஸ்லாமியை விமர்சிக்கும் ஒரே காரணத்திற்காக அவர்களின் விமர்சனத்தை மட்டும் குறைகாணும் நீங்கள், அவர்களின் மகத்தான நற்பணிகளை எடுத்துக் கூறியதுண்டா? ‘…குறைகளை மட்டும் தேடி விமர்சிக்கும் குணமுடையவர்கள் மேதாவித்தனமும் அகம்பாவமும் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போகின்றீர்கள். அப்படியாயின், P.து. அவர்களும் மற்றும் தவ்ஹீத் அறிஞர்களும் உரையாற்றிய பலவாயிரம் ஏஊனுகள் உள்ளன. ஆவற்றின் அத்தனை நறுமணமும் உங்கள் மூக்குக்குப்படவில்லை. பல்லின மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்ற ஒரே ஒரு உரையில் பேசப்பட்ட உங்களுக்கு பிடிக்காத சொல்லின் கூடாத வாசம் உங்கள் மூக்கைத் துளைத்துவிட்டது. உடனே! அதை விமர்சிக்க ஆரம்பித்துவிடுகிறீர்! அவ்வாறாயின் பல்லின மக்களுக்கு மத்தியில் எவ்வாறு வாழுவது என்று அருமையாக கூறப்பட்ட அத்தனை நறுமணம் கமழும் நல்லறிவுரைகளையும் விடுத்து, குறைமட்டும் தேடிய உங்களிடம் மேதாவித்தனமும் அகம்பாவமும் குடிகொண்டுள்ளது என்றுதானே உங்கள் எழுத்து மூலம் உங்களுக்கு நீங்களே சொல்லியுள்ளீர்கள்.2005ல் P.து. இலங்கை வந்த போது, பல பாகங்களிலும் பல்;வேறு தலைப்புக்களில் உரையாற்றினார். இவையெல்லாம் அருமையான, ஆழமான, தர்க்கரீதியான உரைகள். இந்த உரைகளில் அவர் ஜமாஅதே இஸ்லாமி, ஆகுஊனு என்பன மழுப்புவது போன்று, வளையாது, நெளியாது, மழுப்பாது, மறைக்காது அழுத்தமாக உண்மைகளைப் பேசினார். இதை தாங்க முடியாத சகோ. மின்ஹாஜ் இஸ்லாஹி என்பவர் மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தான் என்று அல்ஹஸனாத்தில் எழுதினார். ஆனால், இதே மின்ஹாஜ் சில வருடங்களுக்கு முன்னர் புத்தளத்தில் ஷரீஆ கவ்ன்சில் ஆநநவiபெ போட்ட போது, கற்களுடனும் பொல்லுகளுடனும் சில தடியடி ஜமாஅத் ஊழியர்களுடன் சென்று, மேடையிலுள்ள பொருட்களை உடைத்து, சேதப்படுத்தினார். கருத்தை கருத்தால் வெல்ல முடியாமல், தடியடியால் வெல்ல முனைந்த ஜமாஅதே இஸ்லாமி மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தான் என்று எழுதுவது வேடிக்கைக்குரியதாகும். கருத்தால் புரோகித இயக்கங்களை துணிவாக விமர்சித்த P.து.யை மென்மை இழந்தார் என்று எழுதுவது எவ்வளவு வக்கிரப் புத்தி நிறைந்தது? யார் மென்மையை இழந்தவர்கள். மழுப்பாது, மறைக்காது, தெளிவாக கருத்தை முன்வைத்தவரா? ரவ்டிகளுடன் இணைந்து, வுரடிந டுiபாவகளை உடைத்து, ஷரீஆ கவ்ன்சிலின் மேடையை ரணகளப்படுத்திய ஜமாஅதே இஸ்லாமியா?ஸஹாபாக்களைத் திட்டித் தீர்க்கும் ஷீஆக்களைக் கண்டித்து நீங்கள் இப்படி ஒரு கட்டுரை எழுதியதுண்டா? ஆயிஷா(ரழி)வை வேசி என்பவர்களை இயக்க அரசியல் நலனுக்காக ஆதரிக்கின்றீர்களே! அபூபக்கரை ‘காபிர்’ என்று கூறிய சாட்சாத் குமைனியின் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்று எழுத எப்படி உங்களுக்குத் துணிவு வருகிறது? ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தும் கண்ணியமிக்க தாயாக மதிக்கும் ஆயிஷா (ரழி)யை வேசி என்று எழுதிய குமைனியின் புரட்சியை மவ்தூதி : ‘இஸ்லாமியப் புரட்சிளூ அதனை ஆதரிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வாஜிப்’ என்றார். முஅவியா () அவர்களை ஏமாற்றுக்காரன், பொய்யன், நயவஞ்சகன் என்றெல்லாம் மவ்தூதி திட்டியுள்ளார். மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்! யாரின் உள்ளத்திலிருந்து அல்லாஹ் இஸ்லாமியப் பாரம்பரியத்தை அகற்றியுள்ளான்? வஹியை எழுதிய முஅவியா (), மற்றும் அம்ர் () போன்ற ஸஹாபாக்களைவிட, சமகாலத்தில் தோன்றிய, கலிமாவுக்குச் சரியான விளக்கம் தெரியாத, அரைகுறை இஸ்லாம் தெரிந்த இயக்கவாதிகள், உங்கள் மதிப்புக்கும் மாண்புக்கும் உரித்தானவர்களாகிவிட்டார்கள்! இது ஏன்? இஸ்லாத்தைவிட இயக்கம் பெரிதானதால் தானே?இஸ்லாத்தை விட, பன்னாயிஸத்தையும் மவ்தூதியிஸத்தையும், இயக்க நலனையும் பெரிதாக மதிப்பவர்களின் பின்னே செல்பவர்கள் யார்?•    கலிமாவுக்குச் சரியான விளக்கம் தெரியாதவர்கள்.•    நபிகளாரின் ஸூன்னாவில் ஏற்றத் தாழ்வு பார்ப்பவர்கள்.•    ஸூன்னாவுக்கும் பித்அத்திற்கும் வேறுபாடு தெரியாதவர்கள்.•    ஷிர்க்-பித்அத் என்பவற்றை சில்லறைப் பிரச்சினை என்பவர்கள்.•    நபியின் ஹதீஸ்களைவிட தமது இயக்க இஸ்தாபகர்களின் கருத்துகளுக்கு முதலிடம் வழங்குபவர்கள்.•    சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட ஸஹாபாக்களைக் காபிர்கள் என்று திட்டும் ஷீஆக்களை வாயாரப் புகழ்ந்து, ஆதரிப்பவர்கள்.•    அரசியல் அதிகார ஆசை பிடித்தவர்கள். அதற்காக, பல நல்லறிஞர்களைக் கொலை செய்தவர்கள்.•    அரசியல் அதிகாரத்திற்காக அனைத்து வழிகெட்ட இயக்கங்களுடனும் நளினத்தன்மை கடைப்பிடிப்போர்.•    ஷிர்க்-பித்அத்,வழிகேட்டு இயக்கங்களை விமர்சிக்கும் தவ்ஹீத்வாதிகளுடன் மட்டும் கடுமை காட்டுவோர்.மொத்தத்தில், இவர்கள் அல்குர்ஆன் – ஹதீஸ் பற்றிய ஆழமான அறிவற்ற, ஜிஹாத், அரசியல் பற்றிய மேலோட்டமான சில விடயங்களை மட்டும் தெரிந்த உணர்ச்சிக் கோஷதாரிகள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் கூட, எந்த அரசியல் மாற்றத்ததையும் இதுவரை ஏற்படுத்த முடியாத வரண்டுபோன நிலையிலுள்ள இவர்கள்தான், 8மூ முஸ்லிம்கள் வாழும் இலங்கையில், நளைக்கழித்து இஸ்லாமிய கிலாபத்தைக் கொண்டுவருவோம் என்று, கற்பனை உலகில் சிறகு இல்லாமல் பறந்து கொண்டு, தானும் ஏமாந்து, அல்குர்ஆன் – ஹதீஸ் தெரியாத அப்பாவிகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.சகோ. ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே! நீங்கள் இயக்க சிந்தனைவாதிகளுக்காக வாதாடி, கட்டுரை எழுதி அல்லாஹ்வையும் அல்குர்ஆனையும் அவனது தூதர்களையும் ஹதீஸ்களையும் அகவ்ரவப்படுத்தாதீர்கள். நீங்கள் நேசிப்பவர்களைவிட, இறைத்தூதர்களும் ஸஹாபாக்களும்; கண்ணியமானவர்கள் என்று எண்ணவாவது முயற்சி செய்யுங்கள். அப்போது, அல்லாஹ் அருள் செய்வான், கண்ணியப்படுத்துவான். இல்லாவிட்டால் இழிவுதான் மிஞ்சும். நீங்கள் குறிப்பிட்ட சிலரின் பெயர்களைவிட, தரமான அறிஞர் பட்டியல் உள்ளது. அந்த இஸ்லாமிய அறிஞர்களின் தூய சேவைகளையும் எடுத்துச் சொல்லுங்கள்.சகோ. ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே! இஸ்லாத்திற்காக வாதிடுங்கள். இயக்கத்திற்காக வாதிடாதீர்கள். குர்ஆனையும் ஹதீஸையும் சாதாரண மனிதர்களின் கருத்துக்களைவிட மேன்மையானதாக மதியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்பாலித்து, மார்க்க ஞானத்தையும் அதில் தெளிவையும் வழங்குவானாக!.

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP